Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:59:08 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12252
#KOTW12252
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 4, 2013
எரியாத தெரு விளக்குகள்: 16ஆவது வார்டிலும் விளக்கேற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3566 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பலமுறை முறையிட்டும் நீண்ட காலமாக தெரு விளக்குகள் எரியாததாகக் கூறி, காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், இன்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. காவல்துறை முன்னனுமதி பெறாததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள மின் கம்பத்தில் ஹரிக்கேன் விளக்கு ஏற்றப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் - இன்று மாலை 04.30 மணியளவில் நிகழ்விடம் வந்திருந்தார். ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், தான் சார்ந்த 16ஆவது வார்டுக்குட்பட்ட தைக்கா தெரு மற்றும் மருத்துவர் தெருவிலுள்ள மின் கம்பங்களில் திடீரென ஹரிக்கேன் விளக்கு ஏற்றினார். சில நிமிடங்களில் அவ்விளக்குகள் அகற்றப்பட்டிருந்தது.













படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்

மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 09:01 / 05.11.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SM Ali (Jiangmen ) [05 November 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 31216

அரிக்கேன் விளக்கில் படித்துதான் பலபேர் மேதைகள் ஆகி இருக்கிறார்கள் . ஒருவேளை , அரிக்கேன் விளக்கை மீண்டும் கொண்டுவந்தால்தான் நமதூரிலும் மேதைகளை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் தெரு விளக்கில் ஆர்வம் காட்டவில்லையோ என்னவோ !

உலகம் நியான் விளக்கு , LED என்று முன்னேறி கொண்டிருக்கும் இந்தவேளையில் , நமது நகராட்சி சாதாரண பல்பு , அரிக்கேன் விளக்கு என்று பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது . என்று அகலுமோ இந்த அவல நிலை .

எரிகிறது உள்ளம் . எரியாதது தெருவிளக்கு .

Vilack SMA .
ஹேதாங் , ஜியான்க்மேன் , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாட்டிய அரை மணி நேரத்தில் மின் வாரிய ஊழியர்கள் அதை கலட்டி விட்டு போனதாக தகவல்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [05 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31219

நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் 16வது வார்டு உறுப்பினரின் சின்னமான விளக்கு சின்னத்தை மறந்த மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்துவது போல் உணருகிறேன்..!

விரைவில் தமிழகத்தில் மின் வெட்டு சரியாகும் என தாங்கள் இணைந்துள்ள (அ தி மு க) ஆளும் கட்சியின் தலைவர் (அதாவது உங்கள் கட்சியின் தமிழக முதல்வர் அம்மா) சட்டசபையில் அறிவித்துள்ளார்... மேலும் நீங்கள் சார்ந்து இருக்கும் அம்மாவின் ஆட்சியில் அணைத்து நகராட்சிக்கும் விரைவில் அதிக அளவில் மின் விளக்குகள் வாங்க உங்கள் தலைவி அம்மா அவர்கள் உத்தரவிடுவார்கள் என எதிர்பார்ப்போம்...! கொஞ்சம் பொறுமையாக இருங்கள்... சமீபத்தில் தான் நகர்மன்ற தலைவர் தாங்களின் (அ தி மு க) கட்சியில் இணைந்துள்ளார்கள்... நீங்களோ அவருக்கு முன்பே முன்னாள் அமைச்சர் முன்னிலையில் ஆளும் கட்சியில் இணைந்து இருந்தீர்கள்.. அப்போது இது விசியத்தில் நகராட்சியில் மக்களுக்காக அக்கறை (தீவிரம்) காட்டி இருக்கலாமே..?

சரி.. சரி இனி மின்கம்பத்தில் இப்படி விளக்கை மாட்டாதீர்கள்..! காரணம்...! நீங்கள் மாட்டியதை.. மாட்டிய அரை மணி நேரத்தில் மின் வாரிய ஊழியர்கள் அதை கலட்டி விட்டு போனதாக தகவல்...! ஆகையால் மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பத்தை தவிர்த்து அதன் அருகில் தனியாக ஒரு கம்பை நிறுத்தி அதில் விளக்கு ஏற்றுங்கள்.. உங்கள் வார்டு மக்களுக்காக நீங்கள் ஏற்றும் மண்ணெண்ணெய் விளக்கு மின் விட்டு நேரத்தில் உதவியாக அமையும்... உங்கள் வார்டு மக்களும் பயன் பெறுவார்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [05 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31220

கடல் காற்று வாங்க வந்த 16வது வார்டு உறுப்பினர், நிகழ்விடம் குறையை கண்டு உணர்ச்சியெழுந்து தனது பகுதி குறைகளை சுற்றி காட்டி இருக்கிறார்.

குறை உள்ள பகுதி வார்டு உறுபினர்களே, அவரவர் பகுதி மக்களை ஒன்றுதிரட்டி நகரமன்ற முன் முற்றுகையிட்டு போராடுங்கள். மக்கள் சக்திதான் வெல்லும். நல்ல தீர்வும் கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohmed younus (chennai) [05 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31223

தனது வார்டில் ஒரு பணி நடந்தால் வேட்டிய மடிச்சிகிட்டு வளைந்து, வளைந்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும், தொந்தரவு என்றால் பிறர் மேல் பழி போடுவதும் சதா இந்தியா அரசியலின் நெடி.

இதே தீவிரவாத நக்சலைட் கோட்டை என்றால் விளக்கிற்கு பதில் சம்பந்தப்பட்ட ஆட்களை ஏற்றி இருப்பார்கள்.

சமூக அக்கறை, அதிகப்படியான விழிப்புணர்வு, சமூக தளங்களின் தாக்கம், அர்பணிப்பு என்ற மெச்சத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டாலும், இவை எல்லாம் வளர்ச்சி திட்டங்களையும், பணிகளையும் முடுக்குவதற்கா என்ற ஒரு சிறிய "கம்யூனிச " சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ஆளும் மாநிலங்களில் "எல்லா அறிவும்" இருக்கும், ஆனால் எதுவும் நடக்காது. வீதிக்கு வீதி போராட்டமும், வீடு தோறும் போராளியும் இருப்பார். ஆனால் பிரச்சனைக்கு "தீர்வு" இருக்காது. காயலிலும் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற ஒரு சிறிய சத்தம் கேட்க தொடங்கி உள்ளது.

ஆரம்பம் முதலே எதிர் தரப்பு மேல் ஒவ்வொரு தரப்பிற்கும் ஏற்பட்ட தவறான கண்ணோட்டமும், உள்நோக்கு பார்வையும் இந்த நிலைக்கு காரணம். இது களையப்படாத வரை எல்லாம் கானல் நீர்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by netcom buhari (chnnai) [05 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31227

இதை தான் ஈ அடித்தான் காப்பி என்பதோ ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [05 November 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31228

மெம்பருக்கு வாழ்த்துக்கள். போராடினால் தான் வழி கிடைக்கும் என்பதை நமது நகரா மன்றம் பாதை அமைகிறது. வாழ்க நகராட்சி மன்றம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்) [05 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31229

மங்குனி அதிகாரிகளை மாற்றி, நல்ல அதிகாரிகளை நம் ஊருக்கு தந்து அருள் புரிவாயாக யா அல்லாஹ் என்று தான் துஆ கேட்க வேண்டும்.

ஆக மொத்தம், பல காலமாக விற்பனை ஆகாத மண்ணெண்ணெய் விளக்குகளில் சில விற்பனை ஆகி விட்டன.

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Rilwan (Austin, TX) [06 November 2013]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31238

இந்த வேலைகளை செய்யத்தானே நகரமன்ற தலைமை இருக்கிறது . இதை விட்டு அரசியல் கட்சியில் சேருவது பாராட்டு கூட்டங்களில் போஸ் கொடுப்பது .. நகர் மன்ற தலைவர் தான் தேர்ந்து எடுக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து விட்டாரோ என நினைக்கதொன்றுகிறது . மக்களுக்கு சேவை என மனது வைத்து விட்டால் image பற்றி கவலைப்படக்கூடாது . அரசியல் பின்புலத்தை பற்றி யோசிக்ககூடாது . மக்களுக்காக தெருவில் இறங்கி செயல்பட வேண்டும் . அப்படி பற்ற தலைமை இல்லை .. தன்னுடை அரசியல் செல்வாக்கை பற்றி கவலைப்படும் தலைமையால் சிறந்த தலைமைத்துவம் தர முடியாது .

தற்போதைய நகர் மன்ற தலைவர் தான் தேர்ந்து எடுக்கப்பட்டதன் நோக்கத்தை நினைவில் கொண்டு புகழ் மயக்கத்தில் இருந்து விடுபட்டு மக்கள் சேவையை மீண்டும் கையில் எடுக்க வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. விளக்கு ஏற்றும் போராட்டம் எல்ல பகுதிகளுக்கும் பரவட்டும்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [07 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31263

சகோதரர் முத்து இஸ்மாயில் , "விரைவில் தமிழகத்தில் மின் வெட்டு சரியாகும் என தாங்கள் இணைந்துள்ள (அ தி மு க) ஆளும் கட்சியின் தலைவர் (அதாவது உங்கள் கட்சியின் தமிழக முதல்வர் அம்மா) சட்டசபையில் அறிவித்துள்ளார்... மேலும் நீங்கள் சார்ந்து இருக்கும் அம்மாவின் ஆட்சியில் அணைத்து நகராட்சிக்கும் விரைவில் அதிக அளவில் மின் விளக்குகள் வாங்க உங்கள் தலைவி அம்மா அவர்கள் உத்தரவிடுவார்கள் என எதிர்பார்ப்போம்...! " (C&P) .

தம்பிக்கு, விளக்கு எரியாததற்கு காரணம், மின்வெட்டு மற்றும் மின்விளக்கு பற்றாக்குறை இல்லை. மாறாக, லைட் மாட்டுவதற்கு ஊரில் 1 நபர் மட்டுமே உள்ளது தான் காரணம் தெரியாது போல.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved