| 
 உள்ளாட்சி மன்றங்கள் - தெருவிளக்குகளை  பராமரிக்க, யூனிட் ஒன்றுக்கு  தற்போது ரூபாய் 5.50 செலுத்துகின்றன.  இந்த புதிய கட்டணம் கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்த புதிய கட்டண உயர்வுக்கு முன்னர் யூனிட் ஒன்றிற்கு உள்ளாட்சி மன்றங்கள் ரூபாய் 3.50 செலுத்தி வந்தன. 
   
 
  
50 சதவீதத்திற்கும் மேல் விலை உயர்வு ஏற்பட்டுள்ள சூழலில், மின்சாரத்தை சிக்கனம் செய்ய முயற்சிகள் செய்யவேண்டிய  மின்வாரியம் மற்றும் நகராட்சி அலுவலர்கள், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 
  
சமீபத்தில் சதுக்கைத் தெரு, லெப்பை அப்பா தெரு, ஆறாம்பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்துக்கொண்டிருந்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்ததில் - இரு லைன்களில் ஏற்பட்ட உரசலால் இது நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
புகைப்படங்கள்:  
ஹிஜாஸ் மைந்தன், 
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.
  |