Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:08:20 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10372
#KOTW10372
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 7, 2013
மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4030 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், 15 உறுப்பினர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

புதிய செயற்குழு தேர்தல்:

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 03.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, மன்றத்தின் கவுரவ ஆலோசகரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான எஸ்.ஐ.அப்துல் ஜலீல் இல்ல மேல் மாடியில் நடைபெற்றது.

உறுப்பினர்கள் வருகை:

தேர்தலை முன்னிட்டு முற்கூட்டி வருகை தந்து வாக்குப்பதிவு செய்யுமாறு உறுப்பினர்களுக்கு முன்னரே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, குறித்த நேரத்தில் உறுப்பினர்கள் நிகழ்விடத்தில் திரளாகக் குழுமியிருந்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்:

தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு செய்வதற்கான வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் விபரங்களை உள்ளடக்கிய வாக்குப்பதிவு மாதிரி சீட்டு ஆகியன நிகழ்விட நுழைவாயிலிலேயே அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.





சந்தா சேகரிப்பு:

வாக்குச் சாவடியின் கீழ் தளத்தில், உறுப்பினர் சந்தா நிலுவைத் தொகைகளை, மன்றத்தின் நடப்பு பொருளாளர் உதுமான் அப்துல் ராஸிக் வசூலித்துக் கொண்டிருந்தார்.



தேர்தல் துவக்கப் பணிகள்:

தேர்தல் துவக்கப் பணிகளை, எஸ்.ஐ.ஜலீல் தலைமையில், கிழுறு முஹ்யித்தீன், கவுஸ் முஹம்மத், சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் ஆகிய தேர்தல் அதிகாரிகள் முனைப்புடன் செய்தனர்.



வாக்குச் சாவடி நுழைவாயிலில், வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணியை, நடப்பு செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் தலைமையில் குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.



வாக்குப் பதிவு:

காலை 10.30 மணிக்கு, திட்டமிட்ட படி வாக்குப்பதிவு துவங்கியது. துவக்கமாக தேர்தல் அதிகாரிகளும், அவர்களைத் தொடர்ந்து மன்றத்தின் நடப்பு நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்தனர்.



அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்குப்பதிவு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் அதிகாரிகள் விளக்கிக் கூறி, வாக்களிக்கச் செய்தனர்.







தவிர்க்கவியலாத காரணங்களால் வாக்குப் பதிவிற்கு நேரடியாக வரவியலாத உறுப்பினர்களின் தபால் வழி மற்றும் தொலைபேசி வழி வாக்குகளை, மன்ற உறுப்பினரல்லாதோர் - அந்தந்த வாக்காளர்களின் சார்பாக பதிவு செய்தனர்.



நண்பகல் 11.30 மணி வரை விறுவிறுப்புடன் சென்ற வாக்குப்பதிவு, அதற்குப் பிறகு சிறிது மந்தமானது. பின்னர், வாக்குப்பதிவு நேரம் நிறைவடையும் தருணத்தில் மீண்டும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 01.30 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்றதாக, தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.

களறி சாப்பாடு ஆயத்தப் பணிகள்:

வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிகழ்விடத்தின் கீழ்ப்பகுதியில் மதிய உணவு - களறி சாப்பாடு சமையல் பணிகள் பரபரப்போடு நடைபெற்றது.





தம் குடும்த்தினருக்காக முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, மக்வாவின் பெயர் அச்சிடப்பட்ட பிரத்தியேக பாத்திரத்தில் பவுத்தி சாப்பாடு வினியோகிக்கப்பட்டது.



வாக்குப் பெட்டி பாதுகாப்பு:

வாக்குப்பதிவு நிறைவுற்ற பின்னர், வாக்குப் பெட்டி, பூட்டிய அறைக்குள் தேர்தல் அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டது. மதிய உணவு ஏற்பாட்டுப் பணிகள் நிறைவுற்றதும், பாதுகாப்புப் பணியிலீடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகளுக்கு, அவர்களின் இருப்பிடத்திலேயே மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.



மதிய உணவு விருந்துபசரிப்பு:

மறுபுறத்தில், வாக்குப்பதிவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டம் நடைபெறும் - நெய்னாக்கா இல்ல மொட்டை மாடி வளாகத்தில் மதிய உணவு - களறி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.









வாக்கு எண்ணிக்கை:

மதியம் 02.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தேர்தல் அதிகாரிகளுடன், மக்வா நடப்பு செயலாளர் ஹைதுரூஸ் ஆதில், காயல்பட்டினத்திலிருந்து வருகை தந்திருந்த ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் துணைப்பணியாற்றினர். துவக்கமாக வாக்குப் பெட்டி தேர்தல் அதிகாரிகளால் முறைப்படி திறக்கப்பட்டது.



வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில், தேர்தலில் போட்டியிட்ட 24 பேரில் 15 பேருக்கோ, அதற்கும் குறைவாகவோ முத்திரையளித்து வாக்களிக்க வேண்டும்.. 16 அல்லது அதற்கும் மேற்பட்டு முத்திரையளித்தால் அது செல்லாத வாக்கு என விதிமுறை முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், 15க்கும் மேற்பட்ட முத்திரைகள் குத்தப்பட்ட 6 வாக்குச்சீட்டுகள் துவக்கமாக கண்டறியப்பட்டு, அவை செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.

அடுத்து, தவிர்க்கவியலாத காரணங்களால் வாக்குப்பதிவில் நேரடியாகக் கலந்துகொள்ளவியலா நிலையிலிருந்த உறுப்பினர்களின் அஞ்சல் வழி வாக்குகள் 2, தொலைபேசி வழி வாக்குகள் 3 ஆகியன எண்ணப்பட்டன.



பின்னர், அனைத்து வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட படிவங்களில் வாக்கு எண்ணிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டது.

பதிவான வாக்குகள்:

மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 137
மொத்த வாக்குப்பதிவு: 106

அவற்றுள்,
நேரடி வாக்குப்பதிவு: 101
அஞ்சல் வழி வாக்குப்பதிவு: 002
தொலைபேசி வழி வாக்குப்பதிவு: 003

வாக்குப்பதிவு சதவிகிதம்: 77.37%

அடுத்து, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த வாக்குகள் தனி படிவத்தில் பதிவு செய்யப்பட்டு, கூடுதல் வாக்குகளைப் பெற்ற 15 வேட்பாளர்கள் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அறைக்குள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களைத் தவிர வேறெவரும் அனுமதிக்கப்படவில்லை.

உறுப்பினர் ஒன்றுகூடல்:

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நெய்னாக்கா இல்ல மொட்டை மாடி வளாகத்தில் கூட்டத்திற்காக உறுப்பினர்கள் திரண்டமர்ந்திருந்தனர். மாலை 04.00 மணியளவில் கூட்டம் துவங்கியது.



நடப்பு துணைத்தலைவர் முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.) மகள் இறைமறை வசனங்களுடன் நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

துளிர் பிரதிநிதிகள் பங்கேற்பு:

துவக்கமாக, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்திருந்த - அதன் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.வஹீதா, ஆகியோரடங்கிய நிர்வாகக் குழுவினர் தம் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து கூட்டத்தில் விளக்கிப் பேசியதுடன், ஆர்வப்பட்ட உறுப்பினர்களிடம், துளிருக்கு நிதி திரட்டும் உண்டியல்களை வழங்கினர்.



அத்துடன், மக்வா மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் பாராட்டி, துளிர் பள்ளியின் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.



துளிர் பள்ளியின் அலுவலக பொறுப்பாளர் சித்தி ரம்ஸான், பெற்றோர் கழக தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி ஆகியோரும் அக்குழுவினருடன் இணைந்து வந்திருந்தனர்.

தொழுகை & தேனீர்:

இடையிடையே இரண்டு முறை, அஸ்ர் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் காயல்பட்டினம் முறைப்படி இஞ்சி கலக்கப்பட்ட தேனீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.



பொதுக்குழுக் கூட்டம்:

மாலை 05.20 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. துவக்கமாக வாக்கு எண்ணிக்கை நிறைவுற்று - முடிவுகள் ஆயத்தமாக உள்ள தகவலை தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஐ.அப்துல் ஜலீல் அறிவித்தார்.



பின்னர், மற்றொரு தேர்தல் அதிகாரியான சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் - வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற விதம் குறித்து கூட்டத்தில் விளக்கியதோடு, தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை பட்டியலையும், அதனைத் தொடர்ந்து, புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரின் பெயர் பட்டியலையும் முறைப்படி அறிவித்தார்.



புதிய செயற்குழு:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:-

(01) எஸ்.எம்.மஸ்ஊத்


(02) அப்துல் காதிர் (நெய்னாக்கா)


(03) உதுமான் அப்துல் ராஸிக்


(04) முஹம்மத் உதுமான் (லிம்ரா)


(05) செய்யித் ஐதுரூஸ் (சீனா)


(06) உமர் அப்துல் காதிர் (லக்கி)


(07) செய்யித் அஹ்மத் (ஜெ.பி. டூல்ஸ்)


(08) ஸாஹிப் தம்பி. டி.எஸ்.


(09) மஹ்மூத் சேட்


(10) ரஹ்மத்துல்லாஹ். எஸ்.என்.


(11) ஷேக் ஸலாஹுத்தீன்


(12) முஹம்மத் ஸிராஜ். ஏ.எஸ்.ஐ.


(13) முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.)


(14) ஜெய்னுல் ஆப்தீன் (ஆப்தீன் பாய்)


(15) முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ




தேர்தல் ஆவணங்கள் ஒப்படைப்பு:

பின்னர், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தேர்தல் அதிகாரிகள் புதிய செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் - மன்றத்தின் நடப்பு தலைவரும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான எஸ்.எம்.மஸ்ஊத் வசம் ஒப்படைத்தனர்.



வாழ்த்துரை:

அதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழுவினரும் தனியறையில் கலந்தாலோசனை செய்தனர். இதனிடையே, கூட்ட நிகழ்விடத்தில், புதிய செயற்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உறுப்பினர்கள் உரையாற்றினர்.



அவர்களைத் தொடர்ந்து, காயல்பட்டினத்திலிருந்து வந்து, வாக்கு எண்ணிக்கையிலும் ஈடுபட்ட ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.



மன்றத்தின் நகர்நலச் சேவைகளைப் பாராட்டிப் பேசிய அவர், தேர்தல் நடைபெற்ற விதத்தை தான் ஒவ்வொன்றாக அவதானித்ததாகவும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் திகழ்ந்து, தன்னை பெரிதும் வியப்பிலாழ்த்தியதாகவும் புகழ்ந்துரைத்தார்.

இவ்வளவு ஜனநாயகமாக தேர்தல் நடத்தப்படும் எந்த அமைப்பிலும் பெரிய அளவில் சர்ச்சைகள் இருக்காது என்று கூறிய அவர், வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் இதுபோன்றதொரு தேர்தலை நடத்துமாறு அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

மன்ற நிர்வாகத்தில் பொறுப்பேற்று நகர்நலப் பணிகளை செய்வதென்பது சாதாரண பணியல்ல என்றும், எனினும் இவ்வளவு சிரமமிக்க இப்பணியில் ஈடுபட 24 பேர் ஆர்வத்துடன் முன்வந்து வேட்பாளர்களாகப் போட்டியிட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று அவர் மேலும் கூறினார்.

24 போட்டியாளர்களில், கோழிக்கோடு நகரில் இருப்பவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்கள் என்ற அடிப்படையில் இலகுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தலைச்சேரி உள்ளிட்ட அருகாமை ஊர்களிலிருந்து இம்மன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்றிட வாய்ப்பில்லை என்பதால், அருகாமை ஊர்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில், புதிய செயற்குழுவில் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தனது ஆலோசனையை முன்வைத்தார்.

இதனிடையே, புதிய செயற்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவினர் விபரத்தை மன்றத்தின் நடப்பு துணைத் தலைவரும், புதிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான முஹம்மத் ரஃபீக் (கே.ஆர்.எஸ்.) கூட்டத்தில் அறிவித்தார்.



புதிய நிர்வாகக் குழு:

புதிய நிர்வாகக் குழுவினர் விபரம் வருமாறு:-

தலைவர்:
எஸ்.எம்.மஸ்ஊத்


துணைத்தலைவர்:
செய்யித் அஹ்மத் (ஜெ.பி.)


செயலாளர்:
உதுமான் (லிம்ரா)


துணைச் செயலாளர்:
அப்துல் காதிர் (நெய்னாக்கா)


பொருளாளர்:
உதுமான் அப்துல் ராஸிக்


புதிய தலைவர் ஏற்புரை:

அதனைத் தொடர்ந்து, புதிய செயற்குழுவினர் சார்பாக, மன்றத்தின் புதிய தலைவர் மஸ்ஊத் ஏற்புரை வழங்கினார்.



ஏற்கனவே பொறுப்பு வகித்த பலர் மீண்டும் புதிய செயற்குழுவிலும் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்ந்தெடுத்துள்ள உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், அனைவரின் நம்பிக்கைகளையும் மதித்து இன்னும் பொறுப்புடன் புதிய செயற்குழுவினர் செயலாற்றுவர் என்றும் கூறினார்.

மன்றப் பொறுப்புகள் செயலரிடம் ஒப்படைப்பு:

பின்னர், மன்றத்தின் அனைத்து நிர்வாக ஆவணங்கள் மற்றும் பொறுப்புகளையும், புதிய செயலாளரான உதுமான் (லிம்ரா) வசம் பழைய செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் ஒப்படைத்து, தான் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இதுகாலம் மன்றத்திற்கு செய்த உழைப்புகளை, இனியும் செய்யப் போவதாகவும், புதிய செயலாளருக்கு தனது அனுபவத்தினடைப்படையில் அனைத்து ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கிட ஆயத்தமாக உள்ளதாகவும் கூறினார்.





புதிய செயலர் உரை:

பின்னர், மன்றத்தின் புதிய செயலாளர் உதுமான் (லிம்ரா) உரையாற்றினார்.



பழைய செயலாளர் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளதை மனதிற்கொண்டே, இப்பொறுப்பை தான் உறுதியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அவரைத் தொடர்ந்து மன்றத்தின் புதிய துணைத்தலைவர் செய்யித் அஹ்மத் (ஜெ.பி.), புதிய துணைச் செயலாளர் அப்துல் காதர் (நெய்னாக்கா) ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.



புதிய பொருளாளர் உரை:

அவர்களைத் தொடர்ந்து, மன்றத்தின் புதிய பொருளாளர் முஹம்மத் உதுமான் உரையாற்றினார்.



கடந்த பருவத்திலும் தானே பொருளாளர் பொறுப்பை வகித்ததாகவும், உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தனது பணி முழுமையடையும் என்பதை கடந்த காலங்களில் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் தனது பொருளாளர் பொறுப்பு முழுமையடைய வேண்டுமானால், அனைத்து உறுப்பினர்களும் முன்பை விட அதிக ஆர்வத்துடன் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டியது அவசியம் என்றும், அவ்வாறு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதில் தான் என்றும் போல் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

நிறைவாக, புதிய செயற்குழு உறுப்பினர் முஹம்மத் ஸிராஜ் அனைவருக்கும் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

திரளான உறுப்பினர்கள்...

இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகத்தினரும், துணைக்குழு பொறுப்பாளர்களும் விமரிசையாக செய்திருந்தனர்.








மக்வா புதிய செயற்குழு தேர்தல் நிகழ்வுகளின் படக்காட்சிகளைத் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!

இவ்வாறு, மக்வா செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி வடிவமைப்பு:
S.K.ஸாலிஹ்

படங்கள்:
செய்யத் ஐதுரூஸ் (சீனா)


[கூடுதல் தகவல்கள் & படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 11:45 / 07.03.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by f.shaik salahudeen (dubai) [07 March 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26062

அல்ஹம்துலில்லாஹ். எனக்கு வாழ்த்து கூற வார்த்தை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திக்கிறேன்.

அஸ்ஸலாமுஅழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [07 March 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26063

"வாழ்க ஜனநாயகம்"

அருமையான வழி, மன்னராட்சி மாறவேண்டும்-
EVERY ORGANIZATION HAS TO FOLLOW......

காக்கா' "மக்வா" என்ற பெயரை மாற்றினால் நல்லது....

By : S.A. Ayesha Hannan - Riyadh

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by salai s nawas (singapore) [07 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26064

ஹும்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல... என்னத்த பாக்க.... மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவிகளே!!!! என் அருமை காயல் கண்மணிகளே !!!!!

ஒரு மினி ராஜாங்கமே நடத்தி முடித்து விட்டீர்கள். இந்த செய்தியையும் போட்டோவையும் 10 தடவையாவது பார்த்து முடித்திருப்பேன். என்ன ஒற்றுமை என்னா மகிழ்ச்சி.

இன்று போல் என்றும் இருக்க அல்லாஹ் அருள் புரியட்டும் !!

மசூத் காக்காக்கு வாழ்த்துக்கள்.

ஆயுளில் ஒரு தடவையாவது மக்வா கூட்டத்துக்கு போய் கலரி கறி சாப்பிட்டு வரணும்.

உங்களில் ஒருவனாய்
-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 March 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26065

மக்வா-வின் புதிய நிர்வாக குழுவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

- சில நாட்களாக மக்வா-வின் செய்திகளை பார்க்க.. பார்க்க அதிசயமாகவும், ஆனந்தமாகவும் இருந்தன. இப்படி ப்ரபசனலாக ஒரு தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை தெரிவு செய்ததையும், அவர்களின் ஒற்றுமையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா.!!

- சென்ற மாதம் விடுமுறையில் கோழிக்கோடு சென்று இருந்தேன், மாமா அவர்களின் புதிய வீட்டை காண கூடவே பார்க்காத சொந்தங்களை காணவும். மிகுந்த மன நிறைவுடன் திரும்பி வந்தேன்,

- அங்கு நடந்த விசேசத்தில் காணக்கிடைத்த காட்சி - ஒற்றுமை, சந்தோசம், குதூகலம்.

- ஒரு வைபவத்திற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் குறுசெய்தி (MMS) மட்டும் அனுப்புகிறார்கள். அனைவர்களும் தேனீக்கள் போல அங்கு ஆஜராகி விடுகிறார்கள். தேன் கூட்டில் வேலைக்கார ஈக்கள் தான் சுறு சுறுப்பாக வேலை செய்யும். ஆனால் இங்கோ அனைத்து தேனீக்களும் வேலை செய்கின்றன.

- அன்றே தெரியும், புதிய தலைவர் சகோதரர் எஸ்.எம்.மஸ்ஊத் அவர்கள்தான் என்று. காரணம் அனைவர்களின் மனதில் இடம்பிடித்து இருந்ததை காணமுடிந்தது.

** இதே சந்தோசம், மன நிறைவு, நடைபெற்று வரும் இறைவனின் திருப்தி பெற்ற மக்கள் பணிகள், ஒற்றுமை அனைத்தும் நிரந்தரமாக குடிகொள்ள வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.

ஒரு சிறு வருத்தம், செயல்வீரர் சகோதரர் ஹைதுரூஸ் ஆதில் அவர்கள் நிர்வாக குழுவில் இல்லாதது.

வாழ்த்துக்களுடன்,
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Fantastic !!
posted by Salai Mohamed Mohideen (Dallas) [07 March 2013]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 26066

மக்வாவின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல் முதல் காயல் கலரி சாப்பாடு வரையிலான செய்தியுடன் கூட அனைத்து புகைப்படங்கள் மிகவும் அருமை . . . வாழ்த்துக்கள் !!

ஒரு தேர்தல் கமிசன் நடத்தும் சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தலை போன்ற நடைமுறகளை கடைபிடித்து... மிகவும் நேர்த்தியாக தங்கள் காயல் நல மன்ற தேர்தலை நடத்தி ஒரு முன்னுதாரனமாய் ஆக்கி விட்டார்கள். தேர்தல் டீமுக்கு ஒரு சபாஷ் !!

ஒரு காயல் நல / சமூக அமைப்பாக... இவர்கள் நடத்திய ஜனநாயக தேர்தல் ஒருபுறம் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் மறுபுறம் சமூக சேவைக்காக நான் - நீ என்று 25 சகோதரர்கள் தேர்தல் களத்தில் புகுந்தது அவர்களின் ஆர்வத்தை சமூக பற்றை பறைசாற்றுகின்றது. நன்மையை கொள்ளை அடிப்பதில் - மக்கள் சேவை செய்வதில் 'நான் - நீ' என்று தகுதியானவர்கள் / விருப்பமுள்ளவர்கள் போட்டி போடுவதில் தவறில்லை !

இதில் ஒரு படிப்பினையுள்ளதாக உணர முடிகின்றது . (பொதுவாக) அதென்னமோ தெரியவில்லை... சமூக / பொது நல அமைப்புகளின் பதவி / பொறுப்புகள் என்று வரும்போது மட்டும், ஏதோ ஒரு கடமைக்காக - ஒரு கவுரவத்திற்காக வசதி படைத்த அல்லது அனுபவத்தை / வயதை அடிப்படையாக கொண்டு பெரியவர்களை - அவர்களை திருப்தி படுத்துவதற்காக (அமைப்பின் நோக்கத்தை மறந்து) அவர்கள் அதனை விரும்பியோ விரும்பாமலோ ஆயிள்கால தலைவாராக (ஏனைய பொறுப்புகளில்) இருக்க சொல்லி அவர்களை கட்டாய படுத்துகின்றோம்.

பெரியவர்களை & வாரி வழங்கும் வசதி படைத்த தனவான்களை கண்ணிய படுத்துவத்தில் / முன்னிலை படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் மீது இதனை திணிக்கின்றோம் அவ்வளவு ஏன்... அவர்களுக்குள் ஒரு கவுரவ போட்டியை கூட ஏற்படுத்தி விடுகின்றோம். அவைகளை தவிர்த்து ஒட்டு மொத்த சமூகத்தை பிரதி பலிக்கும் சமூக / பொது நல அமைப்புகள் என்று வரும்போது, இது போன்ற ஜனநாயக தேர்தல் / அணுகு முறையை கடைபிடித்து தலைவர் அல்லது செயற்குழுவினரை தேர்வு செய்வது ... அந்த அமைப்பு ஒரு வலுவானதாக உண்மையான - திறமையான சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய அதே நேரத்தில் எல்லோராலும் அங்கிகரிக்கபட்ட ஒன்றதாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து !

அதெல்லாம் சரி... விருந்தாளியாக வந்த சாலிஹ் காக்காவுக்கு எப்படி ஓட்டுரிமை கிடைத்தது? சந்தடி சாக்குல ஒரு ஓட்டும் போட்டுட்டு போயிட்டார் போல தெரியுது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வாழ்த்துக்கள் ... பாராடுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [07 March 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26067

மக்வா-வின் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்து எடுக்க பெற்ற எனது இனிய நண்பர் எஸ்.எம்.மஸ்ஊத் அவர்களுக்கும் மற்றும் புதிய நிர்வாக குழுவிற்கு தேர்ந்து எடுக்க பெற்ற உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

மிக அருமையான முறையில் ஜனநாக வழியில் தேர்தலை நடத்தி புதிய நிர்வாக குழுவை தேர்ந்து எடுத்த விதம் மிகவும் பாராட்டுக்கு உரியது .

உங்கள் நல்ல சேவைகள் மூலம் நம் காயல் நகர மக்கள் மேலும் பயன் பெற வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .. உங்களின் பனி சிறக்க எனது நல் வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஜனநாயக தேர்தல்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [07 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26068

ஒரு அமைப்புக்கோ, ஒரு அரசாங்கத்துக்கோ தேர்தல் எப்படி முறைப்படி நடைபெறுகிறதோ அந்த இலக்கணத்தின் அடிபடையில் மக்வா அமைப்பின் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றிருக்கின்றது. அல்ஹம்திலில்லஹ்!

தேர்தெடுக்கப்பட்ட அனைத்து புது செயல் சகோதரர்களுக்கு என்இதய நல்வாழ்த்துக்கள் !

தேர்தலின் சீரான செயல் பாடுகளின் கோர்வை சிறப்பாக இருந்தது. இதே ஜனநாயக முறையை எல்லா இயக்கங்களும்,அமைப்புகளும் பின்பற்றினால் எந்த ஒரு பிசிரான எண்ணங்களுக்கும் இடமிருக்காது!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஜனநாயக மாளிகை!
posted by kavimagan (qatar) [07 March 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26069

அரசியல் பிரிவினை, கொள்கை கருத்து வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, படித்தவர்களின் ஆதிக்கம், தனது ஜமாஅத்தின் மீது மட்டும் அதீத பாசவெறி, இவற்றையெல்லாம் களைந்து ஒரு மன்றம் பேதமற்ற சமூக சேவைக்காக உண்டாக்கப்படும்போதே அதன் ஜனநாயக அடித்தளம் அமைக்கப்பட்டு விடும். அந்த அடித்தளத்தின் மீது அழகாக கட்டப்பட்ட வீடுதான் மக்வாவின் தேர்தல். தேர்வானவர்களுக்கும், தேர்ந்து எடுத்தவர்களுக்கும் சம உரிமை கொண்ட ஜனநாயக மாளிகையை கட்டி எழுப்பி இருக்கும் மக்வாவிற்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்படவில்லை எனினும் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் களம் கண்ட வீரர்களுக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும், தலைவர் - எனது பாசத்திற்குரிய காக்கா மஸ்ஊத் அவர்களுக்கும், ஹைதுரூஸ் ஆதில் அவர்களைப் போன்ற சமூகப் பணியாளர்களுக்கும், எனது நல்வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.

வளைகுடா நாடுகளில் செயல்படும் எமது மன்றத்தில், இந்த முறையை செயல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் இருப்பினும், உடனடியாக இல்லாவிட்டாலும் வருங்காலத்திலாவது அல்லாஹ்வின் உதவியால் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையை, எமது மன்றத்தில் நான் எடுத்து வைப்பதற்கு மக்வாவின் இந்தத் தேர்தல் முன்னோடியாக அமைந்துவிட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஆவல்,,,
posted by MS MOHAMMED LEBBAI (DXB) [07 March 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26070

வேற எந்த அமைப்பும் ஏற்படுத்தாத ஒரு ஆவலை தங்கள் மக்வா ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.

வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. எம் சொந்தங்களை ...
posted by Syed Hasan (Khobar) [07 March 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26072

எம் சொந்தங்களை காணுகையில் எம் மனம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறது. அல்லாஹ் உங்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் தருவானாக. உங்கள் அனைவரயும் ஒருமுறை ஒன்றாக காண ஆவல்.

-ஹசன் (JB TOOLS மர்ஹூம் VJக்கா மகன்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்.......
posted by Faizal Rahman (Doha-Qatar) [07 March 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26074

அஸ்ஸலாமு அழைக்கும்,

மக்வா- வின் வெற்றி பெற்ற உறுப்பினர் அனைவர்களுக்கும் என் நெஞ்சார்த வாழ்த்துக்கள். போட்டோ-வில் நண்பன் செயத் இப்ராகிம் காதர் மொஹிடீன் (பல்கிட்டி), சிராஜ் பார்த்ததில் சந்தோசம்..

உங்கள் சேவை என்றும் நம் காயல் நகருக்கு தொடரட்டும் - வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,

பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [07 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26076

மக்வா அமைபிற்கு புதியதாக தேர்வு பெட்ட பொதுநல ஆர்வலர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...மகவா
posted by hylee (colombo) [07 March 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26079

அன்பு மசூத் காகா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தெடுக்கப்பட்ட அனைத்து புது செயல் சகோதரர்களுக்கு என்இதய நல்வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [07 March 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 26080

இந்த இணையதளத்தின் செய்தியாளர்,தாருத்திப்யான் நெட்வொர்கின் நிறுவனர் sk சாலிஹ் காக்க, மற்றும் காக்கும் கரங்கள் இயக்க தலைவர் ஜைனுல் ஆப்தீன் எப்போது mkwa உறுப்பினர்கள் ஆனார்கள். ஓட்டுப்பதிவின் போது தங்கள் வாக்குகளை பதியும் புகைப்படம் வந்துள்ளதே,அப்படி என்றால் இவர்களும் அதன் உறுப்பினர்களா?

தேர்வு பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வாழ்த்துக்கள்....
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [07 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26081

பழைய - புதிய நிர்வாகிகள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Lesson to learn
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [08 March 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 26087

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக நண்பன் மசூத், (குட்டி) மாமா ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பக்கத்து விட்டுக்காரர் சூபி.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. வாழ்த்துக்கள்!
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Kayalpatnam) [09 March 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 26127

அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!

ஆருயிர் நண்பன் சிராஜ், அன்புத்தம்பி சூஃபி உள்ளிட்ட அனைத்துச் சகோதரர்களும் ஓரணியில் நின்று நகர்ப்பணியை இறைப்பணியாகத் தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. MKWA இன்னும் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [09 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26131

எல்லா புகழும் இறைவனுக்கே.

எமது MKWA வின் இந்த செய்தியை வாசித்த, கருத்துக்களை தெரிவித்த, மற்றும் MKWA வின் நலம் விரும்பும் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுவின் அருள் உண்டாகட்டுமாக.

அதிகமானவர்களின் கருத்தும் இந்த ஜனநாயக தேர்தல் முறையை பாரட்டியவண்ணமே இருக்கிறது. புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே. இது போன்ற தேர்வையே மக்கள் விரும்புவதால் சாத்தியபடும் இடங்களிளெல்லாம் இதை நடைமுறை படுத்த அன்பான வேண்டுகோள்.

ஜனநாயக முறையிலான இந்த தேர்வில் தன்னார்வமாகவே செயல் படுவதர்க்காக, போட்டியிட்ட அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்களே. அனைவருமே செயற்குழு உறுப்பினர் ஆகுவது சாத்தியமில்லை என்பதால் அதில் இருந்து 15 நபர்கள் தேர்வாகி உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். அவர்களின் சேவையால் MKWA இன்னும் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்.

இந்த ஜனநாயக தேர்வில், வாசகர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தேர்தலை நடத்துவதற்காக அதற்க்கென்று உருவாக்கப்பட்ட (நான்கு பேர்கள் கொண்ட ஒரு குழு) தேர்தல் கமீஷன். அந்த தேர்தல் குழுவின் செயல்பாட்டிற்கு யாராலும் எந்த வித தலையீடும் இல்லாமல் அதை சுதந்திரமாகவே செயல்பட வைத்ததும் MKWA வின் தனி சிறப்பாகும்.

தேர்தல் பணிகளை மிகவும் சிறப்பாக செய்து முடித்த தேர்தல் கமீஷனையும் இந்த நல்ல வேலையில் மனமார பாராட்டுகிறேன்.

ஒரு சகோதரி MKWA வின் பெயரை மாற்ற கருத்து தெரிவித்துள்ளார்கள். உங்களின் ஆலோசனையை mkwa.clt@gmail.com என்ற முகவரிக்கு தெரிவிக்கலாமே.

இவர்களுக்கெல்லாம் வாக்குரிமையா? என்ற நியாயமான கேள்வியும் சிலருக்கு எழுகிறது. இந்த செய்தியை நன்றாக கவனித்து படித்தால் அதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும். மலபார் வாழ் காயலர்கள் என்பது தான் MKWA வின் உறுப்பினர் ஆகுவதற்கான அடிப்படை தகுதி. இதை வாசிக்கும், இந்த தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் உறுப்பினர் விண்ணப்ப படிவம் பெற்று முறைப்படி உறுப்பினர் ஆக அன்புடன் வேண்டுகிறது MKWAவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved