Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:53:46 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12124
#KOTW12124
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 17, 2013
ஹஜ் பெருநாள் 1434: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், இம்மாதம் 16ஆம் தேதி புதன்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.

அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன. நிறைவில், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.

நேற்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.

கூட்ட நெரிசலைக் கருத்திற்கொண்டு, கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இருப்பதற்காக, ஆறுமுகநேரி காவல்துறையினர் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – சொளுக்கார் தெரு சந்திப்பு மற்றும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – கொச்சியார் தெரு சந்திப்பில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்களை நிறுத்தச் செய்தனர்.





அக்டோபர் 16 - பெருநாளன்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-









































































































































பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள் விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன.

































































கடற்கரையில் மக்கள் திரள் அதிகளவில் இருந்தமையால், அங்குள்ள - குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான முஸல்லாவில் (தொழுமிடத்தில்) 8 முறை மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நடத்தப்பட்டது.





உத்தரப்பிரதேச மாநிலம் முஸஃப்பர் நகரில், அண்மையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடற்கரை நுழைவாயிலில் நன்கொடை வசூலிக்கப்பட்டது.







களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ஹஜ்ஜுப் பெருநாளன்று மாலை கடற்கரை காட்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:15 am/18.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [18 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30837

பள்ளிகூட தோழன்மார்களை பல வருடங்களுக்குப்பின் போட்டோவில் பார்த்ததில் மகிழ்ச்சி . நமதூர் கடற்கரையில் புதிதாய் " தலைமுடி " வியாபாரம் .!!!!

ஹிஜாஸ் மைந்தா ,,, போட்டோவில் முன்புபோல " தெளிவு " இல்லையே , " கண்ணு " பட்டுடுச்சோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Seyed Ismail MAC (Singapore) [18 October 2013]
IP: 208.*.*.* United States | Comment Reference Number: 30838

வாவூ முக்தார் ஹாபிழ் : உங்க சட்டை வேட்டி கலர் கண்ணை பறிக்கின்றது...

தலை பெருநாள் வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தகவலில் சிறு. திருத்தம்
posted by M.S.FAREED (CHENNAI86) [18 October 2013]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 30839

ஆரம்பத்தில் கிழமை தவறாக குறிக்கப்பட்டுள்ளது. மேலும் அடைப்புக்குறிக்குள் இன்று என குறித்து விட்டு நேற்றே. கடற்கரையில் மக்கள் கூடியதாக கூறப்பட்டுள்ளது .. என்னதான் பெருநாள் கொண்டாடினாலும். ஊரில் இல்லையென்றால் சந்தோஷம் சற்றே குறைவுதான். எப்படியோ அல்ஹம்துலில்லாஹ்

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by IZZADEEN (CHENNAI) [18 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30841

Super All photos,பணங்குருத்து photo missing


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by HAMDUN ABBAS (SINGAPORE) [18 October 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30842

தங்களின் தளம் சிறப்பாக இருக்கின்றது. படங்கள் அத்தனையும் அருமை..!..

சகோதரர்களுக்கு தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

பரங்கிப்பேட்டை ஹம்துன் அப்பாஸ்
சிங்கப்பூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [18 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30844

அஸ்ஸலாமு அலைக்கும்

ரொம்பவும் அற்புதமான தங்களின் இந்த போட்டோக்கள் மூலம் நாங்களும் ஒரே இடத்தில் இருந்தாலும் ........ நமது ஊர் கடற்க்கரையில் வளம் வந்தது போன்றதோர் எண்ணம் எம் மனதில் தோன்றியது ......அவ்வளவு சிறப்பாகவே உள்ளது ......

பெருநாளில் ஊரில் சந்திப்பு ஏற் படாதவர்களை எல்லாம் தங்கள் போட்டோ மூலமாக ஊரில் இருப்பது அறிந்து கொண்டோம் ....இன்ஷா அல்லாஹ் தோதுவு போல் முக்கியமானவர்களை சந்திக்கவேணும்..........

போடோக்களும் ரொம்பவும் கிளியராகவே இருக்கிறது ................

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
SADUKKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மாஷா அல்லா...
posted by abdul rahman naser (makkah) [19 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30858

அஸ்ஸலாமு அழைக்கும்..

மாஷா அல்லாஹ் என்ன 8 முறை மக்ரிப் தொளுஹை நடத்த பட்டதா..... அல்லாஹ் அன்னிவரின் துவா கலையும் காபுல் ஆகுவன் இன்ஷ அல்லாஹ்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved