Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:13:06 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12142
#KOTW12142
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 20, 2013
டி.சி.டபிள்யு.விடம் கேட்டால் ஊரையே வெளிச்சமாக்குவர்! அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3711 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அக்கட்சியின் 42ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், இம்மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை (நேற்று) மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.

கட்சியின் மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.பாக்கியஷீலா, முகம்மது செய்யது பாத்திமா, தைக்கா சாமு சகாப்தீன், இ.எம்.சாமி, முன்னாள் உறுப்பினர்களான ஏ.லுக்மான், நோனா ஜாஃபர், ஏ.கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், கட்சியின் மீனவரணி இணைச் செயலாளர் எஸ்.ஜெனிஃபர் சந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் ஆர்.சின்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.





கடந்த திமுக ஆட்சியின்போது மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதாகவும், ஊழல் மலிந்திருந்ததாகவும் பேசிய அவர்கள், தற்போதைய அதிமுக ஆட்சி, மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் உணர்ந்து, அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதாகவும் கூறினர்.



இக்கூட்டத்தில், டி.சி.டபிள்யு. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் செயலாளர் இ.கண்ணன், தலைவர் பி.செல்வன், பொருளாளர் பி.ரெங்கநாதன், துணைத்தலைவர் எஸ்.வெங்கடாச்சலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காயல்பட்டினத்தில் பல இடங்களில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், தெருக்களில் தெருவிளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுவதாகவும், டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டால் ஊர் முழுக்க விளக்குகளை நிறுவி, ஊரையே ஒளிமயமாக்குவர் என்றும், அதற்கு நகர்மன்றத் தலைவர் ஒத்துழைப்பதில்லை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Plenty of brokers around
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [20 October 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 30865

இவர்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால், ஊரையே டி.சி.டபிள்யுவிற்கு ஒரு விலை வைத்து விற்று விடுவார்கள். அதற்குத்தான் புரோக்கர் வேலை பார்ப்பதற்கு நம்மவர்களே கூட இருக்கிறார்களே.....?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. (வாயை) மூடிக்கிட்டு போகவும்.
posted by Mohamed Noohu (Chennai) [20 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30866

டி சி டபிள்யு-விடம் கேட்டுத்தான் எங்கள் ஊரில் வெளிச்சம் வர வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் அம்மாவிடம் (பெத்த தாயிடம் இல்லை, ஜெயலலிதாவிடம்) சொல்லி (அல்லது காலில் விழுந்து) எதேனும் ஊருக்கு நல்லது செய்ய முடிந்தால் செய்யவும், இல்லாவிடில் (வாயை) மூடிக்கிட்டு போகவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கருப்பு ஆடு?
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [20 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30867

' டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டால் ஊர் முழுக்க விளக்குகளை நிறுவி, ஊரையே ஒளிமயமாக்குவர் என்றும், அதற்கு நகர்மன்றத் தலைவர் ஒத்துழைப்பதில்லை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது' (C&P).

அப்படி பேசிய நபர் யார்? என்று அடையாளம் காட்டினால், அந்த கருப்பு ஆட்டை இணம் கண்டு கொள்ளலாம். அப்படி பேசிய ஒலிநாடா இருந்தால் இந்த இணையதளத்தில் வெளியிட்டு அந்த கருப்பு ஆடுகளின் முகத்திரையை கிழிக்கலாம்.

நமதூர் மக்கள் ஒன்று திரண்டு அந்த நாசக்கார நச்சு ஆலையை, மாசு ஏற்படாமல் கட்டுபடுத்த போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நேரத்தில், அந்த நச்சு ஆலைக்காக வக்காலத்து வாங்கும் சோரம் போனவர்களை நம் மக்களுக்கு அம்பலபடுத்தி ஒதுக்கி வைக்க வேண்டும்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அட்மின் மகுடி ஊதிடாருடோய்.......
posted by s.s.md meerasahib (TVM) [20 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30869

மகுடி யார் ஊதுனாலும் பரவா இல்லை. ஆனால் அட்மின் அவர்கள் ஊதி இருக்க கூடாது. இல்லை என்றால் யாருடைய பேச்சில் இந்த சாராம்சம் இருந்தது என்பதை குறிப்பிடுவது அட்மினின் கடமை. இதை விட்டு விட்டு பொதுப்படைய செய்தியை போடுவதால் இந்த உரையில் உடன்பாடு இல்லாத நம்மவர்களையும் உங்களின் மகுடிக்கு ஆடுகிறவர்கள் ஆடகூடும். ஆடியும் விட்டன. நடுநிலை காப்பீர் என நம்புகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எலும்புத்துண்டுக்கான நன்றி விஸ்வாசம்...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [21 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30871

எமது மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக இருப்பதுடன் நாளுக்கு நாள் கான்சர் மற்றும் பிரைமரி காம்ளக்ஸ் இன்னும் ஏராளமான கொடிய நோய்களுக்கு காரணமாக இருந்து பச்சை அயோக்கியத்தனம் செய்து வரும் DCW வை இம்மண்ணிலிருந்து ஒழித்துக்கட்ட மக்கள் பாடுபட்டு வரும் இந்நிலையில் அதன் கைக்கூலியான இவரது பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக உள்ளது.

ஐயா நேற்று உங்க அயோக்கியத்தனத்தை அதாவது ஆலையின் அட்டூழியத்தை புதியதலைமுறை தொலைக்காட்சி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிட்டாங்க பொறுத்திருந்து பாருங்க கூடிய விரைவில் இதற்கோர் முடிவு வரும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.S.Kaja Mahlari (Singapore) [21 October 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30873

டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டால் ஊர் முழுக்க விளக்குகளை நிறுவி, ஊரையே ஒளிமயமாக்குவர்.

" சம்திங் ரான்க்"""


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [21 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30875

காயல்பட்டினத்தில் பல இடங்களில் சாலைகள் பழுதுபார்கப்பட்டு , வருவதும் , ஊர் முழுக்க இருண்டு கிடப்பதும் உண்மைதான் . சாலைகள் , பழுது பார்கப்படுவதிலும் , புதிதாக போடப்படுவதிலும் " தல " பெருமிதம் கொண்டாலும் , ஊர் இருண்டு கிடப்பதற்கு இவர்தான் காரணமாம் . பல இடங்களில் தான் நேரிடையாக களம் இறங்காமல் தன் விசுவாசிகளை வைத்து , கேள்விகள் கேட்க செய்து அந்த வேலைகளுக்கு தடையாக இருக்கிறாராம் .

ஊரை ஒளிமயமாக்க DCW வை அணுகலாம் என்கிற நகரமன்ற உறுப்பினர்களின் ஆதங்கம் சரியானதே . நகராட்சியில் பணம் இருந்தும் , " தல " பிடிவாத்தால்தானே தனியார் நிறுவனத்தை அணுக சொல்கிறார்கள் . தவறில்லையே ? அதற்காக புரோக்கர் வேலை பார்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம் ?

" தல " விசுவாசிகள்தான் இவரை சுயமாக சிந்திக்க விடாமல் , புரோக்கர் வேலை பார்கிறார்கள் . எந்த காரியம் நடந்தாலும் , விசுவாசிகள் மூக்கை நுழைத்து , " லொட்டு லொஸ்கு " என கேள்விகளை கேட்டு , அந்த வேலை நடக்க விடாமல் தடையாய் உள்ளனர் .

நகராட்சியின்மூலம்தான் வேலை நடக்கவில்லை . தனியார் நிறுவனங்களின் உதவியை நாடுவதில் தவறில்லையே !

கூட்டத்தின் முதல்வரிசையில் இருக்கும் அந்த நபர் , " தர்ம பிரபு , எஜமான் " வள்ளல் MGR அவர்களை நேரில் பார்பதுபோல் உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [21 October 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30877

ஆடு நனைவது.... ஓநாய்க்கு வருத்தம்...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. DCW -க்கு வக்காலத்து வாங்காதீர்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [21 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30878

சகோதரர் செய்யத் முஹம்மத் அலி அவர்களே, 'நகராட்சியின் மூலம்தான் வேலை நடக்கவில்லை . தனியார் நிறுவனங்களின் உதவியை நாடுவதில் தவறில்லையே ! ஊரை ஒளிமயமாக்க DCW வை அணுகலாம் என்கிற நகரமன்ற உறுப்பினர்களின் ஆதங்கம் சரியானதே . நகராட்சியில் பணம் இருந்தும் , " தல " பிடிவாத்தால்தானே தனியார் நிறுவனத்தை அணுக சொல்கிறார்கள் . தவறில்லையே ? அதற்காக புரோக்கர் வேலை பார்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம் ? (c&p)

- இது உங்கள் கமெண்ட்ஸ். கருத்து பதியும் பொது யோசித்து பதிவு பண்ணவும். தலைவியை எதிர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, நாசக்கார நச்சு ஆலைக்கு ஆதரவு தெரிவிக்காதீர்.

நம் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் என்று புற்று நோயால் மரணித்தவர்கள், பாதிக்கப்பட்டு வேதனையில் புழுங்கி கொண்டு இன்றும் இருக்கின்றனர். அதற்கு ஒரு காரணியாக இந்த நாசகார நச்சு ஆளை இருப்பது நீங்கள் அறியாததல்ல.

பல நலத்திட்டங்கள் காலதாமதம் ஆவதற்கு வேண்டுமானால் தலைவி அவர்கள் காரணமாக இருக்கலாம். அதற்கு அவர்கள் பல காரணங்கள் கூறலாம். ஆனால், நமதூர் மக்களின் உயிருடன் விளையாடும் அந்த நாசகார நச்சு ஆலைக்கு ஆதரவாக செயல்படும் நமதூரை சேர்ந்த எந்த கைக்கூலிகளுக்கும், அவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தாலும் வக்காலத்து வாங்க வேண்டாம். அப்படி DCW -க்கு ஆதரவாக செயல்படும் கைக்கூலிகளை இனம்கண்டு அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

அட்மின் அவர்களே, யார்,யார் பேசினார்கள் என்ற யூகங்களுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக, பேசிய நபர் / நபர்களை பெயர் குறிப்பிட்டு அடையாளம் காட்டுங்கள். ஒலிநாடா இருந்தால் அதையும் வெளியிடுங்கள்.

இந்த நாசக்கார நச்சு ஆலையை இந்த ஊரை விட்டு விரட்டும் வரை போராடுவோம். வாருங்கள் சகோதரர்களே! ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by ம.ஜஹாங்கிர் (kayalpatnam) [21 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30879

இந்த கூட்டத்தில் பார்வையாளர்கள் வரிசையில் சிறிது நேரம் நானும் இருந்தேன். நான் இருக்கும்போதுதான் இந்த பேச்சு வந்தது. அதனை பேசியவர் நகர்மன்ற உறுப்பினர் இல்லை.

மேலும் அவர் அவ்வாறு பேசவில்லை. பைபாஸ் சாலையை எங்கள் அம்மா ஆட்சியில்தான் விரிவாக்கம் செய்தோம், ஆனால் இன்று வரை அந்த சாலைக்கு மின்விளக்குகள் பொருத்தப்பட வில்லை. அருகில் இருக்கும் DCW நிர்வாகத்திடம் மின்விளக்குகளை பொருத்த கேட்கலாம் என்று தான் பேசியதாக எனக்கு நியாபகம். ஊர் முழுவதும் என்ற வார்த்தை வந்ததாக எனக்கு நியாபகம் இல்லை.

இதற்கு மாறாக அவர் பேசியதாக இந்த இணையதளத்தில் ஆடியோ அல்லது வீடியோ பதிவை வெளியிட்டால் நான் ஏற்றுக் கொள்கிறேன். விதன்டாவாதம் செய்ய நான் விரும்பவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. உங்கள் குடும்பத்தையும் இறைவன் காப்பாற்றட்டும்!
posted by Hameed Rifai (Kayalpatnam) [21 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30880

DCW தொழிற்சாலைக்கு எதிராக நமது ஊர் மக்கள் அனைவரும் இணைந்தேதான் போராட்டம் நடந்தினர். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தது - ஆளுங்கட்சி உட்பட! இது இப்படியிருக்க, மக்களின் மொத்த குரலையும் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் DCW தொழிற்சாலைக்கு ஆதரவான நிலையை எடுத்தது ஏன்?

(இந்த கூட்டத்திற்காக வெளியிடப்பட்ட பிரசுரத்தில் “DCW அண்ணா தொழிற்சங்க” பிரதிநிதிகள் பெயரும் இடம்பெற்றிருந்தது.)

நம் நிலத்தை வாங்கி தொழிற்சாலையை அமைத்து, நமக்கே 50 ஆண்டுகளாக அனைத்து வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி, சிறு தொகையை மட்டும் வரியாகக் கட்டுகிறான் என்பதற்காக, அந்த தொழிற்சாலையின் உதவியை - அது சிறிதோ, பெரிதோ - வாங்கவேண்டும் என்ற நினைப்பு நமக்கு வரலாமா?

அவன் தரும் உதவியில்லாமல் நம்மால் செயல்பட முடியாதா? அப்படி அவன் உதவியைக் கோரும் அளவுக்கு நம் நகராட்சியின் கஜானா காலியாகிவிட்டதா?

அல்லது DCW தொழிற்சாலையால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...சுடுகாட்டை வெளிச்சமாக ஆக்கி என்ன பயன்.
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் ) [21 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30881

" டி.சி.டபிள்யு.விடம் கேட்டால் ஊரையே வெளிச்சமாக்குவர் " - அருமை..அருமை..!!

ஊரில் கான்சர், கொடிய வியாதிகளை பரப்பி ஊரை சுடுகாடாக ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு என் சிறிய தந்தை கான்சர் பாதிப்பால் மரணமடைந்தார்கள்.

இப்படி ஊரை மயான பூமியாக ஆக்கிவிட்டு, ஊரை வெளிச்சமாக ஆக்குவார்களாம்.? ....சுடுகாட்டை வெளிச்சமாக ஆக்கி என்ன பயன்....!!

வல்ல இறைவா.. எங்களை கொடிய நோய்களில் இருந்தும், எதிரிகளிடம் இருந்தும், துரோகிகளிடம் இருந்தும் காப்பாயாக.!!

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:... ஆக்டோபஸ்
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [21 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30883

என்ன செய்ய ! பணம் பாதாளம் வரைக்கும் பாயும். டி.சி.டபிள்யூ. என்ற கார்ப்பரேட் நச்சு அரக்கனின் கையாட்கள் ஆளும் கட்சியியைக் கூட விட்டு வைக்கவில்லையே!

தான் சார்ந்திருக்கும் கட்சியின் ஆளுகின்ற திறமை மீதும் நிர்வாகத்திறன் மீதும் நம்பிக்கை குறைவு ஏற்பட்டதனால்தான் அந்த பேச்சாளர் அப்படி பேசியிருக்கின்றார். இம்மாதிரி ஆட்கள் எப்படி கட்சியில் நீடிக்கின்றார்கள் என தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [21 October 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30885

ஒரு மார்வாடிக்காக வேண்டி ஒரு ஊரின் நலனே பாதிக்கும் கேடுகெட்ட DCW தொழிற்சாலைக்கு வக்காலத்து பேசும் தொலைக்காட்சி குறிப்பாக இமயம், புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் DCW பண்ணும் அய்யோக்கிய தனத்தை வெட்ட வெளிச்சமாகி வருகிறது. எங்க பாட்டன் சொத்தை ஆசை வார்த்தை கூறி வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகிறோம் என்ற உத்திரவாதம் தந்து பின்னர் ஏமாற்றிய DCW கும்பலுக்கா சப்பை கட்டுகிறீகள். திருந்துகங்கள்.அல்லாஹ் தான் நல்ல புத்தியை தர வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Is it not the bypass road too belong to our Municipality?
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [21 October 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30886

ஊரிலுள்ள பல ஏக்கர் புறம்போக்கு நிலங்களை பிளாட் போட்டு விற்று விட்டார்கள். அந்த நிலங்களுக்கு இப்பொழுது சில பெரும் பணக்காரர்கள் உரிமையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. அனால் பைபாஸ் ரோடு நம்ம நகராட்சியச் சார்ந்தது என்றல்லவா நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அப்போ பைபாஸ் ரோடு நம்ம நகராட்சியை சார்ந்தது இல்லையா? அந்த ரோட்டையும் விற்று விட்டார்களா? இது எப்போ நடந்தது?

---------------------------------------------

நகராட்சி தலைவி எது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டுமென்ற மூர்க்கத்தனம், நம்மவர்களில் சிலரை இந்த நாலாந்தர அரசியல்வாதிகளின் பேச்சை நியாயப் படுத்துகின்ற அளவுக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை இந்த இணையதளத்திலும், பிற தளங்களிலும் வெளியாகும் கருத்துகளை வைத்து உணர முடிகிறது.

-----------------------------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...வன்னைமையாக கண்டிக்கிறோம்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 October 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30887

டி.சி.டபிள்யு.விடம் கேட்டால் ஊரையே வெளிச்சமாக்குவர்! அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு!! .....

யாரிடம் போய் யார் பிச்சை கேட்பது? நம் ஊரையே கொடிய கான்செர் நோய் மூலம் நாசமாக்க நினைக்கும் அந்த நாசகார டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகத்திடமா ? நமக்கு எல்லாம் இதை கேட்கவே வெட்கமாக இல்லையா ?

இந்த டி.சி.டபிள்யு. தொழிற்சாலை விசயத்தில் நாம் அனைவரும் பிரிந்து விடாமல் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே நம் வருங்கால சந்ததியினரை நம்மால் காப்பாற்ற முடியும் . இதெற்கு தேவை நமக்குள் ஒற்றுமை .

வல்ல நாயன் ... நம்மையும் நமது ஊரு மக்களையும் இந்த கொடிய நோயை விட்டும் காப்பாற்றி அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நகரில் பல பேருக்கு நகர்மன்ற செயல்பாடுகளில் பல கருத்துக்கள் இருக்கலாம்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30888

Plenty of brokers around

DCWவின் கைகூலிகள் நகரில் யார்... யார் என்று மிக தெளிவாக நகர மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்..

அந்த கைகூலிகள் எந்த கழிவு மடையில் ஒளிந்திருந்தாலும் அடையாளம் காணும் அளவிற்கு தற்போது நகரின் மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்...

நகரில் பல பேருக்கு நகர்மன்ற செயல்பாடுகளில் பல கருத்துக்கள் இருக்கலாம்... ஆனால் ஊருக்கே ஒரு கருத்து ஒரே எதிர்ப்பு இந்த DCW ஒன்று மட்டும் தான்...

புரியாத ஒருவருக்கு புரிதலை கருத்து மூலம் விளக்கம் கொடுத்து புரிய வைத்த (உயரத்தால்) பெரியவர் அப்துல் ரசாக் அவர்களுக்கு நன்றி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Cnash (Makkah ) [21 October 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 30890

அப்படி பேசிய தரகர் யார் என்பதையும், என்ன பேசினார் என்பதையும் தெளிவாக வெளியிட்டால் நல்லது!! அதை விடுத்து இப்படி மொட்டையாக போட்டால் நகராட்சியில் இருக்கின்ற குழப்பங்கள் போதாது என்று இன்னும் நமக்குள் சச்சரவுகள் தான் வரும்.

அப்படி பேசியது உண்மை என்றால் .. VSM அலி காக்கா போன்றவர்கள் இதற்கும் வக்காலத்து வாங்குவது சரியான முன்மாதிரி இல்லை. உங்கள் விவாதபடியே தல சரி இல்லை என்றாலும் சரி செய்ய பல தலைகள் இருக்கிறது .. தரகரிடம் அடகு வைக்கும் அளவிற்கும் நம் ஒன்றும் தரம் கேட்டு போய்விட வில்லை ..தெரு விளக்கு பிரச்சனையை பற்றி மேலும் விளக்கு காக்காவிற்கு விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறன் .. ஏதோ தலைவி மேல் உள்ள கோபத்தில் ஊரை கண்டவனிடம் அடகு வைப்பதை நீங்களும் சரி என்று பேசினால் உங்களுக்கும் DCW க்கு தரகு வேலை பார்ப்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய் விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. தலை வலியும் காச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்...
posted by முத்துவாப்பா (Al -Khobar) [21 October 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30891

ஊரை வெளிச்சமாக்குவது எல்லாம் இருக்கட்டும் . ஊர் மக்களின் வாழ்வை இருட்டாக்கி கொண்டு இருக்கும் நச்சு கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by netcom buhari (chennai) [21 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30893

முதலில் எங்கள் ஊர் மக்களின் வாழ்வை இருட்டு ஆக்குவதை நிறுத்து, பசும் தோல் போர்த்திய புலியை எங்களால் ஈஸி யாக அடையலாம் காணமுடியும் என்பதை நீ எபோழுதும் மறந்து விடதே, எங்கள் ஊர் வெளிச்சம் அடை வேன்டுமானால், நீ வெளிய போனால் போதும்,அதை முதலில் நீ செய்.

எது வெள்ளாடு , எது கருப்பு ஆடு என்பதை எங்களால் தெளிவாகவே அடயாளம் காண முடியும். கூடிய விரைவில் காட்டுவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [21 October 2013]
IP: 92.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30896

இச்செய்தி சம்பந்தமாக, அக்கூட்டத்தின் தலைவர் எம்.ஜெ.செய்யது இப்ராகிம், சம்பந்தபட்ட பேச்சாளர் கனேசன் மற்றும் பலரையும் தொடர்பு கொண்டு கேட்டதில்,. இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள வாசகம் (ஊர் முழுக்க வெளிச்சம்) எதுவும் பேசவில்லை என்பதை திட்டவட்டமாக அறிய முடிகிறது.

சகோதரர் ஜஹாங்கிர் கருத்துபடி சாதாரணமாக பேசி உள்ளார். பேச்சாளரும் நம்மூரை சார்ந்தவர்தான். அக்கூட்டத்தில் நகர்மன்ற தலைவியின் நிர்வாக குளறுபடிகளை பற்றி பலர் எடுத்து கூறியதினால், ஏற்பட்ட தாக்கத்தினால், இணையதள செய்தியாளர் செய்தியை தன்னை சார்ந்தவர்களுக்கு சாதகமாக திரித்து எழுதி வெளியிட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

DCW விஷயத்தில் நமதூரை சேர்ந்த எந்த அமைப்பும், எந்த கட்சியை சார்ந்தவர்களும் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. எனது குடும்பத்திலும் கூட இக்கொடிய ஆலையால் கேன்சர் பொன்ற பாதிப்புகள் உண்டு. எனவே அந்த ஆலை அகற்றபட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை.

எனவே, கருத்து எழுதுபவர்கள், உண்மை என்ன, நடந்தது என்ன என்பதை நன்கு கேட்டறிந்து நியாயமான முறையில் கருத்து தெரிவிக்கவும். கைக்கூலிகள், கருப்பாடு போன்ற வாசகங்கள், நகர்மன்ற உறுப்பினர் பேசியது போன்ற வாசகங்களை தவிர்க்கவும்.

இங்கே கருத்து தெரிவித்துள்ள பலர் எழுதி உள்ளபடி, இணயதளம் இச்செய்திக்கான ஆதார ஒலிபதிவை உடனடியாக வெளியிட வேண்டும். ஏனெனில் இச்செய்தி அரசியல் கட்சி சம்பந்தபட்டது. இணயதளம் நடுநிலையாகவும் உண்மையின் உரைகல்லாகவும் செயல்படவேண்டும். மாறாக தினமலர் போன்ற நாலாந்தர கீழ்தரமான நிலைபாற்றை எடுக்க வேண்டாம்.

அட்மின் அவர்களுக்கு : எனது கருத்தை எவ்வித வெட்டலும் இன்றி வெளியிட கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [21 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30900

பலரது கருத்துகளையும் உன்னிப்பாக கவனித்ததில் நான் அறிந்து கொண்டது , கேன்சர் நோய் நமதூரில் மட்டும்தான் உள்ளது . ஏனெனில் DCW வெளியிடும் நச்சு காற்று காயல்பட்டினம் வானத்தில் மட்டும்தான் சுற்றிகொண்டிருக்கிறது . அவர்கள் வெளியிடும் கழிவு நீர் கடலில் கலந்து , அதில் பிடிக்கப்படும் மீன்கள் காயல்பட்டனத்து மக்கள் மட்டுமே சாப்பிடுகின்றனர் .

இவைகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் , நான் முன்பு எழுதிய கருத்துபதிவிற்காக வருத்தப்படுகிறேன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. வருத்தமும் வேதனையும் எம் மக்களுக்கே...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [21 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30905

உண்மையாக இருக்கும் பட்சத்தில்...பட்சத்தில் என்ன பட்சத்தில் இதுதான் உண்மை! வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டுக்கோர் கேன்சர் தருவோம் என நச்சுக்கழிவை எமது கடலில் கலந்து கயமத்தனம் செய்து வரும் DCW வின் முகத்திரை புதியதலைமுறை டிவி மூலம் கிழித்தெறியப்படுள்ளது.

தமக்கு வந்த நோய் பிறருக்குத் தெரியக் கூடாது என இலைமறைகாய்களாக தினம் தினம் வெந்து புழுங்கும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் இதற்கோர் விடிவு வரும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. People of Kayal Can Only Speak of Kayal
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [22 October 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30906

"பலரது கருத்துகளையும் உன்னிப்பாக கவனித்ததில் நான் அறிந்து கொண்டது , கேன்சர் நோய் நமதூரில் மட்டும்தான் உள்ளது . ஏனெனில் DCW வெளியிடும் நச்சு காற்று காயல்பட்டினம் வானத்தில் மட்டும்தான் சுற்றிகொண்டிருக்கிறது . அவர்கள் வெளியிடும் கழிவு நீர் கடலில் கலந்து , அதில் பிடிக்கப்படும் மீன்கள் காயல்பட்டனத்து மக்கள் மட்டுமே சாப்பிடுகின்றனர்" (C & P)

சகோதரரே, இங்கு பெரும்பாலோர் காயல் பட்டினவாசிகள். அவர்களின் சொந்தங்களும் அங்கு வசிக்கின்றனர். உங்களுக்கு முழு உண்மையும் தெரிய வேண்டுமானால், நீங்கள் பக்கத்துக்கு ஊர்களில் போய் விசாரியுங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [22 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30907

பேச்சாளர் திபாவளி போனஸ் 20% தமிழக முதல்வரால் கிடைக்க பெற்ற மகிழ்ச்சியில் வாய் உளறிவிட்டார். தமிழக முதல்வரிடம் கேட்டால் என்று சொல்வதற்கு பதிலாக DCW என்று முனங்கி இருக்கிறார். DCW நச்சு ஆலைக்கு சப்பகட்டும் நமதூர் மக்காளுக்கு அந்த ஆலையைக்கொண்டு ஏதிர்வினை விரைவில் வரும். பொறுத்து இருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Is not the bypass road belong to our Municipality too? (2)
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [22 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30909

ஊர் மக்கள் சார்பில் K E P A முன்னின்று நடத்திய D C W விற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய குறிக்கோள், D C W ஐ நிரந்தரமாக இழுத்து முடவேண்டும் என்பதல்ல என்பதை இங்கு கருத்து பதிவு செய்தவர்கள் சிலரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மாறாக அரசு விதித்த கட்டுப்பாட்டின் கீழ் ஆலையை இயக்குவேண்டும் என்பதே. அதில் ஒன்று

ஆலை கழிவுகளை (Effluent) மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றான கடலில் கலக்காதிருப்பது.

மேலும் ஆலை கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை கடைபிடிக்கும் வரை குறிப்பிட்ட இரசாயனப் பொருள் தயாரிப்பு செய்யும் ஆலையை இழுத்து முடவேண்டும் என்ற மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (தூத்துக்குடி கிளை மேலிடத்திற்கு செய்த) சிபாரிசை அமுல்படுத்தவேண்டும்.

-------------------------------

கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன் D C W விரிவாக்கம் சம்பந்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் கருத்துக் கேட்பில் கலந்து கொண்டபோது கீழ்க்கண்ட பல விசயங்களை அறிய முடிந்தது.

1) நமதூரில் சில தரகர்கள் இருப்பது போல சுற்றுவட்டாரங்களிலும் தரகர்கள் இருக்கிறார்கள். விரிவாகத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் பேசினார்கள்.

ஆதரவாக பேசியவர்களை மூன்று பிரிவினர்களாக பிரிக்கலாம்.

1) DCWவினால் நேரடியாக பலன் பெறுபவர்கள்
(Ex: வேலைவாய்ப்பு பெற்றவர்களும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள், தொழில் ரீதியாக இலாபம் அடைகின்றவர்கள் ).

2) அரசியல் கட்சிகளை சார்ந்த வெள்ள வேஷ்டிகாரர்கள் (கம்முனிஸ்ட் கட்சி தவிர)

3) தரகர்களால் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். (நமதூரைச் சார்ந்தவர்களும் அங்கு இருந்தனர். நம்மை கண்டவுடன் பின் வங்கி Back seat யில் அமர்ந்தனர்)

அது போல எதிராக பேசியவர்களும் 3 பிரிவாக பிரிக்கலாம்.

1) நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள். (குறிப்பாக நமதூர், புன்னைக் காயல் மற்று சுற்று வட்டாரத்தினர்)

2) தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் (உப்பள தொழிலாளிகள், மீனவர்களின் பிரதி நிதிகள்)

3) சுற்று வட்டாரத்திலுள்ள சமூக சேவை செய்யக் கூடியவர்கள்.

--------------------------------------------

நமது நகராட்சி தலைவிக்கு எதிரான நிலைப்பாடு சகோ., விளக்கு அலியை DCWவினால் நமதூரில் பாதிப்பு ஏற்படவில்லை என்று சொல்லும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. நாம் ஊர் மக்கள் மட்டும் நோயால் பாதிக்கப்படவில்லை. பக்கத்திலுள்ள புன்னை காயல், ஆத்தூர், ஏன் ஆறுமுகநேரியில் கூட பாதிக்கப் பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நமதூரில் DCW வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது மாதிரி மற்ற ஊர்களில் போராட்டம் வலுவடைந்து விடாமல் அந்தந்த ஏரியா தரகர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். நமதூரில் அந்த நிலை எப்போதோ மாறிவிட்டது.

நமதூரில் வீடு வீடாக சென்று புள்ளியியல் (Statistic) எடுத்த மாதிரி மற்ற ஊர்களில் எடுக்கப் படாததால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லையே தவிர மற்ற ஊர்கள் DCW வினால் பாதிக்கப் படவில்லை என்பது DCW மற்றும் அதன் கைக்கூலிகள் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரம்.

அப்பேற்பட்டவர்களில் சிலர் ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நகராட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட (ஊர் மக்கள்) கருத்துக் கேட்பு கூட்டத்திற்க்கு அழைக்கப் பட்டு DCW விற்கு ஆதரவாக பேசினார்கள் / பேச வைக்கப்பட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.

யார் யார் அந்த கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பு DCW விற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து ஆசி பெற்றார்கள் என்பதை நிரூபிக்க தக்க ஆதாரம் கைவசம் கிடைக்கப் பெறாததால் கைக்கூலிகளின் பெயர்களை இங்கு பதிவு முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இன்று பைபாஸ் ரோட்டுக்குதானே விளக்கு போடுவது பற்றி பேசினார்கள் ஊருக்கு இல்லையே இதைப்போய் பெரிசுபடுத்துகிறீர்களே என்பார்கள். நாளை நமது கடற்கரைக்கு விளக்கு போடுவது பற்றி இவர்களே Request வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

--------------------- END ----------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [22 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30919

AWS காக்கா அவர்களுக்கு ,

< நமது நகராட்சி தலைவிக்கு எதிரான நிலைப்பாடு சகோ., விளக்கு அலியை DCWவினால் நமதூரில் பாதிப்பு ஏற்படவில்லை என்று சொல்லும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது > C & P

என்னுடைய அனைத்து கருத்து பதிவுகளையும் , ஒருவேளை நீங்கள் படிக்காமல் இருந்ததால்தான் , இந்த அளவுக்கு எழுதி இருக்கிறீர்கள் . நகராட்சி தலைவி எனக்கு தீண்டத்தகாதவரோ , அல்லது மற்றவர்கள் எனக்கு மாமனோ மச்சானோ அல்ல . எல்லோரும் எனக்கு ஒன்றுதான் . நகராட்சி தலைவி செய்யும் எல்லா காரியங்களையும் நான் எதிர்கவில்லை . நல்லதை வரவேற்கிறேன் , மற்றதை சுட்டிக்காட்டுகிறேன் . மன்ற உறுப்பினர்கள் செய்யும் ஒருசில தவறுகளைகூட சுட்டிக்காட்டி இருக்கிறேன் . என்னை பற்றிய உங்களின் தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும் .

DCW விசயத்திலும் , உங்களுக்கும் , மற்றவர்களுக்கும் என்னை பற்றிய தவறான எண்ணங்களே உள்ளது . DCW செய்வது சரி என்று நான் ஒருபோதும் சொல்லியதில்லை . உதாரணம் .... ஜலாளியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் , நான் பேசும்போது DCW க்கு எதிராக வழக்கு போடுங்கள் என்று சொன்னதே நான்தான் . தொழிற்சாலையால் சுற்றுபுறத்தில் ஏற்படும் பாதகங்கள் எனக்கும் தெரியும் .

நீங்கள் சொல்வதுபோல் DCW ஆலையை மூடச்சொல்லி நாம் ஒருபோதும் சொன்னதில்லை . மாசுகட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க சொல்லித்தான் வற்புறுத்துகிறோம் . ஆனால் இங்கே கருத்துபதியும் ஒருசிலர் , என்னவென்றே தெரியாமல் , இந்த ஆலையை மூடாமல் என் மூச்சு அடங்காது என்ற தொனியில் எழுதுகின்றனர் .

நமதூரில் கான்சர் நோயாளிகள் இருப்பது உண்மைதான் . DCW மூலம்தான் இந்த நோய் வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதைவிட மோசமாக pollute செய்யும் ஆலைகள் உலகின் எல்லா இடங்களிலும் உள்ளது . ஆலைகலாள்தான் நோய் பரவுகின்றது என்று அனைவரும் கொடி பிடித்தால் உலகமே இயங்காது .

நான் முன்பு எழுதிய கருத்துபதிவில் சொன்னதுபோல் , நமதூரில் கான்சர் நோயால் இறப்பவர்களை பற்றி ஆராய வேண்டும் . அவர் தன் வாழ்நாளில் எந்தெந்த இடங்களில் அதிகம் இருந்திருக்கிறார் , அவருடைய உணவு , மற்ற பழக்க வழக்க முறைகள் , இவற்றை பார்க்க வேண்டும் . பிறகுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் .

< யார் யார் அந்த கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பு DCW விற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து ஆசி பெற்றார்கள் என்பதை நிரூபிக்க தக்க ஆதாரம் கைவசம் கிடைக்கப் பெறாததால் கைக்கூலிகளின் பெயர்களை இங்கு பதிவு முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. > C & P

ஆதாரமே இல்லை என்கிறீர்கள் . பிறகு , எதற்காக இப்படி எழுதினீர்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. எல்லாரும்.எளிதாக இனம்காண உதவியாக இருக்கும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [23 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30930

டி.சி.டபிள்யு.விடம் கேட்டால் ஊரையே வெளிச்சமாக்குவர்! அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு!! (C&P )

இதை யார் பேசினார்,அதன் ஒளிப்பதிவு,ஆடியோ,வீடியோ ஆதாரம் இருந்தால் அட்மின் அவர்கள் தெரிவிக்கவும்!

அத்தகைய ஆதாரத்திற்கு பிறகுதான் கருத்தெலுதமுடியும்! அப்படியொரு ஆதாரம் கிடைக்கப்பெறும் வேலையில், அந்த பேச்சின் அந்தரத்தில் யார் யாரெல்லாம் பதுங்கி இருக்கிறார்கள், யார், யாரெல்லாம் பணத்திற்காக பல்லக்கு தூக்குகிறார்கள் அதற்க்கு பல்லவி பாடி பல்லிளிக்கும் பச்சோந்திகளின் பட்டியலில யார், யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாரும் எளிதாக இனம்காண உதவியாக இருக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மாலையில் மிதமழை!  (21/10/2013) [Views - 2636; Comments - 3]
நகரில் சாரல்!  (20/10/2013) [Views - 2011; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved