Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:20:21 PM
செவ்வாய் | 10 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1958, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:36
மறைவு17:59மறைவு01:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:59
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2218:4819:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11768
#KOTW11768
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 8, 2013
இந்தோனேசியா நாட்டில் செப்டம்பர் 6 அன்று காணப்பட்ட துல்கஃதா 1434 மாத பிறையின் காட்சிகள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3377 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமையன்று இந்தோனேசியா நாட்டில் தென்பட்ட துல்கஃதா 1434 மாத தலைப்பிறை காட்சிகள்:





புகைப்படங்கள்:
Islamic Crescents' Observation Project


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. துல்ஹஜ் பிறையை கணக்கிடுவதர்க்கான முன்னோடிசெய்தியா இது?
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [08 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30035

பிறை பிறக்கும்போது முதலில் எங்காவது தெரியத்தான் செய்யும். இந்தோனேசியா நாட்டில் பிறை தெரிந்திருந்தால் , இன்நாட்டினருக்குதான் துல்கஃதா 1434 மாதம் ஆரம்பம் ஆகிறது . அதனால் நமக்கு எந்த மாற்றமும் இல்லை. நமது ஊரில் அல்லது நம் பகுதியில் என்று பிறை தெரிந்தது என்றுதான் நாம் பார்க்க வேண்டும். துல்ஹஜ் பிறையை கணக்கிடுவதர்க்கான முன்னோடிசெய்தியா இது? மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நோக்கம் என்ன?
posted by kavimagan m.s.abdul kader (doha..qatar.) [08 September 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30037

சதக்கு தம்பி காக்கா அவர்களின் கருத்து முற்றிலும் சரியானது.... அந்த நாட்டில் பிறை....இந்த நாட்டில் பிறை.....அதெல்லாம் சரி...

அந்த நாட்டில் காணப்பட்ட பிறைகள் எல்லாம்,அந்த நாட்டின் காலக் கணக்குக்கு ஏற்றதாக இருக்கலாம்....நமது பகுதியில் நாம் காணும் பிறைதான்,நமது கணக்கு முறைக்கு ஏற்றதாக இருக்கும்... எல்லாப் பிறைகளையும் நீங்கள் செய்தியாக்குவதன் நோக்கம் என்ன? அதைத் தெரிவித்தால், பரஸ்பர புரிதலுக்கேனும் வழி கிடைக்கும்...

Administrator: காயல்பட்டினத்தில் பிறை விசயத்தில் மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.

ஒன்று, அந்தந்த இடங்களில் பிறையை காண வேண்டும். இரண்டு, உலகில் எங்கு பிறையை கண்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்று, பிறையை கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இம்மூன்று நிலைப்பாடுகள் குறித்தும் நகரில் பல்வேறு தருணங்களில், பல்வேறு வகைகளில் விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது/நடைபெறுகிறது. அவைகள் இவ்விணையதளத்தில் செய்தியாகவும், கருத்து பரிமாற்றங்களிலும், தலையங்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

பலர் விவாதிக்கும், அனைவரையும் பாதிக்கும் இவ்விசயத்தில் - ஊடகம் என்ற அடிப்படையில், விவாதங்கள் - ஆதாரங்கள்/ஆவணங்கள் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக - ஒவ்வொரு மாத பிறப்பிலும், இவ்விணையதளம் - கூடுதல் தகவல்களை - பல ஆண்டுகளாக வழங்கிவருகிறது. அந்த அடிப்படையிலேயே இத்தகவலும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புரிதல்
posted by zubair rahman (Doha-Qatar) [09 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30050

பல வகையான புரிதலின் அடிப்படையில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் .

இப்படித்தான் வாழனும் !!!
இப்படியும் வாழலாம் !!!
எப்படியும் வாழலாம் !!!!

அந்த அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நடத்தலாம் , நடத்துகிறார்கள் - இதில் எங்கிருந்து வந்தது முரண்பாடும் ,,, முள்ளங்கியும் ???????????

ஏற்றுக்கொள்கிறவர்கள் அதன் அடிப்படையில் நடப்பார்கள் , அதில் முரண்பட்டவர்கள் தன் வழி பயணம் தொடர்வார்கள். எந்த கருத்தையும் புரிதலின் அடிப்படயில் பகிர்ந்துகொண்டால் அந்த புரிதல் சரியானதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rilwan (Mountain View, CA) [09 September 2013]
IP: 209.*.*.* United States | Comment Reference Number: 30054

ஒரு நாட்டில் பிறை தெரியும் போது அது அடுதனாட்டுக்கு எப்பொழுது தெரியும் என்பது அந்த நாடு புவியியல் அமைப்பில் எங்கு உள்ளது என்பதனை பொருத்தது.. பக்கத்துக்கு நாட்டில் பிரைதேரிந்தால் அடுதனாட்டில் தெரிய சில மணி நேரம் முன்னேயோ பின்னேயோ தான் ஆகா முடியும்.. ஒரு நாளைக்கு மேலே அது தள்ளிப்போக முடியாது.. இது சாதாரண புவியியல் - மற்றும் அச்ற்றோனமிகள் தத்துவம்..

ஒன்று அல்லது இரண்டு நாள் கழித்துதான் பக்கத்துக்கு நாட்டிற்கு nilvu வரும் என்பது அறிவுக்கு பொருந்தாத விஷயம். ஒரு நாட்டில் நிலவு தெரிந்தால் அடுத்த நாட்டிற்கு எவ்வளவு நேரம் கழித்து அடுத்த மாதம் வருவது என்பதை கணக்கிட்டு கொள்ள முடியும் என்பது அறிவியல் உண்மை..எல்லா நாடுகளும் இந்த பூமியில் தான் உள்ளது.

நிலா எல்லா நாட்டையும் சேர்த்து தான் சுத்துது. பூமியும் எல்லா நாட்டையும் தூக்கிக்கொண்டுதான் தன்னை தானே சுத்து.. இப்படி இருக்க - அவங்க நாட்டிலே நேற்றைக்கு தெரிந்தது எங்க நாட்டிலே என்னைக்கு தெரியுதோ அன்னைக்கோ தான் எங்களுக்கு மாதம் பிறக்கும் என்பது அறிவுக்கு பொருத்தமானதாக இல்லை...

அறிவியல் அறிவுபூர்வமாக ஒரு உண்மை இருக்கா அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறுவது அறிவார்ந்த விசயமாக இருக்க முடியாது. நிலா வும் பூமியும் சீரான வேகத்திலேயே சுற்றுகின்றன. லீப் இயர் என்பது ஒரு error correction .. அது ஹிஜ்ரா நாட்காட்டிக்கும் பொருந்தும். விஷயம் இவ்வளவு எளிதாய் இருக்கா ஏன் இந்த மாரடிப்பு என புரிய வில்லை.

இப்படி ஹிஜ்ரா நாட்களை கணக்கிடுவது தவறு என்று அறிவுப்போர்வமாக விளக்குங்கள். எங்கள் முன்னோர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற நொண்டி சாக்கு மட்டும் வேண்டாம். ஏனென்றால் அடுத்த தலைமுறை நிறைய கேள்விகள் கேட்கும். நொண்டி சாக்குகளை அடுத்த தலைமுறையை இஸ்லாத்திலிருந்து தூரவே கொண்டு செல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Shaik Noordeen (Riyadh, Saudi Arabia) [09 September 2013]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30055

அஸ்ஸலாமு அழைக்கும்.

இதை ஏன் நாம் வாதமாக எடுத்துகொள்ள வேண்டும். இது ஒரு தகவல் அவ்வளுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Inshaa Allah this will be a big clarification....
posted by Dawood bin Shaffie (Hong Kong) [10 September 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 30056

dear brother ரிள்வான்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

please fine this link, read thoroughly for clarification.... Hope Inshaa Allah it will clarify your doubts about moon sighting / calculation. [xxxxxxxxxxxxxxxxxxxxx]

I have an doubt... why this clarification not published on other websites? May Allah guide us on the straight path. May He let us know the right things & let us act upon it... Aameen.

Administrator: பிற இணையதளத்தை மேற்கோள்காட்டும் தகவல் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாதி கிணறு தாண்டிவிட்டார்கள்.
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [10 September 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 30057

Very simple logic !

இந்தொனெசியாவிற்கும் தென் ஆப்ரிக்கவிற்கும் இடையில்தான் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அதில்தான் இந்தியாவும் இருக்கிறது. இந்தோனேசியாவுக்கும் தென்ஆப்ரிக்காவுக்கும் ஒரே பிறை, இந்தியாவிற்கு வேறு பிறையா? உலக வரை படத்தை எடுத்துப் பாருங்கள். ஓரளவு உண்மை புரியும்.

Food for thought::

இந்தோனேசியாவில் தென் பட்ட பிறையை விட தென் ஆப்ரிக்காவில் தென்பட்ட பிறை கொஞ்சம் பெரிதாக ஏன் தெரிகிறது என்ற நியாயமான கேள்வி சிலருக்கு எழலாம்.

வளர் பிறையை பொறுத்தவரை பௌர்ணமி வரை அது நிமிடத்துக்கு நிமிடம், மணிக்கு மணி அது வளர்ந்து கொண்டே போகும். பௌர்ணமியை அடைந்த பிறகு தேய்ந்து கொண்டே போகும். இந்தோனேசியாவில் மகரிப் வேளையில் பார்த்த பிறை கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்குப் பிறகுதான் தென்ஆப்ரிக்காவில் (மக்ரிப் வேளையில்) பார்க்க முடியும். தென் ஆப்ரிக்க பிறை இந்தோனேசிய பிறையை விட 5 மணி நேரம் (வயதில்) கூடியது. அதே பிறை அமெரிக்க கண்டத்தில் மக்ரிப் வேளையில் இன்னும் பெரிதாகத் தெரிந்திருக்கும்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. How come?
posted by Dawood bin Shaffie (Hong Kong) [10 September 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 30060

Dear admin...,

In which link they can find the clarification... Better not to publish my comments then.... or edit everything related to the above said links / reference.

Why you did not publish that clarification by Moulavi Abdul Wadood Alim...... ???? clarify us pls.

Moderator: தனி நபர்கள் வெளியிடும் பிரசுரங்கள் இத்தளத்தில் செய்தியாக்கப்படுவதில்லை. கருத்தாளர் தெரிவிக்கும் விளக்கம் - அது தொடர்பானவர்களிடம் அமைப்பு ரீதியாக கோரப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [10 September 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 30061

திறந்த உள்ளதோடு ஆராய்ந்து பார்பவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.

உதாரணமாக, பிறை ஜப்பானில் அந்த நாட்டு நேரப்படி மாலை 6:00 மணிக்கு பிறக்கிறது என்று வைத்து கொள்வோம். பிறையின் அளவு அரை அங்குலம்.

அதே நாள் அதே நேரம் ஜெர்மனியில் அந்த நாட்டு நேரப்படி பிறையின் அளவு சற்றே அதிகமாக இருக்கும், எடுத்துக்காட்டுக்கு முக்கால் அங்குலமாக இருக்கும். மேகமூட்டம், மழைக்காலம் இதனை பொறுத்து பிறையை வெறும் கண்ணை கொண்டு பார்ப்பது வேறுபடும்.

மேற்சொன்ன இந்த தகவல் சூரியனுக்கு பொருந்தாது. சூரியன் காலையில் உதிக்கும் பொது ஜப்பானில் எந்த அளவு இருந்ததோ அதே அளவு தான் ஜெர்மனியில் உதிக்கும் பொழுது இருக்கும். நேரம் வித்தியாசப்படும்.

அந்ததந்த நாடுகளில், மாநிலத்தில், அண்டை மாநிலத்தில் தெரியும் பிறை தான் கணக்கில் கொள்ளப்படும் என்பவர்களுக்கு, கேரளாவில் தெரிந்த பிறையை கணக்கில் கொள்ளாமல், ஒருமுறை மலகோனில் தென்பட்ட பிறையை கணக்கில் கொண்டது எதற்கு என்று விளங்கவில்லை.

சரி அதெல்லாம் போகட்டும், ஹாஜிகள் அரபா மைதானத்தில் இருக்கும் தினம் தானே அரபா தினம், மற்றவர்களுக்கு நோன்பு பிடிக்க வேண்டிய நாள், அடுத்த நாள் ஹஜ்ஜு பெருநாள். இது உலக மக்களுக்காக சொல்லப்பட்ட ஹதிஸா? இல்லை அரபியர்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட ஹதிஸா?

நடுநிலையானவர்கள் சிந்திப்பார்கள். இந்த கருத்து சிந்திப்பதற்கு மற்றுமே தவிர தர்க்கம் புரிவதற்கு அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. விவாதமில்லை. புரிந்துகொள்ளல் மட்டுமே.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [10 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30063

விவாதமில்லை. புரிந்துகொள்ளல் மட்டுமே.

இப்படித்தான் வாழனும் !!!
இப்படியும் வாழலாம் !!!
எப்படியும் வாழலாம் !!!!

இது மற்ற விஷயங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் மார்க்க விஷயங்களுக்கு இது பொருந்தாது. எப்படிவேண்டுமானாலும் விதிகளை மாற்றி தொழுகலாம் அல்லது எப்படிவேண்டுமானாலும் விதிகளை மாற்றி நோன்பு பிடிக்கலாம் அல்லது எப்படிவேண்டுமானாலும் விதிகளை மாற்றி பெருநாள் கடைபிடிக்கலாம் எப்படிவேண்டுமானாலும் விதிகளை மாற்றி ஜகாத் கொடுக்கலாம் , விதிகளை மாற்றி எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நாம் ஹஜ் செய்யலாம், விதிகளை மாற்றி எந்த நாட்களில் வேண்டுமானாலும் ஜும்மா தொழுகலாம் என்று சொல்ல முடியாது. இப்படித்தான் இன்னின்ன விஷயங்களை செய்ய வேண்டும் என நம் மார்க்கம் சில விதிமுறைகளை நமக்கு தந்திருக்கிறது. அதையே நாம் என்றும் follow பண்ண வேண்டுமே தவிர நம் மனம் போன போக்கில் மாற்றம் கொண்டு வர நம்மால் முடியாது.அது கூடவும் கூடாது.

ஒரு கம்பெனியில் வேலை செய்யும்போதே எவ்வளவு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதிருக்கிறது? இன்ன உடைதான் உடுத்த வேண்டும். இத்தனை மணிக்குத்தான் வரவேண்டும். இதனை நாட்கள் வேலை செய்ய வேண்டும் என விதி இருக்கிறதே? மார்க்க விஷயங்களில் மனம் போன போக்கில் செயல் பட முடியுமா என்ன ?

உதாரணமாக , கடந்த 9.8.2013 தேதி நம் ஊரிலும் , தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நோன்பு பெருநாள் கடைபிடிக்கப்பட்டது.இந்த 9.8.2013 பெருநாள் கடைபிடித்ததை தவறு என வாதிடுவோர் , நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் செய்தது தவறா என சற்று சிந்திக்க வேண்டும்.ஊரின் அனைத்து உலமாக்கள் கூடித்தான் இம்மாதிரி ஒரு முடிவு எடுக்கின்றனர்.

இதற்கென்றே ஒரு கமிட்டி உள்ளது. மாவட்டத்திற்கென ஒரு காஜி உள்ளார். சென்னை பெருநகரத்திற்கென ஒரு காஜியும் உள்ளார். மற்ற பெரு நகரங்களுக்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் என பல்வேறு காஜிகள் உள்ளனர். இவர்கள் சொல்வதெல்லாம் தவறா? எங்கள் முன்னோர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற நொண்டி சாக்கு சொல்லியா இந்த உலமாக்கள் முடிவு எடுக்கின்றனர்? ஏன் உங்களுக்கு மட்டும் இதில் ஒரு முரண்பாடு? மெத்த --------------லா ? அல்லது உங்களுக்குத்தான் மார்க்க விஷயங்கள் எல்லாம் தெரியும் என்பதினாலா?

பிறந்த ஊரிலும் பிறந்த நாட்டிலும் வழிகாட்டுவதற்கு ஆலிம்கள் இருக்கும்போது , நாம் ஏன் அண்டைநாட்டு வழிகாட்டுதலை தேடி போக வேண்டும்? நாம் ஏன் அண்டார்டிகா வரை செல்ல வேண்டும்?

எது எப்படி இருப்பினும் சரி . மார்க்க விஷயங்களில் முரண்பாடாக இருந்து , முஸ்லிம்கள் பிளவுபட நாம் காரணமாக இருக்கக்கூடாது.

நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். நேரமின்மை மற்றும் படிப்பவர்களுக்கு போரடிக்க கூடாது என்பதால் மேலும் விவரிக்க விரும்பவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by T.S.A. Aboothahir (chennai) [10 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30064

இரட்டை அளவு கோள்?

டியர் அட்மின் அஸ்ஸலாமு அலைக்கும். செய்தி தளமான இந்த பகுதியை விவாத களமாக நீங்கள் தான் மாற்றுகிறீர்கள். செய்தி அல்லாத விவாத தொடர்பான தகவலை தருகிறீர்கள். அது குறித்து நா(ன்)ங்கள் பதிவு செய்யும் கருத்தை விவாதம் என காரணம் கூறி REGECT செய்து விடுகிறீர்கள். இது என்ன இரட்டை அளவு கோள்? என்பது புரியவில்லை.

உங்களிடம் சில கேள்விகள்? இந்தோனேசியா, தென் ஆப்ரிக்காவில் பார்க்கப்பட்ட பிறைக்கும் காயல் இணைய தளத்திற்கும் என்ன தொடர்பு?

சகோதரர் ரில்வான் நிறைய கேள்வி கேட்டிருக்கிறாரே அதற்கு நா(ன்)ங்கள் பதில் எழுதினால் அதையும் விவாதம் என காரணம் கூறி REGECT செய்து விடுகிறீர்கள் தானே? பிறகு ஏன் அத்தனை கேள்விகளை பதிவு செய்கிறீர்கள்?

கையை கட்டி விட்டு களத்தில் இறங்க சொன்னால் எப்படி? கொஞ்சம் நடுநிலை பேணக் கூடாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.M.I.Zakariya (CHENNAI) [11 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30069

இந்தோனேசியாவில் பிறை தெரிந்த செய்தியை போட்டால் அதை தொடர்ந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும்.அல்லது comments ல் கைவைக்காமல் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லை கம்மென்ட்களுக்கு சரியான விளக்கமாவது கொடுக்கவேண்டும் அதுவும் இல்லை ஆகமொத்தத்தில் kayalpatnam.com தனது குழப்பத்தை தொடர்கிறது.

கமெண்ட்ஸ் யை வெட்டினாலும் சரி அல்லது விட்டாலும் சரி எனக்கு தெரிந்த சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன்.

ஒருக்காலத்தில் பெருநாளை சீக்கிரம் கொண்டு வர விரும்பியவர்கள் இப்போது மாற்று கருத்தில் உள்ளனர். காரணம் ego ஏனன்றால் மற்றவர்கள் சொல்வதை நாம் ஏன் ஏற்றுகொள்வது என் நினைக்கிறார்கள்.

கேரளாவிலும் சிறிலங்காவிலும் தெரிந்த பிறையை வைத்து பெருநாள் கொண்டாடினார்கள். சென்னையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் பத்தாவது படிக்கும் பொது கூட சென்னையில் ஒரு நாள் பெருநாளும் அதற்கு முந்தைய நாளில் நமது ஊரிலும் பெருநாள் கொண்டாடியதை நான் அறிவேன்.

இப்போது இதையெல்லாம் மறுக்கிறார்கள் சில வருடங்களுக்கு முன்னாள் tntj வினர் பெருநாளை காஜியின் அறிவிப்பை ஏற்காமல் அடுத்த நாள் கொண்டாடிய பொது அதையும் விமர்சித்தார்கள். ஆகமொத்தத்தில் நான் என்று பெருநாள் கொண்டடுகிறேனோ அன்று மற்றவர்கள் கொண்டாடினால் அது ஒற்றுமை இல்லையேல் குழப்பம் விளைவிக்கிறார்கள் என்ற பட்டதை மாற்று கருத்து உள்ளவர்களுக்கு வழங்கி விடுகிறார்கள் இது தான் உண்மை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved