Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:33:04 AM
வியாழன் | 9 மே 2024 | துல்ஹஜ் 1743, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:46
மறைவு18:28மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11248
#KOTW11248
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 12, 2013
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4211 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (55) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், நேற்று (ஜூலை 11) இரவு 11.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81. அன்னார்,

மர்ஹூம் முத்து தைக்கா முஹம்மத் முஹ்யித்தீன் முத்துவாப்பா கருத்தம்பி ஆலிம் என்பவரின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி சொளுக்கு மு.க.செய்யிது அபூதாஹிர் ஆலிம் என்பவரின் மருமகனும்,

காயல்பட்டினம் அப்பா பள்ளியின் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.ஹாஜா முஹ்யித்தீன், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் கணக்கர் மர்ஹூம் டி.எம்.கே.நூகுத்தம்பி (கணக்குப்பிள்ளை) ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜ்ஜா எஸ்.ஏ.பால் ஆமினா என்பவரின் கணவரும்,

அல்ஹாஜ் சொளுக்கு செ.யி.முஹம்மது அப்துல் காதர், சொளுக்கு S.A.பாதுல் அஸ்ஹப் ஆகியோரின் மச்சானும்,

அமீரக காயல் நல மன்றத்தின் செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், (கைபேசி எண்: +971 55 8594 800) ஹாஜ்ஜா டி.எஸ்.ஏ.கதீஜா உம்மாள் ஆலிமா முஅஸ்கரிய்யா, டி.எஸ்.ஏ,ஹாத்தூன் பீவி ஆலிமா முஅஸ்கரிய்யா, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ (கைபேசி எண்: +91 97909 67213) ஆகியோரின் தந்தையும்,

எஸ்.எச்.அஹ்மத் முஸ்தஃபா, மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ ஆகியோரின் மாமனாரும்,

டி.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, டி.எம்.என்.ஸூஃபீ ஹுஸைன், டி.எச்.எம்.ஷெய்கு அலீ, மவ்லவீ ஹாஃபிழ் டி.எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸீ, அப்பா பள்ளியின் இமாம் ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.



அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூலை 12 வெள்ளிக்கிழமை) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
மற்றும்
நோனா உவைஸ்னா லெப்பை


[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 02:20 / 12.07.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத்) [12 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28564

அஸ்ஸலாமு அலைக்கும். இறையருள் நிறைக.

எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் சொந்தமான ஹாஜி சுல்தான் அப்துல் காதிர் மாமா முன்னால் குருவித்துறைப்பள்ளி பேஷ் இமாம் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்ட செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

இறைவன் நாட்டப்படி நடந்த நிகழ்வுக்கு நாம் பொறுமைகாக்க கடமைப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து மண்ணறையை வெளிச்சமாக்கி மேலான சுவனலோக பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

அன்னாரைப் பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் கொடுத்து இழப்பிற்கு ஈடான பிரதிபலனை விரைவில் கொடுத்தருள்வானாக ஆமீன். மேலும் எனது சலாம் அஸ்சலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S ABDUL KADER (KAYALPATNAM) [12 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28565

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Basheer Ali (KSA) [12 July 2013]
IP: 166.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28566

May Allah forgive his sins and grant him Jennah Al Firdous . Amin

Salaams to deceased kith and kin .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [12 July 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28567

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை. அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abbas (Los Angeles) [12 July 2013]
IP: 74.*.*.* United States | Comment Reference Number: 28568

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எனது நன்பனின் தந்தை மரணம் செய்தி கேட்டு மிகுந்த கவலை கொண்டுள்ளோம். அல்லாஹ் மர்ஹூமின் பாவங்களை மன்னித்து அவர்களுடைய கபூரை விசாலமாக்கி வேதனைகளில் இருந்து பாதுகாத்து நாளை மறுமையில் உயர்ந்த சொர்கத்தின் பதவியை கொடுப்பானாக அமீன்

பாசமிக்க அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய சலாமும் மேலும் பொறுமையும் அல்லாஹ் வழங்க பிரார்த்திக்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [12 July 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28569

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [12 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28570

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...

எங்களின் அன்பிற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து கவலை கொண்டாலும், இறைவனின் கட்டளைக்குட்பட்டு நடந்தவற்றை நினைத்து சபூர் செய்து கொண்டேன். அல்லாஹுத்தாலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னார் குடும்பத்தார் அனைவர்களும் சபூர் எனும் அழகிய பொருமைதனை கடைபிடித்து, அவர்களுக்காக நாம் 'துஆ' செய்வோமாக!

மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு என் சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [12 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28571

அன்பும் மிகுந்த பாசமும் நிறைந்த சுல்தான் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

காலம் தவறாமை, பெரியவர் சிறியவர் அனைவரிடமும் மிகுந்த மரியாதை, ஏழை பணக்காரன் என்று யார் நிகழ்சிக்கு அழைத்தாலும் குறித்த நேரத்தில் செல்வது, அந்த நிகழ்ச்சிக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் குறித்த நேரத்தில் துவக்கி ஆரம்பித்து வைக்கும் சீரிய பாங்கு, மார்க்க சட்ட விசயங்களில் மிக சரளமாக வெளிபடுத்தும் தன்மை அப்படிப்பட்ட நல்ல மாமனிதர் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட இந்த துயர சம்பவத்துக்கு அன்பு நண்பன் யஹ்யா, அபூதாகிர் ஆலிம் உள்ளிட்ட குடும்பத்தினர் யாவரும் சபூர் செய்து கொள்வீர்களாக.

எல்லாம் வல்ல அல்லா மர்ஹூம் அவர்களின் பிழை தன்னை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்!
posted by kader meeran sahib (Riyadh) [12 July 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28572

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவர்க்கத்தில் நபியவர்களுடனையே இருக்க செய்வானாக. ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.N.SULAIMAN (RIYADH) [12 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28573

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பெரியப்பா அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை அடைந்தோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகரவும் செய்வானாக ஆமீன்.

M.N.SULAIMAN
M.N.HASSAN
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohamed abdul kader (dubai) [12 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28574

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...INNAA LILLAHI WA INNA ILAIHI RAAJIUOON
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [12 July 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28575

அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹு மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் நுழைய செய்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தார் யாவர்களும் அல்லாஹுவுக்காக சபூர் செய்து கொள்ளவும்.

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. انا لله وانا اليه راجعون
posted by s.s.md meerasahib (TVM) [12 July 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28576

அஸ்ஸலாமு அலைக்கும்.للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة

அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by s.a.m.mohideen thambi (kayalpainam) [12 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 28577

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed(AKSA) (HONG KONG) [12 July 2013]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 28578

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Fasi Ismail (Hebei) [12 July 2013]
IP: 111.*.*.* China | Comment Reference Number: 28579

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய சலாத்தை தெரிவிக்கிறேன், அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [12 July 2013]
IP: 120.*.*.* Hong Kong | Comment Reference Number: 28580

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. condolence
posted by syedahmed (GZ, China) [12 July 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 28581

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக அமீன். அன்னார் குடும்பத்தாருக்கு சபூர் செய்ய வேண்டி சலாம் சொல்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [12 July 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 28582

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [12 July 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28583

Innalillahi wa inna ilaihi raajiyun. May Allah forgive his sins and place him in jannath.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [12 July 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28584

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...கோண்டோலேன்செஸ்
posted by Seyed ahamed fareed (Chennai ) [12 July 2013]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 28585

இன்னா லில்லாஹி ஒ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by வெள்ளி முஹம்மது முஹியதீண் (சென்னை) [12 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28586

அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்ணியத்திற்குரிய எங்கள் உஸ்தாது அவர்களிண் வபாஃத்து நமது ஊருக்கும், எங்களது முஹல்லாவிற்கும் ஏற்பட்ட பெறிய இழப்பாகும். எல்லாம் வள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணரையை சுவணத்து பூங்காவாக ஆக்கி அருள்வானாக - ஆமீண்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by H.M.SEYED AHAMED (Tiruchy) [12 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28587

Inna lillahi wa inna ialaihi raajivoon .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Ismail Sufi (Muscat) [12 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28589

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் .

இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. எல்லோருக்கும் பிடித்தமானவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [12 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28590

என் பாசத்திற்குரிய சுல்தான் மாமா அவர்கள், என் தந்தையிடம் கூட, தன் மகனைப் பார்த்துப் பேசுவது போல் பேசுவார்கள். எங்கள் தந்தையிடம் - ஒரு மனைவியாக எங்கள் தாயாரோ, மக்களாக நாங்களோ ஏதேனும் சொல்ல வேண்டியிருந்து, அதில் தயக்கமிருந்தால், நாங்கள் நாடும் முக்கியமான பெரியவர் இவர்கள்தான். உடனடியாக எங்கள் தந்தையைக் கண்டு, உரிமையுடன் பேசி குறையைக் களைவார்கள். இவர்களது பேச்சுக்கு என் தந்தையும் பெட்டிப் பாம்பாய் இருப்பார்கள். தங்கள் வயதைக் கருத்திற்கொள்ளாத அவர்களின் இந்த நடவடிக்கை எங்களுக்கு வியப்பைத் தரும்.

நுஸ்கீ காக்கா சொன்னது போல, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகட்டும், குருவித்துறைப் பள்ளியாகட்டும்! எந்த நிகழ்வானாலும், குறித்த நேரத்தில் அவர்கள் முதலாமவராக வந்திருப்பார்கள். யாருக்காகவும் பொது நிகழ்ச்சிகள் காலம் தவறக்கூடாது என்று கண்டிப்புடன் இருந்தவர்கள்.

சிறுபிள்ளைகளுக்கு திருமறை குர்ஆனையும், இஸ்லாமிய சட்ட விளக்கங்களையும் அவர்கள் கற்றுத் தந்துகொண்டேயிருப்பார்கள். சாதாரண மாணவர்களை திருக்குர்ஆனை மனனம் செய்ய வைப்பதே பெரிய விஷயம். ஆனால் இவர்கள், கண் பார்வையற்ற சில மாணவர்களை ஹாஃபிழாக்கியவர்கள்.

அறிமுகமானவர்களை அழைத்து அழைத்து குசலம் விசாரிப்பதிலும், அறிமுகமற்றவர்களை அழைத்து குடும்ப விபரங்களைக் கேட்டறிவதிலும், அவர்களுக்கு ஏதேனும் சொல்லவியலா தங்கடங்கள் இருந்தால், தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து, காதும் காதும் வைத்தாற்போல் கச்சிதமாக காரியத்தை முடிப்பார்கள்.

பழைய கால சரித்திரங்களை, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி அவர்கள் உடல் பாவனைகளுடன் சொல்வதைக் கேட்டுக்கொண்டேயிரலாம்.

இத்தனைக்கும் சொந்தக்காரர் இன்று நம்மோடு இல்லை. அல்லாஹ் அதில் அவர்களுக்கு ஒரு பெரும் நன்மையை வைத்திருக்கக் கூடும். மனம் அமைதி பெற மறுக்கிறது. என்ன செய்ய? இறைவிதியைப் பொருந்தித்தான் ஆக வேண்டும்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் மாமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவர்களது நற்கிரியைகள் அனைத்தையும் தனதருளால் ஏற்று, மண்ணறை - மறுமை வாழ்வுதனை ஒளிமயமாக்கி வைத்து, உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்றாய் அமர்த்தியருள்வானாக...

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் பாசத்திற்குரிய யஹ்யா காக்கா, என் இணைபிரியா நண்பன் மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

உளமார்ந்த பிரார்த்தனைகளுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
எஸ்.கே. குடும்பத்தார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [12 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28591

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சுவனபஹி கொடுத்து குடும்பத்தார் அனைவர்குளுக்கும் சபூரன் ஜமீலா என்ற பொறுமை கொடுப்பானாக ஆமீன்.

குடும்பத்தினர்களுக்கு எங்களது ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக.....
posted by S.K.Shameemul Islam (Chennai) [12 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28594

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஷைத்தானை விளங்கிட்டு நரகத்தை இழுத்துப் பூட்டி சுவனத்தின் வாயில்களை விசாலமாகத் திறந்து ரமலானை நமக்கு வழங்கிய வல்ல நாயன் தன் அடியார்களில் நல்லவர் ஒருவரையும் தன்னகத்தே அதுவும் ஒரு ஜுமுஆ நாளின் முந்தைய இரவில் அழைத்துக் கொண்டான்.

நேரத்தை வீணடிப்பதென்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சிரிக்கும் சிரிப்பிலும் ஒரு கண்ணியம் இருக்கும். மார்க்க அடிப்படைகளைப் பேணுவதில் மிகவும் சிறப்பானவர்கள். குர்ஆனோடு என்றென்றைக்குமே தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டவர்கள் எனக் கூறுவதில் மிகை இல்லை.

சென்னையில் மாதவரத்தில் பல காலம் கழித்த போது அங்கும் அதே பேணுதலுடன்தான் இருந்தார்கள்.

இவர்களின் ஒரு சொல்லுக்கு எங்கள் சொளுக்கார் வெட்டையே கட்டுப்பட்டு நிற்கும். ஏன் தெருவும் முஹல்லாவும் கூட அப்படித்தான்.

கடைசியாக சிறிது காலம் நோய் வயப்பட்ட எங்கள் பாசமிகு மாமா -சுல்தான் அப்துல் காதிர்- உங்களின் பிரிவு எங்களை எல்லாம் விவரிக்க முடியாத துக்கத்தில் விட்டுச்சென்றுள்ளது.

அண்மையில் நான் ஊருக்கு வந்த நேரம் உங்கள் சுகவீனத்தை கேள்விப்பட்டு உருக்குலைந்த எனக்கு, எப்போதும் சிரிப்பிலேயே பார்த்த உங்களின் முகத்தை பார்க்க முடியாமல் என் உள்ளம் என்னை தடுத்து விட்டது. பிரிவால் வாடும் குடும்பத்தில் என்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டு ஆறுதல் கூறுங்கள்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு பிழைகளைப் பொறுத்து கேள்வி கணக்குகளை இலேசாக்கி கப்ரின் வாழ்விலும் மறுமை வாழ்விலும் மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக.

உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவைகளை நபிமார்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்களோடு அவர்களை ஒன்றாக்கி வைப்பானாக.

துயருற்றிருக்கும் குடும்பத்தவர் அனைவருக்கும் நண்பன் யஹ்யா, தம்பி அபூதாஹிர் மற்றும் யாவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் &
குடும்பத்தினர்கள்.
எஸ்.கே.எஸ்.ஹவுஸ்.
காயல்பட்டணம் & சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Mauroof (Dubai) [12 July 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28595

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சங்கைமிக்க ஓர் மாதத்தின் சங்கைக்குரிய ஓர் நாளில் இவர்களின் மரணம் சம்பவித்திருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்துக் கொடுப்பதுடன் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [12 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28596

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Ahmed Shahul Hameed(AbuSabu) (Kayalpattinam) [12 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28597

Assalaamu Alaikkum. Innalillahi Vainna ilaihi Raajioon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. காயல் மக்களுக்கு ஏற்பட்ட பெறிய இழப்பாகும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by SALMAN FARIS (YANBU SAUDI ARABIA ) [12 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28600

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய எங்களது உஸ்தாத் அப்பா அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க வேதனை அடைந்தோம்.

அவர்களின் மறைவு நம் முஹல்லாவிற்கும் மட்டுமில்லாமல் நமது காயல் மக்களுக்கே பெரிய கைசேதம் என்று தான் சொல்லவேண்டும்

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28601

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. ஆழ்ந்த அனுதாபங்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [12 July 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28605

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எங்களின் பாசத்திற்குரிய T M K சுல்தான் ஹாஜியார் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, இப்புனித ரமழானின் பொருட்டாலும், அவர்கள் செய்த நல அமல்களின், நாங்கள் மனமுருகி கேட்கும் துஆ வின் பொருட்டாலும் மர்ஹூம் அவர்களின் கப்ரை ஒளி மயமாக்கி மறுமையில் அன்னார்கள் ஜன்னத் வல் பிர்தௌஸ் எனும் சுவர்க்க புரியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் எனதன்பு பாசமிகு தம்பி எஹ்யா மொஹிதீன், அபு தாஹிர் மற்றும் குடும்பத்தார்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல நாயன் சபூர் என்னும் பொறுமையைக் கொடுப்பானகவும். ஆமீன்.

உங்கள் அனைவருக்கும் எங்களின் குடும்பத்தார்கள் சார்பில் அஸ்ஸலாமு அலைக்கும்.

வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம்
மற்றும் குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. வருந்துகின்றோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [12 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28608

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

இப்புனித ரமழானில் அல்லாஹ்வின் கட்டளைப்படி இவ்வுலகம் துறந்த மதிப்பிற்குரிய பெருந்தகை மர்ஹூம், அல்ஹாஜ்- டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் பிழைகளை மன்னித்து நாளை மறுமையில் மேலான நற்கூலிதனை வல்ல நாயன் வழங்கியருள துஆச் செய்கின்றேன்.

அன்னவர் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்
posted by M.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [12 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28609

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re வருந்துகிறோம்
posted by Me. Solluku Syed Mohammed Sahib (qatar) [12 July 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28610

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன் . அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. மனத்தட்டில் துயர் கொட்டி மறைந்த அப்பா
posted by செய்யிது அபூதாஹிர் ( புனித மக்கா ) [12 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28611

1. குருவித்துறை பள்ளியின் இமாமாக திகழ்ந்தர்கள்.

2. மஜ்லிசுல் புஹாரி ஷரீபின் நிர்வாகி.

3.மதரஸா ஹாமிதிய்யாவின் நிர்வாகி.

4. முஹல்லாவில் பல உலமாக்கள், ஹாபிழ்கள் உருவாக காரணமானவர்கள்.

5.ஏழை மாணவர்களை தன்னுடன் வைத்து கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி அவர்களை ஹாபிழ்களாக உருவாக செய்வார்கள்.

6. சற்று பார்வை குறைந்த மாணவர்களை ஹாபிழ்களாக உருவாக்கிய பெருமை அவர்களையே சாரும்.

7. குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை துவக்கி, நிறைவு செய்தல் என்பதில் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம்.

8. பழைய பதங்கள், அனைத்து வலிமார்களின் மௌலிது ஷரீப்கள், மர்ழியா அனைத்தும் ஓதுவதில் சிறந்து விளங்கினார்கள்.

9. பழைய பாரம்பரியங்கள், பண்பாடுகளை சொல்லி தருவதில் வல்லுனராக திகழ்ந்தர்கள். இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்ட பெருமகனாரை இழந்து இருக்கிறோம். வல்ல ரஹ்மான் அவர்களின் கபுரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி வைத்து இருக்கிறான். ஒளிமயமாக்கி வைப்பானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. நல்லோர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் !
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [12 July 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28612

السلام عليكم ورحمة الله وبركاته

எனது பாசத்திற்குரிய அருமை அல்ஹாஜ் சுல்தான் அப்துல் காதிர் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப பொறுமை செய்து கொண்டேன்.

அவர்களின் இழப்பு நமது முஹல்லாவிர்க்கும், சுன்னத் வல் ஜமாஅத் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

பழைய செய்திகளை ஞாபகம் வைத்து அதனை அப்படியே நிதர்சனமாக சொல்வதில் மிகவும் திறமையானவர்கள்.

நான் ஊர் வரும்போதும், திரும்பி செல்லும்போதும் அவர்களை சந்திக்க தவறமாட்டேன். சந்திக்கும் போதெல்லாம் எதாவது ஒரு சப்ஜெக்ட் ஒன்றை ஆரம்பித்து இறுதி வரை அதனை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள், கேட்கும் எனக்கு சில சமயம் சோர்வு ஏற்படுமே அன்றி, சொல்வதில் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

நமது முஹல்லாவில் பிற இடங்களில் நடைபெறும் நிகழ்சிகளில் சரியான நேரத்துக்கு ஆஜராகுவதில் எனக்கு தெரிந்த வரை அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் ஆவார்கள்.

புனித மஜ்லிஸ் புகாரிஸ் ஷரீபில் ஒரு முறை பிறை 18 அன்று அண்ணல் நபி (ஸல் ) அவர்களின் "வபாத்" சம்பந்தமாக அன்றைய பாடங்கள் எனக்கு பயான் செய்யும் வாய்ப்பு அமைந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பே என்னை அழைத்து, “வாப்பா! வபாத் செய்தியிலோ, கடைசி வரை சரியாக பேசனுமம்மா!” என்று சில யோசனைகளை சொன்னார்கள்! அன்று அவர்கள் மஜ்ளிசின் சபையில் இருந்தார்கள். பயானின் துவக்கத்திலேயே "ஹம்ஜியாவின்" ஒரு சில பைத்தை படிக்கும்போது என்னை அறியாமல் அழுகை வந்தது. சபையில் இருந்த அவர்கள், தாங்களும் கண் கலங்கியவர்களாக, “ஆஹா! இப்போதே அழுகிறானே, இன்னும் நிறைய இருக்கிறதே” என அருகில் இருந்தவர்களிடம் சொன்னதாக பிறகு தெரிந்து கொண்டேன்.

பழைய கால செய்திகள், இலங்கை மட்டக்களப்பு செய்திகள், சொளுக்கார் கம்பெனி செய்திகள், நஹ்வி அப்பா, கொம்பு ஆலிம்சா, கண்ணாடி ஆலிம்சா போன்ற செய்திகளை எல்லாம் மிகவும் அழகாக சொல்வார்கள். நேரடியாக பார்ப்பது போன்று கேட்கும் நமக்கு தோன்றும்.

அந்நேரத்தில் எல்லாம் இந்த செய்திகளை எல்லாம் "வாய்ஸ் ரிகார்டிங் " செய்ய வேண்டும் என்று நினைத்து பலமுறை அது முடியாமல் போய்விட்டது.

எப்போதும் ஒரு பொருள் அதை இழக்கும் போதுதான் அதன் அருமை நமக்கு தெரியும். இப்போது எழுதி என்ன பயன் என நினைக்கிறேன்!

எனது தாயாரோடு மிகவும் தமாசாக பேசுவார்கள் . தாயாரும் பதிலுக்கு தமாசாக பேசுவார்கள்.

ஒருமுறை நான் சிறுவனாக இருத்த போது கை, காலில் சிரங்கு வந்து, ஒன்றுக்கும் ஆறாமல் வீடு வந்த போது அதனை பார்த்து மிகவும் கவலைப்பட்டு மறுநாள் லைபாய் சோப்பு வாங்கி வந்து பாத்ரூம் கதவை தாளிட்டு என் மேனி முழுதும் அவர்களின் முபாரக்கான கையாலேயே தண்ணீர் ஊற்றி, சோப்பும் போட்டு விட்டார்கள். சில நாட்களில் மாஷாஅல்லாஹ் சிரங்கு அனைத்தும் ஆறிவிட்டது.

நான் பள்ளி பருவத்தில் இருந்தபோது நமது குடும்பத்தில் சிலர்கள் "மௌலித்" நிகழ்ச்சிக்கு அவர்களை அழைப்பார்கள். அப்போது கூடவே என்னையும் அந்த மஜ்ளிசுக்கு அழைப்பார்கள். காரணம் அப்போது "மர்ஹூம் நஹ்வி சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் "இமாம் பூசிரி நாயகம் (ரஹ்) அவர்களின் மீது கோர்வை செய்த "ஆதி முஹம்மத் முஸ்தபா நபி மேல்" எனும் பாடலை என்னை பாடத் செய்து ரசிப்பார்கள்.

இவைகளெல்லாம் மலரும் நினைவுகள் "அத்தகைய ஒரு 'சீதேவியை" இழந்து தவிர்க்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் , குறிப்பாக அருமை தம்பிமார்களான யஹ்யா முஹ்யிதீன் , செய்யித் அபூ தாகிர் ஆலிம் மஹ்லரி மற்றும் உற்றார் ,உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அல்லாஹ் சப்ர் எனும் பொறுமையை தந்தருளி , அழகிய நற்கூலியையும் வழங்கிடுவானாக !

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பிழைகள் யாவையும் மன்னித்து கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் மன்னர் மாநபி (ஸல்) அவர்களின் அருகாமையில் ஜன்னத்து பிர்தொவ்சில் குடியமர ஆசிக்கே ரசூல்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் ! வஸ்ஸலாம் . . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...
posted by A.M.NOORMOHAMMEDZAKARIYA (KAYALPATNAM) [12 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28613

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அன்னார் குடும்பத்தார் அனைவர்களும் சபூர் எனும் அழகிய பொருமைதனை கடைபிடித்து, அவர்களுக்காக நாம் 'துஆ' செய்வோமாக!

மர்ஹூம் அவர்களது குடும்பத்தார்களுக்கு எங்களது குடும்பத்தார்கள் அனைவரது சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

காயல் இழந்தது ஒரு பேஷ் இமாமை அல்ல! ஒரு ஆஷிகுல் இலாஹை!! மிகப்பெரும் ஆஷிகே ரசூலை!!! முஹிப்புல் அவ்லியாவை!!!! இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா, சுல்தான் அப்பா என சிறுவர்கள் அனைவராலும் அன்புடனே அழைக்கப்பட்டு வந்த அருமைக்குரிய பேஷ் இமாம் அவர்களின் வபாத் நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத மிகப்பெரும் இழப்பாகும். அவர்கள் இல்லாமல் வித்திரியா மஜ்லிசே வேரிச் சோடிப் போய் இருக்கிறது... என சின்னஞ் சிறுவர்களே கை சேதப்படும் அளவிற்கு சிறுவர்களது உள்ளத்தை மிகவும் கவர்ந்த முத்தொளிஇன் மரபில் உதித்த ஒரு மஹான்.....!

எந்த அளவிற்கு என்றால் ஓதும் சிரார்களைக்கண்டால் பெரியவர்களிடம் இருந்து கிதாபை வாங்கி கொடுத்து, சிறுவர்களுக்கு ஊக்கம் அளித்து மஜ்லிசின் மீது ஆர்வத்தையும், ஆசையையும் உண்டுபண்ணும் ஒரு பெரிய சீதேவியை இழந்து விட்டோமே!!!

للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة

தனிமைப் பொழுதில் அவருக்கு தயவாய் கருணை புரிந்திடுவாய்!ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யாரப்பல் ஆலமீன்.....! என கண்ணீர் மல்க பிராத்திக்கும்;

...ஏ.எம்.நூர்முஹம்மத் ஜகரியா &
என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன்
மற்றும் குடும்பத்தினர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:...
posted by Palappa Ahmed (Dammam) [12 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28614

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Pirabu Deen (chennai) [13 July 2013]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 28615

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எனது நன்பனின் தந்தை மரணம் செய்தி கேட்டு மிகுந்த கவலை கொண்டுள்ளோம். அல்லாஹ் மர்ஹூமின் பாவங்களை மன்னித்து அவர்களுடைய கபூரை விசாலமாக்கி வேதனைகளில் இருந்து பாதுகாத்து நாளை மறுமையில் உயர்ந்த சொர்கத்தின் பதவியை கொடுப்பானாக அமீன்

பாசமிக்க அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய சலாமும் மேலும் பொறுமையும் அல்லாஹ் வழங்க பிரார்த்திக்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. வருந்துகிறேன்!
posted by kavimagan.m.s.abdulkader (doha-qatar) [13 July 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 28616

எனது தந்தையின் உற்ற நண்பராக விளங்கிய ஹாஜியார் அவர்களது மறைவு,எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்பு ஆகும். அன்னாரை இழந்து வாடும் உற்றார்,உறவினர்,தெரு மற்றும் ஜமாஅத் வாசிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ், அழகிய பொறுமையை தந்தருள்வானாக....ஆமீன்.

எம்.எஸ்.அப்துல் காதர்,
சொளுக்கு ஹபீபா காதர்
ஏ.கே.சதக்கத்துல்லாஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:...இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [13 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28617

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

மரியாதைக்குரிய இமாம் அவர்களின் மரணசெய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. நம் அனைவருக்கும், மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கும் வல்ல நாயன் பொறுமையை தந்தருள்வானாக.

மர்ஹூம் அவர்களின் கப்ரின் வாழ்கையை வசந்த மாக்கி மறுமையில் உயரிய சுவனபதியாகிய ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. கண்ணியம் மிகுந்த பெரியவர்,,,,,,,,
posted by nizar (kayalpatnam) [13 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28618

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

கண்ணியம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த சுல்தான் அப்பா அவர்களின் வபாத் வருத்தத்துக்குரியது. அவர்களோடு இணைந்து ஹஜ்ஜு செல்லும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன்.எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அபுதாஹிர் ஆலிம், யஹ்யா மற்றும் அன்னாரது குடும்பத்தினர் அனைவர் களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.மர்ஹூம் அவர்களின் நற்குணங்க ளை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக,,அன்னாரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக,,,,,,.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:...
posted by THAJUL ANAM (madina munawara KSA) [13 July 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28619

இன்னாலிள்ளஹ வ இன்னா இளைஹி ராஜயுன் புனித ரமலானின் பொருட்டால் வல்ல நாயன் மர்ஹ்ம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்ந்துல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான சுவன பதவிஐ கொடுதருல்வனாக அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:...
posted by Fareed (Dubai) [13 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28623

Salam

Innalillahi wa inna ilaihi raajiyun. May Allah forgive his sins and place him in jannath. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [13 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28624

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவர்க்கத்தில் நபியவர்களுடனையே இருக்க செய்வானாக. ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:...
posted by Musaffir (Chennai) [13 July 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 28629

இன்னலிள்ளஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். மர்ஹூம் அவர்ஹல் எனது சிறிய வயதின் திருமறை குருஆன் பிரிவு ஆசிரியர் ஆவார். வல்ல ரஹ்மான் அன்னாரின் அறியா பிளைஹளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை குடுபானாஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. இன்னாலில்லாஹி
posted by Fazul Rahuman (Jeddah) [13 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28630

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு மாமூனா லெப்பை (Doha) [13 July 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 28631

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கண்ணியத்துக்குரிய ”சுல்தான் அப்பா” அவர்களின் மரணச் செய்தியைக் கேட்டதும் உள்ளம் மிகவும் வலித்தது; நான் கண்ட நல்ல மனிதர்களில் மிகச் சிறந்தவர்களாக என்றும் மதிக்கப்படத் தக்கவர்கள். நிறைய ஹாஃபிழ்களை உருவாக்கிய தன்னடக்கமான தூயவர். என் மீதும், என் மனைவி குழந்தைகள் மீதும் உள்ளார்ந்த அன்புடன் மிகுந்த பாசத்துடன் பழகும் உயர்வான மனிதர்.

எல்லாம் வல்ல - கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, அவர்களது நற்கிரியைகள் அனைத்தையும் தனதருளால் பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் , நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருளும் சிறப்பான நல்வாழ்க்கையை வழங்குவானாக, ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....

கத்தீபு மாமூனா லெப்பை மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:...
posted by Ahmed Munawer (Dubai) [13 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28632

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:...
posted by Abu Thahir SMM (Kuwait) [13 July 2013]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 28636

Innaa lillahi wa inna ilaihi Raajioon..

May Allah accepts all his good deeds, forgive his sins and bless him and us Jennath Al Firdous, Aameen..

Hearty condolences to my brothers Yahya & Abu Thahir and to all relative members..

Salaam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [13 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28641

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எங்களின் அன்பிற்கும் பாசத்திற்குரிய அல்ஹாஜ். சுல்தான் அப்துல் காதர் மாமா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தோம். கடந்த முறை நான் ஊர் சென்றிருந்த சமயத்தில் எனது வாப்பா அவர்களின் கிட்டதட்ட 45 வருடத்திற்கு முந்தைய அறிய பொக்கிஷமான போட்டோ ஒன்றை எனக்கு தந்து என்னை பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.

அல்லாஹ் தஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

எனது அருமை நண்பன் யஹ்யாவுக்கும் மற்றும் மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. மனமார்ந்த நன்றிகள்! மறவாது துஆ செய்யுங்கள்!!
posted by T.S.A.Abu Thahir (Kayalpatnam) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28744

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்கள் அன்புத் தந்தை - மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் நான்காவது வழித்தோன்றல் - பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் T.M.K.சுல்தான் அப்துல் காதிர் அவர்கள், கடந்த 11.07.2013 அன்று இரவு 11.15 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 12.07.2013 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூம் அவர்களின் மறைவை முன்னிட்டு, இரங்கல் தெரிவித்தும், துஆ இறைஞ்சியும் - நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், இணையதள செய்திகள் வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருந்தால், பெருமனது கொண்டு அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, +91 98415 67213 (T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ) என்ற கைபேசி எண்ணுக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ
(மர்ஹூம் அவர்களின் மக்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved