Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:40 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11411
#KOTW11411
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 29, 2013
நகர்மன்றத் தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள மனுவில் இடம்பெற்றுள்ள சட்டப்பிரிவுகள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3903 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக்கை பதவி நீக்கம் செய்ய காயல்பட்டினம் நகராட்சியின் உறுப்பினர்கள் 16 பேர் கையெழுத்திட்ட மனுவினை - நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் மற்றும் 12வது வார்டு உறுப்பினர் ஆர்.ரங்கநாதன் என்ற சுகு ஆகியோர் - ஜூலை 11 அன்று திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் - டி.மோகனிடம் சமர்ப்பித்தனர்.

12 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அந்த மனுவில் நகர்மன்றத் தலைவர் விதிகளை மீறியதாக மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் (TAMIL NADU DISTRICT MUNICIPALITIES ACT 1920) சில பிரிவுகளையும் (பிரிவு 13(c), 13-A, 22, 25, Schedule III), நகராட்சி நடைமுறை நூலின் (MUNICIPAL MANUAL) ஒரு பிரிவையும் (பிரிவு 59) - உறுப்பினர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

அந்த பிரிவுகள் என்ன கூறுகிறது என்பதனை கீழே காணலாம். இப்பிரிவுகளில் Executive Authority என்பது ஆணையரை குறிக்கும்:

மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 (TAMIL NADU DISTRICT MUNICIPALITIES ACT 1920)

13. FUNCTIONS OF THE CHAIRMAN

The Chairman of the municipal council shall -

(a) make arrangements for the election of the vice-chairman;

(b) convene the meetings of the council; and

(c) perform all the duties and exercise all the powers specifically imposed or conferred on the chairman by this act

13. தலைவரின் செய்கடமைகள்

நகராட்சி மன்றத்தின் தலைவர் (a) துணைத் தலைவருக்கான தேர்தல் ஏற்பாடுகளைச் செய்திடுவார்; (b) மன்றத்தின் கூட்டங்களை கூட்டுவார்; மற்றும் (c) இச்சட்டத்தின் கீழ் சிறப்பாக அளிக்கப்பட்டுள்ள (அ) விதிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் செயலுறுத்துவார் மற்றும் கடமைகளையும் ஆற்றிடுவார்.

13-A. FUNCTIONS OF THE EXECUTIVE AUTHORITY

The executive authority of the municipal council shall -

(a) carry into effect the resolutions of the council

(b) furnish to the council such periodical reports regarding the progress made in carrying out the resolutions of that body in the collection of taxes as the council may direct; and

(c) perform all the duties and exercise all the powers specifically imposed or conferred on the executive authority by this Act and subject, whenever it is hereinafter expressly so provided, to the sanction of the council, and subject to all other restrictions, limitations and conditions hereinafter imposed, exercise power for the purpose of carrying out the provisions of this Act and be directly responsible for the due fulfilment of the purposes of this Act

13-A. செயலாட்சி அதிகாரியின் செய்கடமைகள்

நகராட்சி மன்றத்தின் செயல் அதிகாரியானவர் (a) மன்றத்தின் தீர்மானங்களை செல்லாற்றலுக்கு கொண்டு வருவார்; மற்றும் (b) மன்றம் நெறியுறுத்தியுள்ளவாறு வரி வசூல் தொடர்பான் மன்ற தீர்மானங்களை செயலுக்கு கொண்டு வருதலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து மன்றத்திற்கு காலமுறை அறிக்கைகள் அளித்திடுவார்; மற்றும் (c) செயல் அலுவலருக்குத் திட்டவட்டமாக விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றிவருதலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்திவருதலும் வேண்டும்; இந்தச் சட்டத்தினாலோ அதன்படியாகவோ, விதிக்கப்பட்ட வரைக்கட்டுகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்திற்கும் உட்பட்டு இந்தச் சட்டத்தின் வகைமுரைகளை நிறைவேற்றிவரும் பொருட்டு, நிருவாக அதிகாரத்தைச் செலுத்தி வருதல் வேண்டும்; அந்த நோக்கங்களை உரியவாறு நிறைவு செய்வதற்கு நேரடியாகப் பொறுப்புடையதாயிருத்தல் வேண்டும்

22. EXECUTIVE AUTHORITY TO CARRY OUT COUNCIL'S RESOLUTIONS

The executive authority shall be bound to give effect to every resolution of the council unless such resolution is modified, suspended or cancelled by a controlling authority

22. மன்றத்தின் தீர்மானத்தினை செயலுக்கு கொணர்ந்திட செயலாட்சி அதிகாரியின் கடப்பாடு கடப்பாடு:

செயலாட்சி அதிகாரியானவர் மன்றத்தின் ஒவ்வொரு தீர்மானத்தினையும், அத்தீர்மானம் கட்டுப்பாட்டு அதிகாரியினால் மாற்றமைவு, நிறுத்திசைவு அல்லது நீக்கறிவு செய்யப்பட்டாலன்றி செயலுக்கு கொணர்ந்திட கட்டுப்பட்டவராவார்.

25. RULES AND REGULATIONS FOR PROCEEDINGS OF COUNCIL

The council shall observe the rules in Schedule III and may make regulations not inconsistent therewith or with other provisions of this Act or any rules made by the State Government in regard to the following matters :-

(a) the time and place of its meetings;

(b) the manner in which notice thereof shall be given;

(c) the preservation of order and the conduct of proceedings at meetings, and the powers, which the chairman may exercise for the purpose of enforcing his decisions on points of order

(d) the division of duties among the members of the council;

(e) the constitution and procedure of committees;

(f) the delegation of its powers, duties or functions

     (i) to the chairman, a councillor, an officer or servant of the council or a servant of the Government; or

     (ii) to a committee constituted under clause (e) or to its chairman or to any one or more of its members;

(g) the persons by whom receipts may be granted for money paid to the council; and

(h) all other similar matters

25. மன்ற நடவடிக்கைக்கான விதிகள் மற்றும் விதிமுறைகள்

மன்றமானது இணைப்பு III-இல் உள்ள விதிகளை கடைப்பிடித்திடும் மற்றும் அரசினால் இயற்றப்பட்ட சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணின்றி கீழ்க்காண் பொருட்பாடுகள் தொடர்பாக விதிமுறைகளை உருவாக்கிடும்

(a) அதன் கூட்டங்களின் நேரம் மற்றும் இடம்

(b) அறிவிக்கை கொடுக்கப்படவேண்டிய முறை பற்றி

(c) கூட்ட நடவடிக்கைகளை நடத்துதல் மற்றும் ஒழுங்கினைக்காத்தல் மற்றும் தலைமையர் தனது முடிவுகளை செயலுறுத்தும் நோக்கத்திற்கான அவரின் அதிகாரங்கள்

(d) மன்ற உறுப்பினர்களிடையே கடமைகளின் பகிர்வு

(e) குழுக்களின் அமைப்பு மற்றும் நடைமுறைகள்

(f) அதன் அதிகாரங்கள், கடமைகள் அல்லது செய்கடமைகளின் அளிப்படைவு :-

     (i) தலைமையருக்கு, மன்றத்தவருக்கு, மன்றத்தின் அலுவலர் அல்லது பணியாளுக்கு (அ) அரசு ஊழியர் ஒருவருக்கு; அல்லது

      (ii) கூறு (e)யின் கீழ் அமைக்கப்பட்ட குழுவிற்கு (அ) அதன் தலைவருக்கு (அ) அதன் உறுப்பினர்களின் ஒருவருக்கு அல்லது மேற்பட்டவருக்கு

(g) மன்றத்திற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது கொடுத்திட வேண்டிய நபர்கள்; மற்றும்

(h) அதே போன்று அனைத்து பொருட்பாடுகள்

SCHEDULE III

RULES REGARDING PROCEEDINGS OF THE COUNCIL
(SEE SECTION 25)
MODE OF TRANSACTING BUSINESS


1. The municipal council shall provide an office and the council shall meet therein for the transaction of business at least once in every month, upon such days and at such times as it may arrange and also at other times as often as a meeting shall be called by the chairman;

provided that no meeting shall be held on a public holiday

Explanation - The expression 'public holiday' includes Sunday and any other day declared by the State Government, by notification in the Official Gazette, to be a public holiday

2.

(1) No meeting shall be held unless notice of the day and time when the meeting is to be held and of the business to be transacted thereat has been given at least three clear days before the day of the meeting

(2) In cases of urgency, the chairman may convene a meeting on giving shorter notice than that specified in sub-rule (1)

(3) In muncipalities in which there is a commissioner, the agenda for the meeting shall be prepared by the commissioner in consultation with the chairman. The commissioner may include in the agenda any subject which in this opinion should be considered by the council and shall include therein any subject specified by the chairman. On any subject included in the agenda, the chairman as well as the commissioner shall have the right of recording his views in a note and such note shall be circulated to the councillors or placed before the council before or at the time of the consideration of such subject by the council

      3. (1) The chairman shall, on the requisition in writing of not less than one-third of the members then on the council, convene a meeting of the council, provided that the requisition specifies the day (not being a public holiday as defined in the Explanation to rule (1) when and the purpose for which the meeting is to be held. Only urgent matters of local importance relating to municipal administration which cannot wait till the next ordinary or urgent meeting shall be considered at special meetings and not more than one subject shall be considered at such meetings. The requisition shall be delivered at the muncipal office during office hours to the chairman, secretary, manager or any other person who may then be in charge of the office at least ten clear days before the day of the meeting.

      3. (2) If the chairman fails within forty-eight hours from the delivery of such requisition to call a meeting on the day specified therein, or within three days thereafter, the meeting may be called by the members who signed the requisition on giving the notice provided for in sub-rule (1) of rule 2 to the other members of the council

4. All meetings of the council shall be open to the public; provided that the presiding member may and at the request of the council shall, in any particular case, for reasons to be recorded in the minute book kept under rule 9, direct that the public generally, or any particular person, shall withdraw

5. All questions which may come before the council at any meeting shall be decided by a majority of the members present and voting at the meeting and, in every case of equality of votes, the presiding member shall have and exercise a second or casting vote

6. No business shall be transacted at a meeting unless there be present at least six members or, if the number of members then on the council exceeds sixteen, at least one-third of that number

7. If within half an hour after the time appointed for a meeting, a quorum is not present, the meeting shall stand adjourned, unless all the members present agreet to wait longer

8. No resolution of the council shall be modified or cancelled within three months after the passing thereof except at a meeting specially convened in that behalf and by a resolution of the council supported by not less than one-half of the sanctioned number of members

9. Minutes of the proceedings at each meeting of the council shall be drawn up and entered in a book to be kept for that purpose; and shall be signed by the presiding member or in his absence by some one of the members present thereat; and the said minutes shall, at all reasonable times and without charge, be open at the muncipal office to the inspection of any person who pays any tax under this Act in the muncipality

10. Within three days of the date of the meeting, a copy of the minutes of the proceedings at such meeting in English and in the language of the district, shall be forwarded by the chairman to the Collector of the district, and another copy to the Director of Municipal Administration of Municipal Councils and Local Boards of the range in which the municipality is situated. An authenticated copy of the said minutes shall also be affixed to the notice board of the municipal office and relevant extracts of the said minutes shall be sent to the heads of officers appointed under sub-section (1) of section 38 for information and necessary action. The chairman shall also immediately submit to the said Collector any minute of dissent that may be forwarded to him within forty-eight hours of the meeting by any councillor

11. The executive authority shall have the custody of the proceedings and records of the council and may grant copies of any such proceedings and records on payment of such fees as the council may, by general or special order, determine. Copies shall be certified by the executive authority as provided in section 76 of the Indian Evidence Act, 1872 (Central Act 1 of 1872) and copies so certified may be used to prove the records of the council in the same manner as they may, under sub-section (5) of section 78 of the said Act, be used to prove the proceedings of that body

11-A. The committees constituted by the council under section 23 as well as the committees constituted under the provisio to section 68(1) and under section 73 shall meet in the office provided by the muncipal council under rule 1.

12. The proceedings of every committee appointed by the council shall be recorded in writing and submitted to the council.

நகராட்சி நடைமுறை நூல் (MUNICIPAL MANUAL; VOLUME 1 PART 2 CHAPTER 3 ARTICLE 59)

59. Minutes Book -

The Minutes book of the Municipal Council is a document to be placed in the Municipal Office in the custody of the Commissioner which should be made available for inspection by any rate payer during office hours. An extract of the proceedings of the Council can be granted to any body who requires it. The minute book of the Municipal Council should not be sent out of the Municipal Office for outside references except when summoned by a court of Law

59. தீர்மானங்கள் புத்தகம்

தீர்மானங்கள் புத்தகம் என்பது நகராட்சியின் ஆணையர் பாதுகாப்பில் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்படவேண்டிய ஆவணம் ஆகும். வரிக்கட்டும் யாவரும் அலுவலக நேரத்தில் அப்புத்தகத்தை பார்வையிட அனுமதிக்கவேண்டும். கூட்ட நடப்புகள் குறித்த நகலினை தேவையான யாருக்கும் கொடுக்கலாம். நீதிமன்றம் கேட்டுகொண்டால் ஒழிய தீர்மான புத்தகத்தை பார்வையிடுவதற்காக நகர்மன்ற அலுவலகத்தை விட்டு வெளியே அனுப்பக்கூடாது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அர்த்தம் விளங்கும் அளவுக்கு இந்த தமிழன் தேர்ச்சி பெறவில்லை...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29042

ஐயா அட்மின் அவர்களே...

மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் (TAMIL NADU DISTRICT MUNICIPALITIES ACT 1920) சில பிரிவுகளையும் (பிரிவு 13(c), 13-A, 22, 25, Schedule III),(பிரிவு 59) அந்த பிரிவுகள் என்ன கூறுகிறது என்பதனை கீழே காணலாம். இப்பிரிவுகளில் Executive Authority என்பது ஆணையரை குறிக்கும்:-

இவைதான் என்னால் இந்த செய்தியின் முடிவில் படிக்க முடிந்தது..!

நீங்கள் இங்க்லீசில் (ஆங்கிலத்தில்) பல பிரிவுகளை மேற்கொள்காட்டி விளக்கம் தந்துள்ளீர்கள்.. வாசகர்களில் சில பேர்களுக்கு இந்த இங்க்லீஸ் விளங்கலாம். மேலும் அது போல் ஒரு சமயம் நகர்மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முழு வீச்சில் இறக்கப்பட்டு இருக்கும் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் இந்த இங்க்லீஸ் (ஆங்கிலம்) இதில் உள்ள அர்த்தம் விளங்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று இருக்கலாம்...! அவர்கள் சம்பந்தப்பட்டது ஆகையால் இதை நன்கு விளங்கி கொள்வார்கள்...

ஆனால்... இந்த பாமர தமிழன் இதை படித்து பின்... அதின் அர்த்தம் விளங்கும் அளவுக்கு இந்த தமிழன் தேர்ச்சி பெறவில்லை...

தமிழில் தந்தால் புரிந்து கொள்வேன்,,, நன்றி...

Administrator: விதிகளின் தமிழாக்கம் தரப்படும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
posted by mackie noohuthambi (kayalpatnam) [29 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29043

சட்ட நுணுக்கங்கள், விதிகள் ஒருபுறம் இருக்கட்டும்.

தமிழக அரசு, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பேசுகிறது. இருமொழி திட்டத்தை கல்வியில் புகுத்தியுள்ளது இப்படி இருக்க, நீதி மன்றங்களில் வழக்காடுவது, வாதாடுவது, தீர்ப்பு அழிப்பது எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும், இருமொழிக் கொள்கையை அரசு அமுல்படுத்த ஆணை பிறப்பித்து சுமார் 50 வருடங்கள் (1967 முதல் ) ஆகி விட்ட பிறகும் மேலே கண்ட அறிக்கைகள் ஆங்கிலத்தில் இருந்தால் சாதாரண மக்கள் அதை எப்படி அறிந்து கொள்ள முடியும், புரிந்து கொள்ள இயலும்.எனவே முதலில் இவற்றை தமிழில் பிரசுரிக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

முதல் அமைச்சர் அவர்கள் சொத்து குவிப்பு வழக்கு வேறு மொழியில் இருந்ததால் அதை தமிழ் மொழி பெயர்த்து தர வேண்டும் என்று கர்நாடகாவில் முதல் அமைச்சர் வாதாடியதாக ஞாபகம். ஒரு சாதாரண் குடி மகனுக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும்.

இதை தமிழ் மயமாக்கி அறிக்கை அனுப்பிய பிறகு சட்டம் என்ன சொல்கிறது என்று சாமானியர்கள் ஊராட்சி மன்றங்களில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் படிக்கட்டும். எழுத்தறிவு விழுக்காடு மிக குறைந்த கிராமங்களில் தமிழே சரியாக படிக்க தெரியாத மக்கள் இருக்கும் நிலையில் ஆங்கிலத்தில் இந்த சட்ட விதிகளை யார் படிக்க போகிறார்கள்.

CRIMINAL WASTE OF MONEY AND ENERGY.

Administrator: விதிகளின் தமிழாக்கம் தரப்படும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (Zhe Cheng , Henan ) [29 July 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29047

நோன்பு நேரத்தின் இறுதி கட்டம் நெருங்கி விட்டது . இபாதத்துகள் அதிகம் செய்ய நேரம் வேண்டும் .

நோன்பு நேரத்தில் அவர்கள்தான் இதுமாதிரியான வேலைகளை செய்தார்கள் . அதற்கு மல்லுகட்டிகொண்டு நீங்களும் இப்படி சட்டம் தெரிந்தவன் நாங்களே என்பதைப் போல காட்டிக்கொண்டு , மக்களுடைய பொன்னான நேரத்தை இப்படி வீணடிக்கிறீர்கள்? தயவு செய்து இதை இப்போதைக்கு நிறுத்திவைத்து, நோன்பு காலம் முடிந்ததும் இதைப்பற்றி விவாதிக்கலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by CADER (JAIPUR) [29 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29050

நோன்பு நேரத்தின் இறுதி கட்டம் நெருங்கி விட்டது . இபாதத்துகள் அதிகம் செய்ய நேரம் வேண்டும் ( C P )

Vilack SMA காக்கா அவர்களே இது உறுப்பினர் அவர்களுக்கும் பொருந்தும் அல்லவா. நீங்கள் இதற்கு முந்தின செய்தியில் இதை ஏன் comments பதியும் பொழுது சொல்லவில்லை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஊடகத்தை செய்தி தரும் பார்வையாக பாருங்கள்...! சகோதரரே எனது இக்கருத்து உங்களுடன் விவாதம் பண்ணுவதற்கு அல்ல...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29053

Vilack SMA அவர்களே... அஸ்ஸலாமு அழைக்கும்... ரமலான் வாழ்த்துக்கள்... ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் அந்நிகழ்வை அன்றோ அல்லது அன்றைய வாரத்திலோ அச்செய்திக்குரிய சம்பந்தப்பட்ட செய்தி தொடர்பின் கோர்வையை ஒரு ஊடகம் தருவதில் என்ன தவறு இருக்கிறது... இதற்க்கு நோன்பு மாதம் - ஹஜ் மாதம் - ஆடி மாதம் என்று பிரித்து பார்க்க என்ன இருக்கிறது...?

தாங்கள் இந்த செய்தியை எப்படி படிக்க நேர்ந்தது...? ஊடகத்தை திறந்ததால்தானே...! ஊடகம் அது (செய்தி தருவது) அதின் கடமையை அது செய்கிறது...! அதில் என்ன ஆபாசமான செய்திகளும், கோர காட்சிகளும், ஆபாச கருத்து வார்த்தைகளுமா... தந்து இருக்கிறார்கள்...? நடுநிலை சிந்தனையோடோ பாருங்கள் சகோதரரே...

சாதாரண மனிதர்கள் 10 - 13 பேர் ஒரு இடத்தில் அமர்ந்து வீண் பேச்சுக்கள் (பசாது) கேலி விளையாட்டுக்களுக்கு உங்கள் (கருத்து) வாதம் பொருந்தும்..

அட்மின் அவர்களுக்கு.... விடப்பட்ட இந்த செய்தியை அதில் கொர்த்துகொள்ளவும்...

நாளிதழ் செய்தியாகட்டும் - இணையதள ஊடகமாகட்டும் அதில் பிற்போக்குத்தனமான செய்திகள் இருக்குமாயின் அதை அம்பலப்படுத்தவும் கடுமையாக விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. அதேவேளையில் அந்த நாளிதழ்லோ - இணையதள ஊடகமோ அதில் செய்தி வெளிவரவே கூடாது என்று தடைவிதிக்கக் கோருவது ஏற்கவியலாதது. அந்த நாளிதழ் செய்தி அல்லது ஊடக செய்தி சரியானது அல்லது தவறானது என்று மக்கள் முடிவு செய்கிற உரிமையைப் பறிப்பது எதிர்காலத்தில் சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாகிவிடும்.

ஊடகத்தை செய்தி தரும் பார்வையாக பாருங்கள்...! சகோதரரே எனது இக்கருத்து உங்களுடன் விவாதம் பண்ணுவதற்கு அல்ல... வஸ்ஸலாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Seyed Mohamed (Bangkok) [29 July 2013]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 29054

அஸ்ஸலாமு அழைக்கும்

தலைவியை பத்தி எதாவது வந்தால் அவர்களுக்கு பெருநாள் கொண்டாட்டம் தான்.

அட்மின் தயவு செய்து அதை தமிழ் ஆக்கம் தாருங்கள் என்போன்றவர்கள் படித்து புரிந்து கொள்கின்றோம். மாசலாம்

இப்படிக்கு
seyed mohamed Sayna
bangkok Thailand
KIM Bangkok

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஓசையின்றி ஓர் மௌனப் புரட்சி உதயமாகின்றது....!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [29 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29059

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உப்பு சத்தியாக்ரகத்திற்கு ஆதரவாக அன்று எழுதிய உணர்வுபூர்வமான கவிதை வரிகள் இன்று நமது நகராட்சிக்குப் பொருந்துவது அதிசயமே...!

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய்
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே...
பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே...

தொகுப்பு: ராபியா மணாளன்.

நன்றி: http://www.gandhitoday.in


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [29 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29062

குற்றம் ஒருவர் மீது சுமத்துவதற்கு முன் சட்டம் தெரிந்து இருக்க வேண்டும்.

நகரமன்ற தலைவியை கவிழ்க்க ஒரேவழி லஞ்சம், ஊழல்தான் வருடம் 2 1/2 தாண்டிவிட்டது. 16 உறுப்பினர்கள் கொடுத்துவந்த குற்றசாட்டல் ஒன்றும் நடந்துவிடாது. இதை விட்டுவிட்டு தலைவியை லஞ்சம், உழல செய்ய வைக்க வழி தேடி மாட்ட வைத்து விட்டு நம்பிக்கை இலக்க செய்யுங்கள்.

உறுப்பினர்கள் யாரும் சட்டம் படித்து வந்தவர்கள் போல தெரியவில்லை, யாரோ சொல்லி செய்வது போலத்தான் தோண்டுகிறது. உங்கள் ஆசை நிறைவேரும்மானால் தலைவியை ஊழல் செய்ய வையுங்கள் - பதவியை பறிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கலங்க போவது யாரு ???
posted by Salai. Mohamed Mohideen (Bangalore) [29 July 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29063

நமது இணையதள அட்மின் அவர்களின் சமூக நலன் சம்பந்த பட்ட அனைத்து விடயங்களிலும் அவருடைய பங்களிப்பு மிக அளப்பரியது. அதற்காக அவரை இக்கமென்ட் மூலம் பாராட்டுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்.

கல்விக்கான தளமாக இருக்கட்டும் அல்லது கான்செர் என்ற கொடிய நோய் அல்லது அதற்கான காரண கர்த்தா DCW வாக இருக்கட்டும் அல்லது நகர்மன்ற விதிகள் சட்ட பிரிவுகள், RTI யாக இருக்கட்டும்... மிக சிரத்தையுடன் தகவல்களை தேடி பிடித்து நம்மையெல்லாம் விழ்ப்புணர்வு அடைய வைத்து பட்டையை கிளப்புகின்றார். இதுதான் ப்ரொபசனல் மீடியாக்களின் தரம். எல்லோரும் இதனை செய்வதில்லை... ஒரு சில மீடியாக்களை தவிர !

பாறையோடு முட்டி மண்டைய உடைத்த கதை தான்... நடுநிலையான நமதூர் இணைய தளங்களும், தங்களின் நியாயமான உணர்வுகளை தரமான ஆணித்தரமான கருத்துக்களாய் பதியும் வாசக பெருமக்களும் மற்றும் பொது மக்களும் தலைவிக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்கும் வரை!!

ஒழுங்காக பணியாற்றாத நகரமன்ற உறுப்பினர்களை வார்டு மக்களே அவர்களை வீட்டுக்கு அனுப்ப சட்டத்தில் எதுவும் இடம் இருக்கிறதா என்று கருத்துக்கள் வாயிலாக பலமுறை வாசகர்கள் கேட்டு விட்டார்கள். அதையும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன். உங்களுக்கு புண்ணியமாக போகும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Vilack SMA (Zhe Cheng , Henan ) [29 July 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29064

நான் சொன்னது , புனித மாதத்தின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டோம் . அதிக இபாதத்துகளில் ஈடுபடும் நேரம் . இந்த நேரத்தில் இது தேவையா ? என்றேன் . ஆனால் நீங்களோ , கருத்து என்ற பெயரில் விதண்டாவாதம் பண்ணுகிறீர் .

மேலும், உறுப்பினர்கள் தலைவிக்கு எதிராக மனுகொடுத்தார்கள் . இது செய்தி. ஆனால் இப்போது வந்திருப்பதோ , அந்த சட்டத்தில் இது இல்லை , இந்த சட்டத்தில் அது இல்லை என்பது போன்று உள்ளது. இது எப்படி செய்தியாக மாறும்? இது விவாதமல்லவா? நோன்பு நேரத்தில் இதுபோன்ற விவாதங்களை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன்.

Moderator: தனிநபர் விமர்சனமாக அமைந்த வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நகராட்சி விதி தெரியாததை காயல்பட்டணம்.காம் மூலம் அறிய தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்...
posted by syed ahamed (KAYALPATNAM ) [29 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29066

தீர்மானங்கள் புத்தகம் என்பது நகராட்சியின் ஆணையர் பாதுகாப்பில் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்படவேண்டிய ஆவணம் ஆகும். வரிக்கட்டும் யாவரும் அலுவலக நேரத்தில் அப்புத்தகத்தை பார்வையிட அனுமதிக்கவேண்டும். கூட்ட நடப்புகள் குறித்த நகலினை தேவையான யாருக்கும் கொடுக்கலாம். c p

அட.. அட.. இந்த செய்தி நகரில் எத்தனை பேருக்கு தெரியும்..?

இது முன் இந்த நகராட்சி விதி தெரியாததை காயல்பட்டணம்.காம் மூலம் அறிய தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்...

சரி நகராட்சியில் போய் தீர்மான புத்தகத்தை நமது பார்வைக்கு நமது வரி பணம் என்ன மாதிரி செலவு செய்ய படிக்கிறது என்று பார்க்கலாம்... வில்லங்கம் ஏதும் பண்ணுவாங்களோ...? பொய் கேஸ் ஏதும் நம் மீது போட்டு விடுவாங்களோ...? அது வேறு யோசனையா இருக்கு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [29 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29071

kayalpatnam.com நிர்வாகத்துக்கு நன்றி. எனது கருத்தை இங்கு சில நண்பர்கள் வழி மொழிந்துள்ளார்கள். நிர்வாகம் தமிழாக்கம் தருவதற்கு முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது.

நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற கவிதை இந்த சாதாரண குப்பை கொட்டும் அரசியலுக்கு பொருந்தாது. அது ஒரு சுதந்திர வேட்கையின் வெளிப்பாடு. ஆனாலும் கவிதை படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. எதுகை மோனை, தமிழ் வளம் என்னை மிகவும் கவர்ந்தது. எனது நாட் குறிப்பில் அதை ஏற்றி வைத்துள்ளேன். களம் அமைத்து தந்த சகோதரருக்கும் நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [29 July 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29072

அஸ்ஸலாமு அலைக்கும்.

சார் தாங்கள் இந்த கட்டுரையின் தமிழில் விளக்கத்தை தந்தாள் .....நாங்கள் உள் அர்தத்தை முழுமையாகவே தெரிந்து கொள்ள வசதியாகவே இருக்கும் அல்லவா .......

அருமை நண்பர் .ஹாஜி .P.S.ABDUL KADER அவர்கள் குறிப்பிட்டது போல படித்தவர்கள் தான் மக்களுக்கு தேவையான இது போன்ற பதவிகளுக்கு வரவேணும் என்று ஒரு சட்டம் வந்தால் தான் ...பொது மக்கள் அறிவு பூர்வமான பல நல்ல திட்டங்களை பெற முடியும்.....

நண்பர் சொன்னது போல நம் நேர்மையான நல்ல தலைவி அவர்களை ஊர் பொது மக்களுக்கு நல்ல செயல்களை செய்ய விடாமல் ....அப்படியே தூக்கி எரிய வேண்டுமாயின்....நம் உறுப்பினர்கள் நமது நேர்மையான தலைவி அவர்களை ''' லஞ்சம் '''வாங்க வைத்து ....நம் தலைவி அவர்களை அதன் மூலம் தான் நீங்கள் இவரை வெளி ஏற்ற முடியுமே தவிர ....மற்ற படி உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது .....காரணம்.....

நம் தலைவி அவர்கள் ஒன்றும் உங்களால் தேர்வு செய்ய பட்டவர் அல்ல ....நீங்கள் நினைத்தால் தூக்கி எரிய .... நம் தலைவி அவர்கள் நமது ஊர் அனைத்து பகுதி பொது மக்களால் ஒருமனதாகவே அமோகமான முறையில் ஒட்டு மொத்தமாகவே தேர்வு செய்ய பட்டவர் ....என்பதை .....நீங்கள் யாவர்களும் அடிக்கடி ...மறந்து செயல் படுகிறீர்கள் .... என்பது தான் உண்மை ....

நம் சட்டம் பொது மக்களால் தேர்வு செய்ய பட்ட நேர்மையான .... பொது மக்களுக்கு நல்லதே செய்யணும் என்று நினைக்க கூடிய ....ஒரு ஆற்றல் உள்ள தலைவியை ஒற்றுமே செய்யாது....சட்டம் பொது மக்களுக்கு நல்லதைத்தான் செய்யும் ....என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேணும் ...........நமது மரியாதைக்குரிய தமிழக அரசு அதிகாரிகளும் நன்கு விசாரித்து தான் முடிவு செய்வார்கள் ....சும்மா கண்ணை மூடி கொண்டு முடிவு செய்யமாட்டார்கள் .... என்பதையும் உறுப்பினர்களாகிய நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேணும் .

சும்மா ...சும்மா ...நீங்கள் யாவர்களும் நேரத்தை வேஸ்டு பண்ணாமல் தங்களை முழுக்க நம்பி ஒட்டு போட்ட தங்கள் தொகுதி பொது மக்களுக்கு நல்லதை செய்யுங்கள் ....அதை பற்றியே PLZ யோசியுங்கள் அதான் நல்லது .....

2 1/2 வருடங்கள் ஆகியது தான் மிச்சம் ....ஊருக்கு நல்லது எதுவுமே நடக்க விடாமல் நீங்கள் தடுத்தது தான் மிச்சம் ....மிச்சம் ...நீங்கள் தலைவி மீதான மனு கொடுப்பதை முதலில் நிறுத்தினாலே போதும் ....உங்கள் யாவர்களின் கவனமும் தொகுதி மக்கள் மீது திரும்பும் ......

தங்களின் இணைய தளம் மூலம் தான் நாங்கள் பல நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது .....மாஷா அல்லாஹ் தங்கள் இணைய தளத்தை யாம் எப்படி தான் பாராட்டுவதென்று புரிய வில்லை ....தங்களின் நமது ஊருக்கான பொது சேவைகள் தொடரவும் .....வாழ்த்தி ....துவா செய்கிறேன் ..........

>>>>தங்களின் வெற்றியின் முனைதான் .....எங்களின் வெற்றியின் ஆரம்ப முதல் படி <<<< வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [30 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29082

Thanks Admin for throwing some lights.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved