Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:58:15 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12194
#KOTW12194
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 28, 2013
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு! அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!! (தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5628 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னையில் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார்.

தமிழக முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.





அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் இச்சந்திப்பின்போது உடனிருந்தார்.

இச்சந்திப்பின்போது, நகர்மன்றத் தலைவருடன் அவரது கணவர் எம்.எம்.ஷேக் அப்துல் காதிரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[Administrator: தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது @ 1:45 pm / 28.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S Nawas (Singapore) [28 October 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31019

வாழ்த்துக்கள். என்றோ நடந்திருக்க வேண்டியது. சிலரின் தலையீட்டால் தடைபட்டது. இன்னும் மூன்று வருடத்தில் உங்கள் குரல் பாராளுமன்றத்தில் நிச்சயமாக ஒலிக்கட்டும்.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஓட்டு போட்டா மக்களுக்கு நல்ல ஆப்பு
posted by Muthu Magdoom VSH (Jeddah) [28 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31020

இனிமேல் அடுத்த தேர்தல்ல நமது ஊரில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஒருங்கிணைந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சரியான பாது காப்பு.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [28 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31021

சரியான முடிவு தான என்று நாம் சொல்லுவதற்க்கில்லை.

ஆனால், பாவம் அவர்களுக்கு இதுவே சரியான ஒரு பாதுகாப்பு என்று சொல்லலாம். மதிப்பிற்குரிய தலைவி அவர்களுக்கு நகர்(ரா)மன்ற உறுப்பினர்கள் கொடுக்கும் தொல்லைகளில் இருந்தும் இதுவே சரியான ஒரு பாதுகாப்பு என்று சொல்லலாம். இன்ஷா அல்லாஹ் இனியாவது ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்....

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mofa (kayalpatnam) [28 October 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 31022

வாழ்த்துக்கள் எனதருமை தலைவியே...

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது...இனி உங்கள் குரல் நியாயத்தின்பால் தடையில்லாமல் நடக்கும் இன்ஷா அல்லாஹ்... பொறுமையாளரிடம் இறைவன் இருக்கிறான் என்ற உதாரணத்திற்கு உங்களை எடுத்துகாட்டாக சொல்லலாம்...

தடையேதும் வந்தாலும் அது இறைவனின் புறத்தில் இருந்து வந்தது இறைவன் என்ன விசயமானாலும் நன்மையை தான் நாடுவான் என்று சொல்லும் நீங்கள் இன்று பொறுமையோடு சாதித்துவிட்டீர்கள் இன்ஷா அல்லாஹ் இனி நல்லது நடக்கும் இந்த காயல்மாநகரத்திற்கு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...நல்லதொரு முடிவு
posted by netcom buhari (chennai) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31025

சரியான நேரத்தில் சரியாக எடுத்த முடிவு, உங்கள் பனி தொடரட்டும் உங்களுக்கு எபோழுதும் அல்லாஹு துணை இருப்பான்.

என்றும் உண்மை வெல்லும் , பொய்மை அழியும் இது தான் உண்மை வாழ்க ஜனநாயகம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by izzadeen (chennai) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31026

salam, adil statement correct, so next tiruchendure ADMK MLA ready. shaik matchan correct decision.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மாப்பு வச்சுட்டாங்கய்யா...... ஆப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு....!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31027

ஏற்கனெவே ஒன்பது அதோடு சேர்த்து இப்ப பத்து அத்தனையும் அத்தனயும் இனி முத்து. சித்து விளையாட்டுக்கள் இனி ரத்து.சரியான நேரத்தில் சரியான முடிவு.

சபாஷ்! நகர்மன்றம் இனி களைகட்டும்.... வாழ்த்துக்கள்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Cnash (Makkah ) [28 October 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 31028

என்ன செய்ய எவ்வளவு தான் பொறுக்க முடியும்!! சிலர் திருந்துவார்கள் ஊருக்கு ஏதும் செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஒன்றும் நடக்கவில்லை மாறாக வவுந்துவிடுவேன், அறுத்துவிடுவேன் என்ற குரல்கள் தான் ஒலித்து கொண்டு இருக்கிறது .. இதை விட்டு தற்காத்துகொள்ள ஒரு அரசியல் அடைக்கலம் கண்டிப்பாக தேவைபடுகிறது!!! எடுத்த முடிவு காலத்தில் தேவையை கருதி தான் என்றும் அறிய முடிகிறது .. வாழ்த்துக்கள்!!! அதற்காக அம்மா சரணம்! அம்மாவே அகிலம் என்ற ஆதாய அரசியல்வாதி அளவிற்கெல்லாம் போகாமல் அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுகிறோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by SHAIK SALAHUDEEN (DUBAI) [28 October 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31029

வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பதவியை ராஜினாமா செய்
posted by Abdul majeed (Bangalore) [28 October 2013]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 31031

கட்சியில் சேருவது என்றால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்று இருக்க வேண்டும் . அடுத்த தலைவர்/உறுப்பினர் தேர்ந்து எடுக்கும் முன் எந்த கட்சியுளும் பதவி காலத்தில் சேர மாட்டேன் என்று உறுதி மொழி தந்த பின்பே மக்கள்/அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Sabeer (Now @ Mumbai) [28 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 31032

நல்லதொரு முடிவு. பல நாட்களாக முயற்சி செய்தது தற்போது மாற்றத்தின் (அதாங்க. மாவட்ட செயலாளர்) காரணமாக கைகூடியுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் ஊருக்காக நல்லது செய்ய துரிதமாக செயல்படுங்கள். இந்த வவுந்துடுவேன். நாக்கை அறுத்துடுவேன்! இனி ஜாக்கிரதை. அடக்கி வாசியுங்கள் உறுப்பினர்களே!.

என்ன சிலர் கேள்வி கேட்பார்கள். சுயேட்சையாக நீங்கள் போட்டியிட்டதால் தானே நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் என்று?

நீங்கள் எந்த அமைப்பையும் சார்ந்து நிற்கவில்லை. தனித்தே போட்டியிட்டீர்கள். உங்களை நம்பித்தான் வாக்களித்தார்கள். ஆதலால் உங்களை எந்த அமைப்பும் கேள்வி கேட்க இயலாது. ஊரின் ஒட்டு மொத்த ஜமாஅத்தின் கூட்டமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் அமைப்பின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி கண்ட வஹிதா அவர்களும் சுயேச்சையாகத் தான் போட்டியிட்டார்கள். பின்னர் ஊரின் நலன் கருதி அதிமுகவில் சேரவில்லையா!? அதுபோல ஊரின் நன்மைக்காகத் தான் இந்த முடிவு எடுத்துள்ளீர்கள் என்பது எல்லாருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி என தௌ;ளத் தெளிவாக தெரியும். இனி வெற்றியை நோக்கி பீடு நடை போடுங்கள். உங்கள் குரல் பலமாக ஒலிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வீர வசனம் பேசிய வீராதி வீரர் எங்கே?எங்கே
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanpu) [28 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31033

இந்த ஊரில் எங்களது கட்டளைக்கு அடிபணியாமல் அலட்சியம் செய்து விட்டு ஆட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் ஆபிதாவே, ஒரு வேளை தப்பித்தவறி நீ வென்று, அந்த மகிழ்ச்சியில் நீ தமிழக முதல்வரை சந்திக்க சென்றால், யார் வந்திருக்கிறார் காயல்பட்டண நகராட்சி தலைவி ஆபிதாவா? அவரை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று எங்கள் புரட்சிதலைவி அவர்கள் ஆணை இடுவார்கள், என்று வீர வசனம் ஊர் மக்கள் பொது மேடையில் ஒரு "காயல்"வீரர் கனல் பறக்க பேச, அதை அந்த மேடையில் உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களும் மற்றும் மேடையில் உள்ளவர்களும் கைதட்டி ஆராவாரம் செய்த காட்சி என் மனக்கண் முன் காட்சியாக வருகிறது,

அப்படி வீர வசனம் பேசிய வீராதி வீரர் எங்கே?எங்கே????
யாராவது பார்த்தல் சொல்லுங்கள்.

மேடை கிடைத்து விட்டால் எதுவென்றாலும் பேசிவிடலாம் அதை இழிச்சவாயன்களாக காயல்மக்கள் கேட்ப்பார்கள் என்ற ஏளன நினைப்பா?

அந்த காலம் எல்லாம் கடந்தேறி விட்டது.இன்று விழிப்புணர்வு விளிம்பில் வாழ்பவர்கள் கண்ணியமிகு காயல்மக்கள், நினைவிருக்கட்டும். சட்டியை திறந்து பாரும் பருப்பு இன்னும் வேகவில்லை!

அன்புத் தலைவி ஆபிதா அவர்களே,உங்களின் தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தையும், அல்லாஹ்வின் துணையையும், ஊர் அக்கறையுள்ள உண்மையானவர்களின் ஒத்துழைப்பையும் பெற்ற நீங்கள் எக்கட்சியிலும் சேராமல் நகராட்சியை இறுதிவரை நடாத்தி வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் உங்களுக்குள்ள நெருக்கடிக்காகவும், ஒருபடி மேலே சொன்னால் உங்கள் உயிர் பாதுகாப்பு கவசதிற்க்காகவும் இம்முடிவை மேற்க்கொள்ளக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிந்தேன். சரி, தேர்ந்தடுத்த முடிவு சரிதான், ஆனால் தேர்ந்தெடுத்த கட்சிதான்?????

இதற்க்கு முன்னரும் சொல்லி இருக்கிறேன் இப்பொழுதும் சொல்கிறேன், நீங்கள் இணைந்திருக்கும் கட்சின் தலைவியின் தலையீட்டால் நம் மாமன்றதிம் மூலமாக நம் முஸ்லிம் மக்களுக்கோ, நம் புனித மார்க்கதிற்க்கோ எள் அளவோ எள்முனை அளவோ பாதகம் ஏற்பட தாங்கள் காரணமாக இருப்பீர்களேயானால், மன்னிக்கவும் உங்களை எதிர்க்கும் முதல் ஆள் இந்த ஆஅதம் சுல்தான் தான் என்பதை மறுமுறையும் நினைவுக்கு கொண்டு வருகிறான். அல்ல்ஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [28 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31034

உண்மை வென்றது. வாழ்த்துக்கள்.

முந்தைய அமைச்சர் சி.தா. முன்னிலையில் நான் சார்ந்த அதிமுக இணைக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள் யாருக்குமே இதுவரை உறுப்பினர் அட்டை கிடைக்கவில்லையே?

அம்மா கைப்பட உறுப்பினர் அட்டை வாங்கிய நகரமன்ற தலைவிதான் உண்மையான தலைவி. இனி களைகட்டும் நகரமன்றம். நகரில் நல்லவைகள் நடக்கபோகுது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வாழ்த்துக்கள்.....
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [28 October 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31037

நகராட்சி தலைவி அவர்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Solukku.ME.SyedMd Sahib. (QATAR) [28 October 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 31038

அஸ்ஸலாமுஅலைக்கும். அல்லாஹ் மிக பெரியவன். மக்ருன் மகுருன் குப்பரா. ஒரு வார்டு உறுப்பினர்கள் கூட AADMK வராமல் சூழ்ச்சி செய்தார்கள். முடிவு? வாழ்த்துக்கள். துடரட்டும் உங்கள் வேலை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by PIRABU MUJEEB (DUBAI) [28 October 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31039

சபாஷ் ,எல்லோரும் எதிர் பார்த்தது தான் இனியும் மாறாமல் இர்க்க என்னுடைய நல வாழ்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மீள் பார்வை!
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா-கத்தார்) [28 October 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31040

செய்தி: நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 17 உறுப்பினர்கள் மனு!

அரசியல் சாக்கடை
நல்லாத் தான் .......

வெல்வது, துணைத்தலைவர் சார்ந்த தி.மு.க.வா? (ஏரல் ரமேஷ் கூறியது போன்று) தலைவியை நகராட்சித் தலைவியாக வெற்றியடைய செய்த அ.தி.மு.க.வா? காலம் தான் விடை கூறும்! பொறுத்திருந்து பார்ப்போம்! அல்லவை அகன்று நல்லவை நிகழ்ந்தால் அனைவர்க்கும் நலமே!

posted by கத்தீபு (Kayal patnam) [09 March 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 26124

ஒரு வழியாக, இன்று நிறைவேறி விட்டது. [ஜெதிமுக என்னும்] ஊழலின் பிறப்பிடத்திற்குள்ளேயே – தமிழகத்தையே தள்ளாட்டத்தில் வைத்திருக்கும் மதுவின் பீப்பாய்க்குள்ளேயே நுழைந்து விட்டீர்கள்! ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தே ஊழலையும், மதுவையும் நீங்கள் தான் முற்றிலுமாக ஒழித்தொழிக்க வேண்டும் என்றெல்லாம் இங்கு யாரும் assignment கொடுக்கப் போவதில்லை. உங்கள் வரம்பிற்குட்பட்டு நகர்நலனைத் திறம்பட செயல்படுத்த அரசியல் உதவிகளை முறையாகப் பயன்படுத்தி சாதித்தால் போதும்!

சந்தர்ப்பவாத வேடதாரிகளின் கூனிக் குறுகுதலும், காலில் வீழ்தலும் சகஜமாகி விட்ட இந்த அரசியல் களத்தில், நீங்கள் தலை நிமிர்ந்து நடந்து, வெற்றி நடை போடுங்கள்! நீங்கள் அரசியலிலும் சாதனை புரிய வாழ்த்துக்கள் சகோதரி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Fareed (Dubai) [28 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31041

Salam

This is not a good sign for KPM. AIADMK is fully supporting BJP and their alliance and in particularly Mr.Modi. Meaning that KPM peoples are supporting BJP and Mr.Modi indirectly


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by V. Syed Mohamed Ali (Zibo , Shandong , PRC) [28 October 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 31043

அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

ஊர் நன்மையை நாடி இதை செய்தேன் என்று சகோதரி நினைத்தால் அது புத்திசாலித்தனம் .

மாறாக தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சியில் இணைந்தேன் என்று நினைத்தால் அது அவரது முட்டாள்தனம் . ஏனெனில் ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றவேண்டியது அரசின் கடமை. இந்த அரசு மட்டுமல்ல , உலகின் எந்த அரசானாலும் தனது நாட்டின் மக்களை காப்பாற்ற முனைப்பாகவே உள்ளது .

தலைவியும் , ஆளும் கட்சியில் இணைந்த ஒருசில மன்ற உறுப்பினர்களும் தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது சுயேட்சையாக நின்றுதான் வாக்கு கேட்டார்கள். கட்சி சார்பாக வந்திருந்தால் சூழ்நிலையை பொருத்து நிலைமை மாறி இருக்கலாம் .

ஆளும் கட்சியில் சேர்ந்தால்தான் சாதிக்க முடியும் என்று நினைப்பவர்கள், அடுத்த தேர்தலில் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் "குரங்குத்தாவு" தாவுவார்களோ ?

தலைவிதான் ஏற்கனவே ஆளும் கட்சியில் சேர்ந்ததாக செய்திகள் வந்ததே. இப்போது மீண்டும் இணைந்தார் என்று செய்தி . குழப்பமா இருக்கே. ஒருவேளை அப்போது இணையும்போது போட்டோக்களும் TV செய்தியும் இருந்திருக்காது . அதனால்தான் இப்போது விளம்பரத்துடன் ஒரு இணைப்பு .

Zibo , Shandong , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (Riyadh Saudi Arabia) [28 October 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31046

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி vabarakkaaththuhu

இறையருள்நிறைக

அல்ஹம்துலில்லாஹ் தாமதமோ, துரிதாமோ நடந்ததும், நடப்பதும், இன்ஷாஅல்லாஹ் நடக்கவிருப்பதும் நன்மைக்கே நல்லதைநாடுவோம் இறைவன் க்ஹைரைநாடுவான்,தமிழக முதல்வர்அவர்களை இல்லத்தில்சந்தித்து உள்ளத்திலும் கழகத்திலும் இடம்பிடித்துள்ள நம் நகரத்தலைவி அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைவோம். அத்துடன் இடம்தந்த தமைழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகூறுவோம் ஜஃஜாக்கல்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

இறைவன்மிகப்பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. காலத்தின் கட்டயாம்... வாழ்த்துக்கள் !!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [28 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 31049

கடந்த ஜூனில் முதல்வர் அவர்கள் சென்னை மாநகராட்சி அடாவடி கவுன்சிலர்கள் மீது கமிஷன் மோசடி, உதவித் திட்டங்களில் ஊழல், காண்ட்ராக்ட் முறைகேடுகளுக்காக தன் சாட்டையை கடுமையான முறையில் சுழற்றியதை போன்று (கடந்த இரண்டு வருடமாக செயலற்று போன ?) நமது நகராட்சியிலும் சுழற்ற எத்தனை நொடிகள் எடுக்கும் என்பதனை கூட அறியாதவர்களா நாம்???

http://tamil.oneindia.in/news/2012/06/20/tamilnadu-jayalalithaa-warns-corrupt-admk-councillors-156073.html

இனி நல்லதே நடக்கும் என்று மனம் உறுதியாக நம்புகின்றது. அதற்கு இன்னொரு காரணம்... "உறுப்பினர்களை மிரட்டும் வேலையை இத்தோடு நிறுத்துங்கள். அவர்கள் முன்னர் மாதிரி, நகர்மன்றத்தில் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள்." என்ற உறுதியை & நம்பிக்கை தரும் வார்த்தைகளை கருத்தாக ஒரு சகோதரர் முந்தைய செய்தியில் பதிந்திருந்தார்.

காலம் தான் இதற்கு பதில் சொல்லும் என்றாலும்... நடப்பைவகள் அனைத்தும் நமதூருக்கு நன்மை பயிற்கும் வண்ணம் இறைவன் ஆக்கி வைப்பானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by kudack buhari (kuala lumpur) [28 October 2013]
IP: 118.*.*.* Malaysia | Comment Reference Number: 31055

அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மனம் ஒப்பவில்லை. ஏன் இந்த முடிவு, யாரைகண்டு பயம்,(அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்கு யார் அடைக்கலம் தரமுடியும் ) வீர பெண்மணியாக உங்களை சித்தரிக்கும் சிலரின் வலையில் வீழ்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறன், முஸ்லிம் லீகை தவிர்த்து பொதுவாக நம் நாட்டின் எந்த அரசியல் கட்சியும் நம் சமுதாய மக்களை வெறும் பகடை காயாகத்தான் உருட்டி விளையாடுகிறார்கள் அது போன்ற ஒரு கட்சியில் நீங்களும் சேர்ந்து இருகின்றீர்கள் என்று நினைக்கும் போது வெறும் வருத்தமே மிஞ்சுகிறது,

இன்னும் ஆறு மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல், ஒருவேளை இங்கே வெற்றிபெறும் நீங்கள் சார்ந்த கட்சியின் ஓட்டுக்கள் அனைத்தும் நரபலி மோடிக்கு சமர்ப்பணம் ஆகும் ,அதற்கு நீங்களும் துணை போவீர்கள? இந்த கேள்வி நகராட்சி தலைவி யான உங்களுக்கு மட்டும் அல்ல கட்சியில் இருக்கும் ஒவ்வொரு நம் நகராட்சி உறுபினர்களுக்கும் சேர்த்துதான் ,உங்களுக்கு கட்சிதான் வேணும் என்றால் முஸ்லிம் லீகில் சேர்ந்து பணியாற்றுங்கள் ,

*************************

எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கட்டகாகாவை போல அம்மாவை காணோம் ஆட்டு குட்டிய காணோம் நு கத்தி பிரயோஜனம் இல்லை.
*************************


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...அப்பாடா....
posted by OMER ANAS (DOHA QATAR..) [29 October 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 31057

அப்பாடா பக்கு பக்குன்னு இருந்துச்சு(மனம்)எல்லோருக்கும். ஒரு வழியா எல்லாம் நல்லபடி முடிஞ்சாச்சு! வாழ்த்துக்கள்! சும்மா சென்னைக்கு போய் வந்தாலே நம் பிள்ளைகள் முட்டாய் தின் பண்டங்களுக்கு அம்மாவின் வருகைக்காக காத்திருக்கும். நீங்களோ பெரியம்மாவையே பார்த்து இருக்கீங்க. வரும் போது ஊர் நலனுக்காக நிறைய திட்டம் கேட்டு வாங்கி வாங்க!

இன்ஷா அல்லாஹ் விரைவில் அஇ அ தி மு க சார்பில் MEGA (மகா) வாழ்த்து பொதுக் கூட்டம் மற்றும், தலைவியின் பொன்னான சாதனை விளக்க கூட்டமும் நடைபெறும் என்று நாம் எதிர் பார்ப்போம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. அன்று - இன்று நடுநிலை பார்வை தேவை.... மஞ்சள் காமாலைக்கு மருந்துண்டு... !
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31061

அன்று அணைத்து ஜமாஅத் கூட்டமைப்பு என்று தன்னை தானே சொல்லி கொண்டு இருக்கும் ஐக்கிய பேரவையின் சார்பாக பொது வேட்பாளராக நகர்மன்றதிற்கு அறிவிக்கபட்ட - அனுப்பப்பட்ட திருமதி வகீதா சின்ன தம்பி அவர்கள் அன்று ADMK இல் இணைந்தார்கள்...! இன்று அமைப்புசாரா சுயேச்ச வேட்பாளர் திருமதி ஆபிதா சேக் இன்று ADMK இல் இணைந்துள்ளார்கள்...! இருவருக்கும் பாராட்டுக்கள்...

காயலின் பசுமை தலைவி அவர்கள் தமிழக புரட்சி தலைவி அம்மா அவர்களின் கட்சியில் இணைந்துள்ளது வரவேற்க வேண்டியது...!

நகரில் தழைத்து வந்த ஆதிக்க விஷ மரத்தின் வேர்களை அடிவேரோடு பிடிங்கி எரிந்து ஜனநாயக பசுமை செடிகளுக்கான விதைகளை 2011ஆம் ஆண்டு இறுதியில் நகரில் தூவிய நகரின் தூய நகர்மன்ற தலைவி ஆபிதா சேக் அவர்களே...!

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கிறேன்...

என்றும் நடுநிலை பார்வையோடு - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. வாழ்த்துக்கள்.....
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [29 October 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31066

ஐக்கிய பேரவை சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னால் நகரமன்ற தலைவி அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துகொண்டார்கள்.... அதற்காக அவர்கள் கூறிய காரணம் இதோ....

“எனது பதவியின் முதல் ஆறு மாதங்களில் ஒரு சுயேச்சை பேரூராட்சித் தலைவராக இருந்து கொண்டு நமது நகருக்காக அதன் மக்களுக்காக எந்த ஆக்க பூர்வமான பணியையும் செய்ய முடியாமல் தவித்தேன். நிறைய யோசித்தேன். அதன் விளைவாக 2002-ம் ஆண்டு ஜுலை 14ம் தேதி முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து என்னை அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டேன்.”

http://kayalpatnam.com/shownews.asp?id=659

இதே போன்று இன்றைய நகர் மன்ற தலைவி அவர்களும் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார்கள்.... அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by seyed ibrahim (yanbu ,ksa) [29 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31073

ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் போட்டி போட்டு ஜெயிச்சி ஆஇஆதிமுக வோ அல்லது கிகிகோ மக்கிக்காவோலயோ போய்ச் சேரட்டும்.அப்போது பார்க்கலாம் யார் உதவியோட தலைவி ஆகலாம்னு....கனவு பெய்பட வேண்டும் 'தலைவி 'கனவு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved