| 
 தமது காயல் நற்பணி மன்றத்தின் தலைவரை, ஷிஃபாவின் துவக்கத் தலைவராக்கியமைக்கு நன்றி தெரிவித்தும், நகர சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும் சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
  
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 
  
 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். 
  
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். 
  
பொதுக்குழுக் கூட்டம்:
  
இறையருளால், எங்கள் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 65ஆவது பொதுக்குழுக் கூட்டம், 27.09.2013 அன்று மாலை, 06.30 மணியளவில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ. எம்.எம்.இஸ்மாயில் என்ற தம்மாம் இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் வைத்து இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். 
  
இந்த நிகழ்வை கிராஅத் ஓதி ஆரம்பித்தார் மாஸ்டர் ஐ.அதாவுல்லாஹ் அவர்கள். 
  
 
  
தலைமையுரை:
  
வரவேற்புரையை சகோதரர் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் வழங்க. அதைத் தொடர்ந்த்து தலைமை உரையை, மன்றத்தின் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் வழங்கினார்கள். 
  
 
  
 
  
அவர்களின் ஆக்கப்பூர்வமான உரையில் நல்ல ஆலோசனைகளையும், மன்ற செயல்பாட்டையும் விளக்கினார்கள். 
  
>> அண்மையில் இனிதே முடிந்த, மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் எஸ்.ஏ.அஹமத் ரபீக் அவர்களின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அந்த தம்பதிகளின் நல் வாழ்வுக்காக வல்லோனிடம் பிராத்தனை செய்தார். 
  
>> ஒருங்கிணைந்த மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபாவை வலுப்படுத்துவதின் அவசியத்தையும், அதற்க்கு நாம் அனைவர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுவித்தார். 
  
>> மைக்ரோ காயல் துவங்க இருக்கும் "காயல் மெடிக்கல் கார்டு" திட்டத்தையும், நகரில் மருத்துவ முகாமை நடத்துவதையும் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்தார். வரும் காலங்களில் நாமும் இவர்களுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்களை நடத்தவும் ஆர்வப்பட்டார். 
  
>> இந்த வருடம் தாயகத்தில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்துள்ள அனைவர்களையும் வரவேற்று, அவர்களின் ஹஜ் இலகுவானதாகவும், வல்ல அல்லாஹுவால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் ஆகவும் அமைய, இறைவனிடம் இறைஞ்சினார். 
  
அடுத்ததாக, மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் அவர்கள், தீர்மானங்களை மன்றத்தில் சமர்ப்பித்தார். 
  
 
  
தீர்மானங்கள்:-
  
1. அனைத்து உலக காயல் நற்ப்பணி மன்றத்தின் மருத்துவ ஒருங்கிணைப்பான "ஷிஃபா"வை, ஆரோக்கிய முறையில் துவங்கி வைப்பதற்கு உறுதுணை புரிந்த வல்ல அல்லாஹ்விற்கும், அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 
  
2. இந்த ஷிஃபாவிற்கு, முதல் தலைவராக எங்களின் நல மன்ற தலைவர், மரியாதைக்குரிய டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்களை தெரிவு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். 
  
3. அமெரிக்க அரசின் IVLP திட்டத்தின் கீழ், அந்நாட்டின் விருந்தினராக பயணம் மேற்கொள்ளவுள்ள நமதூர் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களுக்கு எம் மன்றத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். 
  
4. கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்து வரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர்களை வாழ்த்தி, மேலும் பல சாதனைகளையும், வெற்றிகளையும் பெற பிராத்திக்கின்றோம். 
  
5. பல்கலைகழக அளவில் முதலிடம் பெற்று, மாநில ஆளுநரிடம் விருது பெற்ற மாணவிகளான  என்.எஸ்.எச்.யாஸ்மின் ஃபர்ஹானா, 
எஸ்.என்.அஹ்மத் ஹலீமா, 
ஜெ.ராபியத்துல் ஃபஹ்மிய்யா ஆகியோரை பாராட்டுகின்றோம். 
  
6. நம் மன்றத்தின் தூண்களின் ஒன்றான, சகோதரர். இப்ராஹிம் அவர்கள், பணி நிறைவு பெற்று, தாயகம் சென்றுள்ளார்கள். அவர்களின் வாழ்வில் வளமும், நலமும் பெற பிராத்திக்கின்றோம். 
  
7. ரியாத் மாநகரில் இயங்கிவரும் International Indian School இன் நிர்வாகிகள் குழு (SCHOOL MANAGEMENT COMMITTEE) தேர்தலில் வெற்றி பெற்ற, சகோதரர் எஸ்.ஹெச்.ஹைதர் அலி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 
  
செயலர் உரை:
  
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அடுத்ததாக மன்றத்தின் பொதுச் செயலாளர் சகோ. எஸ்.ஏ.அஹமத் ரபீக் அவர்களின் சீரிய உரையில், மன்றத்தால் பெறப்பட்ட மனுக்களின் விபரங்களையும், அவர்களுக்கு மன்றத்தால் வழங்கப்பட்ட உதவிகளையும் பட்டியலிட்டார். 
  
 
  
பின்னர், வந்திருந்த அனைவர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. 
  
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
  
தம்மாம் பகுதிக்கு புதிதாய் வந்துள்ள சகோதரர்களான 
1. சகோ. எஸ்.ஐ.இம்தியாஸ்  
2. சகோ. ஷேக் முஹம்மது  
3. சகோ. எம்.ஏ.முஹம்மத் ராமீஜ் 
4. சகோ. பஷீர் அலி  
ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்தி, மன்றத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். 
  
மார்க்க அறவுரை:
  
அடுத்ததாக கண்ணியத்துக்குரிய ஆலிம் நூஹு மஹ்லரி அவர்களின் சிற்றுரை தொடர்ந்தது. அவர்களின் உரை வழமை போல அனைவர்களையும் கட்டிப்போட்டதுடன், மனதில் ஒரு உற்சாகமும், ஓய்வு நேரங்களை எப்படி செலவு செய்யனும் என்று அல்குர்ஆன், நபிமொழியில் கூறப்பட்ட பல எடுத்துக்காட்டுகளை பட்டியலிட்டு ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார்கள். 
  
நன்றியுரை:
  
பின்பு, உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இறுதியாக, நன்றி உரை என்பது ஒரு சம்பிரதாயமான நிகழ்வாக இல்லாமல், இந்த நிகழ்வுக்கு உறுதுணை புரிந்த சகோதரர்களின் உதவி எனக்கு தான் நன்றாக தெரியும். ஆகவே நானே தெரிவிக்கின்றேன் என்று, நன்றியுரையை மன்றத்தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் வல்ல அல்லாஹ்விற்கும், உறுதுணை புரிந்த அனைவர்களுக்கும் உளமார நன்றிகளை தெரிவித்தார். 
  
இறுதியில் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்து, துஆவுடன், பொதுச் செயலாளர் ஜனாப் எஸ்.ஏ.அஹமத் ரபீக் அவர்களின் அனுசரணையில், இரவு உணவான பிரியாணியை பார்சலாக கையில் எடுத்துச் சென்று, மன மகிழ்வுடன் இனிதே நிறைவேறியது எங்கள் மன்றத்தின் 65ஆவது பொதுக்குழுக் கூட்டம். அல்ஹம்து லில்லாஹ். இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 
  
 
  
இவ்வாறு, தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் அதன் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  |