Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:36:33 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10781
#KOTW10781
Increase Font Size Decrease Font Size
சனி, மே 11, 2013
இரவுக்கு ஒளி தர ஒரு பகல் கொள்ளை?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3352 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகராட்சியின் நடைபெறாத பிப்ரவரி 26, 2013 சாதாரண கூட்டத்திலும், ஏப்ரல் 29, 2013 அன்று நடைபெற்ற சாதாரண கூட்டத்திலும், நகராட்சி அலுவலர்களால் தாக்கல் செய்யப்பட்ட விபரங்கள்படி, காயல்பட்டினம் நகராட்சியில் 1565 தெருவிளக்குகள் உள்ளன.



அதில் - 1152, 40 வாட்ஸ் குழல் விளக்குகள், 119, 150 வாட்ஸ் சோடியம் விளக்குகள், 150, 250 வாட்ஸ் சோடியம் விளக்குகள், 108, 2*36 வாட்ஸ் சி.எப்.எல். விளக்குகள், 36, 400 வாட்ஸ் உயர்மின் கோபுர விளக்குகள் - அடங்கும்.

நகராட்சியால் வெளியிடப்பட்ட 2009-10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட (2009-10 = 1221 விளக்குகள், 2010-11 = 1321 விளக்குகள்), தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கை (1565 விளக்குகள்) கூடுதலாக உள்ளது. (ஆண்டறிக்கைகள் 75 வாட்ஸ் சோடியம் விளக்கு என தெரிவிக்கின்றன. தற்போதைய தீர்மானப்பொருள் 150 வாட்ஸ் சோடியம் விளக்கு என தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது). இடைப்பட்ட காலத்தில் புதிதாக தெருவிளக்குகள் நிறுவப்பட்டதாக எந்த தீர்மானமும் பதிவில் இல்லை.





இருப்பினும் - தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கையான 1565 தெருவிளக்குகள் என்பதே உறுதியான, தற்போதைய எண்ணிக்கை என்று எடுத்துக்கொண்டு, தெருவிளக்கு பராமரிப்பினை தனியார் மயமாக்க நகராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் (தீர்மானம் எண் 460) பொருளாதார விளைவுகளை காணலாம்.

ஏப்ரல் 29, 2013 அன்று தெரு விளக்கு பராமரிப்பை தனியார் மயமாக்க - நகராட்சி அலுவலர்களால், மதிப்பீட்டு தொகை மன்றம் அனுமதிக்காக வைக்கப்பட்டது (இதே பொருள் பிப்ரவரி மாதம் கூட்ட பொருளில் இணைக்கப்பட்டிருந்தது). அதன்படி 2013-14 ஆம் ஆண்டிற்கு - தெருவிளக்குகளை பராமரிக்க - மதிப்பீட்டு தொகையாக 20.58 லட்ச ரூபாயும், 2014-15 ஆம் ஆண்டிற்கு மதிப்பீட்டு தொகையாக 22.63 லட்ச ரூபாயும், 2015-16 ஆம் ஆண்டிற்கு மதிப்பீட்டு தொகையாக 24.89 லட்ச ரூபாயும், குறிப்பிடப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்த தொகையாக 68.10 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.



நகராட்சி நிர்வாகத்துறை விதிமுறைகள்படி - ஒரு நகராட்சி, எந்த சேவையையும் தனியார் மயமாக்க விரும்பினால் அதற்கான முன் அனுமதியை - நகராட்சி நிர்வாகத்துறையிடம் பெறவேண்டும். குறிப்பாக - தனியார் மயமாக்கத்தால், நகராட்சி பெறக்கூடிய சேமிப்பு குறித்தும் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தெரிவிக்கவேண்டும். இதற்காக - கடந்த மூன்றாண்டுகளில், தெரு விளக்கு பராமரிப்பு வகைக்கு நகராட்சி செலவு செய்த தொகை விபரத்தையும், முன் அனுமதி கோரும்போது நகராட்சி நிர்வாகத்துறைக்கு வழங்க வேண்டும்.

காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக தெரு விளக்குகள் பராமரிப்பு வகைக்கு செய்யப்பட்ட செலவு தொகை விபரம் - அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆய்வு செய்து பார்த்தால், 2011-12 மற்றும் 2012-13 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - மின் பொருட்கள், ரூபாய் 4 லட்சத்திற்கும் குறைவாகவே, ஒவ்வொரு ஆண்டும், கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.

அதற்கு முந்தைய ஆண்டுகளில் - இவ்வகைக்கு, அளவுக்கு அதிகமாக செலவு செய்யப்பட்ட விபரம், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் காயல்பட்டினம் - the City of lights?! என்ற தலைப்பில் 5 பாக தொடராக வெளிவந்தது நினைவிருக்கலாம்.

தெருவிளக்குகள் பராமரிப்பை தனியார்மயப்படுத்த மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி அல்ல இது. தனியார் மூலம் தெரு விளக்குகளை பராமரிக்க, ஜனவரி 2011 இல் தீர்மானம் ஒன்று காயல்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது.



அப்போது - மதிப்பிடப்பட்ட 12 லட்ச ரூபாயை விட தற்போது மதிப்பிடப்பட்டுள்ள 20 லட்ச ரூபாய், 65 சதவீதம் கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 29 அன்றைய கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இப்பொருள் குறித்து நகர்மன்றத் தலைவர் தனது ஆட்சேபனையை, தலைவர் குறிப்பு மூலம் பதிவு செய்திருந்தார்.



அதில் பிற நகராட்சிகளில் இது குறித்து அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டுகளை விட - காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு தொகை மிகவும் அதிகமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இருப்பினும் கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தால் - தெரு விளக்குகள் எரியாது எனவும் சில உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவரிடம் கூட்டத்தில் கூறினர்.

நகர்மன்றத் தலைவர் தெரிவித்தது போல், காயல்பட்டினம் நகராட்சியின் தெரு விளக்குகள் பராமரிப்பு மதிப்பீடு அதிகமா? பிற நகராட்சிகளில் இது குறித்து எவ்வாறு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது என்பதை தற்போது பார்ப்போம்.

ஒரு 40 வாட்ஸ் குழல் விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...

--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 320
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் 276
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 300
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் 280
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 315


ஒரு 150 வாட்ஸ் சோடியம் விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...

--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 1233
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 1200
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 1220


ஒரு 250 வாட்ஸ் சோடியம் விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...

--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 1495
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் 1900
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 1440
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் 1420
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 1440


ஒரு 2*36 வாட்ஸ் சி.எப்.எல். விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...

--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 804
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் ---


ஒரு 400 வாட்ஸ் உயர்மின் கோபுர விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...

--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 2331
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 2325


தேவகோட்டை நகராட்சி...



மணப்பாறை நகராட்சி...



மேலூர் நகராட்சி...



பம்மல் நகராட்சி...



திருநெல்வேலி மாநகராட்சி...




இங்கே வழங்கப்பட்டுள்ள விபரங்கள் 2010 - 2012 ஆம் ஆண்டு காலத்தவை ஆகும்.

இவற்றை அளவுகோலாக வைத்து, காயல்பட்டினம் நகராட்சியின் தெருவிளக்குகளை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என காணலாம்.

--- 1152 எண்ணம், 40 வாட்ஸ் குழல் விளக்குகள் = ரூபாய் 3,68,640 (@ ரூபாய் 320)

--- 119 எண்ணம், 150 வாட்ஸ் சோடியம் விளக்குகள் = ரூபாய் 1,46,727 (@ ரூபாய் 1233)

--- 150 எண்ணம், 250 வாட்ஸ் சோடியம் விளக்குகள் = ரூபாய் 2,85,000 (@ ரூபாய் 1900)

--- 108 எண்ணம், 2*36 வாட்ஸ் சி.எப்.எல். விளக்குகள் = ரூபாய் 86,832 (@ ரூபாய் 804)

--- 36 எண்ணம், 400 வாட்ஸ் உயர்மின் கோபுர விளக்குகள் = ரூபாய் 83,916 (@ ரூபாய் 2331)

--------------------------------------- மதிப்பீடு தொகை = ரூபாய் 9,71,115


காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளின் எண்ணிக்கை மற்றும் வகைகளை கணக்கில் கொண்டால், ஆண்டு பராமரிப்பு தொகை சுமார் 10 லட்ச ரூபாயே வரவேண்டும். ஆனால் - நகராட்சி அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் ஆண்டு மதிப்பீட்டு தொகையோ ரூபாய் 20.28 லட்சம்!

ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்படவேண்டும் என்றாலும், மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 35 லட்ச ரூபாயே வரவேண்டும். ஆனால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் மதிப்பீட்டு தொகையோ ரூபாய் 68 லட்சம் ஆகும். பிற நகராட்சிகளோடு ஒப்பிடும்போது 33 லட்ச ரூபாய் அதிகம்!

தற்போது காயல்பட்டினம் நகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் (தீர்மானம் எண் 460) அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டால், காயல்பட்டினம் நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு குறைந்தது ரூபாய் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். இதுவே மூன்றாண்டில் 30 லட்ச ரூபாய் என அதிகரிக்கும்.

[செய்தி திருத்தப்பட்டது @ 7:45pm/11.05.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Who will Lights up
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [11 May 2013]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 27382

Are we in DARK!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [11 May 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27384

The more you silent the more you hear!

This is the proverb of all Security Engineer in IT Term.

I do not know what Auditors will do in this case..

So as per the above article. Where we people missed to find out the counsilors friendly step towards the Monthly Municipal Meeting or whatever it is?

Where is the Auditing reports of previous years under control of former Kayal Chairman?

When each and everyone of the public start to Audit their Ward, We can rectify the issue that were we loosing Finance

Start from the scratch, take initiative! Do well.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மதிப்பீடு
posted by M.Z.SIDDIQ. (kayalpatnam.) [11 May 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 27386

நமது நகராட்சில் தந்த கணக்கு குத்துமதிப்பாக தெரியுது. எனவே estimation engineer வைத்து செய்தால் சரியாக இருக்கும் என நினைகிறேன். ஏனெனில் இவ்வளவு வித்தியாசம் வர கூடாதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அதிர்ச்சி அறிக்கை
posted by mackie noohuthambi (kayalpatnam) [12 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27392

தெரு விளக்கு பராமரிப்புக்கு செலவிட்ட தொகைகள் பற்றிய புள்ளி விவரங்கள் இங்கு தந்துள்ள kayalpatnam.com ஆசிரியர் சொல்வது சரிதானா அல்லது அது சர்ச்சைக்கு உட்பட்டவையா என்று ஆணையர்தான் விளக்க வேண்டும். இந்த தகவல்கள் உண்மை என்ற நிலை வந்தால், எல்லா செலவினங்களுமே சந்தேகத்துக்கு இடமாகி விடும். அப்படியானால் அரசு ஆடிட்டிங் முறை ஒன்று இருப்பதும் கேள்விக்குறியாகி விடும்.

சமீபத்தில் இரண்டு மதிய அமைச்சர்கள் பதவி விலகி இருப்பதற்கு காரணம் பத்திரிக்கையில் படிக்கிறோம். எதிர்கட்சி என்று ஒன்று இருப்பதனால்தான் இவ்வளவு விஷயங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன. எனவே, ஒரு தனிப்பட்ட தலைவரை அல்லது உறுப்பினரை குறை சொல்வதை விட்டு விட்டு, நிதர்சன உண்மைகளை தெரிந்து கொள்ள, தவறுகள் நடந்திருந்தால் அது திரும்பவும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஊர் கூட்டம் போட்டு அறிவிப்பது யார்? என்ன செய்யவேண்டும் என்பதை பொறுப்புள்ள தலைவர்கள் முன்னின்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

யாருக்கோ வந்த வினை என்று அவரவர் ஒதுங்கி கொண்டால், இந்த தவறுகள் சரி செய்யப்படாமலே தொடர் கதையாக இருக்கும்.

ஒரு சாரார் மீது வேதனை இறங்கும்போது நல்லவர்கள் மீதும் அது இறங்குமா என்று நபி தோழர்கள் கேட்டபோது, "ஆம், தீமை மிகைத்து விட்டால்" என்று நபிகள் நாயகம் சொன்னார்கள் என்ற செய்தியை உலமாக்கள் நமக்கு சொல்லி தருகிறார்கள். அப்படி நல்லவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க அந்த நல்லவர்களாவது முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் ரஹ்மத் செய்வான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ,திருடனாய் பார்த்து........
posted by Imran KTN (Kayalpatnam) [12 May 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 27393

மாஷா அல்லாஹ், அருமையான செய்தி, பல நகராட்சி மற்றும் மாநகராட்சிகளை ஒப்பிட்டு காண்பித்து உள்ளீர்கள்.

1,திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

2,ருசி கண்ட பூனை, சுடும் வரை குடிக்க தான் செய்யும் , ஆகையால் பொறி வைத்து பொறுமையாக காத்திருந்தால் கண்டிப்பாக சிக்கும்.

3,இறைவன் படைத்த உயிரினங்களுக்கு ஏற்றவாறு உணவுகளையும் படைத்துள்ளான் அதை அவர் அவர் தேடி உண்டு கொள்ளவார்கள்.

இம்ரான் KTN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஒட்டு மொத ஒற்றுமை உடனேயே தேவை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [12 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27396

ஒரு அடிமை அரசாங்கத்தில் பரிபூரண சுதந்திரதைப் பெருவதும், ஒரு அரசாங்கத்தை ஏற்றுவதும் ஓர் அரசை இறக்குவதும்! பேனா முனையே! அந்த அளவிற்கு மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டார்கள்!

அந்த விழிப்புணர்வின் பயணப்பாதை பயனுள்ள இடத்தை அடைந்திடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்!

ஆக, இந்த நகராட்சியில் நடந்த செய்தின் விழிப்புணர்வு எந்த அளவிற்கு பயனை தரும் என்பதை காயலர்களாகிய நாம் அனைவர்களும் ஒற்றுமையுடன் ஒருசேர ஒவ் ஒன்றுக்கும் விளக்கம் கேட்க ஆரம்பிக்கும் பொழுது, உண்மை இல்லை என்றால் ஓட்டம் பிடித்து ஒழிய ஆரம்பித்து விடுவார்கள்!

இப்பொழுது நமக்கு தேவை விழிப்புணர்வு, அது ஓரளவு மீடியா மூலம் கிடைக்கிறது, அடுத்தது அனைத்து கசப்பு கருமேகத்தை களைந்துவிட்டு கைகோர்த்து நிற்கும் ஒட்டு மொத்து ஒற்றுமை உணர்வு!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

ஊர் ஒற்றுமை விரும்பி,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஏமாறுபவன் இருக்கும் வரை....
posted by Hameed Rifai (Yanbu - KSA) [12 May 2013]
IP: 209.*.*.* United States | Comment Reference Number: 27399

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!

நமக்கு தொடர்பே இல்லாத ஒருவன் நம் சட்டைப் பையில் கை விட்டு ஒரு பத்து ரூபாயை எடுத்துவிட்டால் கூட, குய்யோ முறையோ என கூப்பாடு போடத் தவறாத நாம், நம் வீட்டிற்காக நாம் செலுத்தும் வீட்டுத் தீர்வை, சொத்து வரி, குடிநீர் வரி, கடை வரி உள்ளிட்டவற்றை நிதியாதாரமாகக் கொண்ட நகராட்சி பொது நிதியிலிருந்து, யாரோ ஒருவரோ - பலரோ சர்வ சாதாரணமாக கள்ளக் கணக்கு காண்பித்து, கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாமோ, யாருக்கோ வந்த வினை என்று, கண்டும் காணதிருக்கிறோமே...?

அடிக்கும் கொள்ளையும் அஞ்சு ரூபா பத்து ரூபாய் இல்லையே? பல லட்சங்களும், கோடிகளுமல்லவா?

இந்தப் பணத்தையெல்லாம் கொள்ளையடிக்க விடாமல் பாதுகாக்க வேண்டியது தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தலையாயக் கடமை என்றிருக்க, சுய விருப்பு வெறுப்புகளுக்காக, ஊர் நலனை மறந்து இருக்கிறீர்களே உறுப்பினர் பெருமக்களே?

எது எதற்கெல்லாமோ “அல்லாஹ்வின் மீது சத்தியமாக” என்று வீர முழக்கமிட்ட - மக்கள் பிரதிநிதிகளாகிய அன்பார்ந்த உறுப்பினர்களே! இந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தவறா, இல்லையா? தவறு என்றால், இதையும் - இதுபோன்ற முந்தைய தவறுகளையும் தட்டிக்கேட்க இது வரை என்ன செய்துள்ளீர்கள்?

தலைவியின் தவறு(?)களை துணிந்து தட்டிக் கேட்டதாக மார்தட்டிக் கொண்ட உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் இதற்கு முன் செய்த தவறுகளில் எத்தனை தவறுகளை இனங்காட்டி, கலெக்டரிடமும், அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் கடிதம் அளித்திருக்கிறார்கள்? கூறினால், கேட்க தயாராக உள்ளோம்.

ஒன்றை மட்டும் எச்சரிக்கையாகக் கூறி முடிக்கிறேன்.

ஊரார் சாபம் அநியாயக்காரர்களை சும்மா விடாது! அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவராக, செல்வாக்கு மிக்கவராக, செல்வந்தராக இருந்தாலும் சரி!

அவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்கும்போது அல்லது அதற்குத் துணை நிற்கும்போது, ஒரு தற்காலிக மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கையில் இருப்பது 1 லட்சம் என்றால், செலவு 10 லட்சமாக இருக்கும். மறந்துவிடாதீர்கள்!!! இந்த நிலையை இன்றளவும் நாம் கண்ணால் பார்த்தே வருகிறோம்.

மக்கள் பணத்தை கூசாமல் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது!
முடியாது!!
முடியவே முடியாது!!!

கொள்ளையடிக்கப்படுவது “என் பணம்” என்ற எண்ணம் மக்களாகிய நம் மனதில் ஆழ விதைக்கப்படும் வரை, கொள்ளைக்காரர்கள் திருந்துவதும்
நடக்காது!
நடக்காது!!
நடக்கவே நடக்காது!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved