செய்தி: “தாய் வீட்டில் தங்கல்’ குறித்து சென்னையில் கருத்தரங்கம்! காயல்பட்டினத்து தகவல்களையும் உள்ளடக்கி, அமெரிக்க மானுடவியலாளர் சிறப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயலின் கலாச்சாரம் கண்ணியமானது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[13 April 2015] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40117
"தாய் வீட்டில் தங்கல்" என்ற தலைப்பில் வந்திருக்கின்ற
இந்த செய்தி சரியா அல்லது தவறா என்ற ஆராய்ச்சிக்கு போகுமுன், எனக்கு ஒரு மார்க்க விளக்க தீரிப்பை அறிய விரும்புகிறேன். பெண் தன் தாய் வீட்டில் தங்கினால் அது இஸ்லாத்தில் குற்றமா? அல்லாஹ்வாலும் அருமைத்
தூதராலும் இது ஹராமான செயல் இதை செய்பவர்கள் பாவத்திர்க்குறியவர்கள்,நரகத்திற்கு சொந்தக்காரர்கள் என்று கூறி இருகிறார்களா? அப்படி ஒரு தீர்ப்பு இருந்தால் அது ஆதாரத்துடன் எங்களுக்கு கிடைக்குமா? என்பதை உலமா பெருந்தகைகளிடமிருந்து பெற விரும்புகிறேன்!
ஒருவேளை அப்படியொரு சட்டம் இஸ்லாத்தில் இல்லை, பெண் தாயுடன் தங்குவது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகாது எனபது தெளிவாகிவிட்டால்,அடுத்து கவனத்தில் பலரும் கொண்டுவருவது,பெற்ற பெண் பிள்ளைக்கு வீடு கொடுத்து திருமணம் செய்வது என்பது, வரதட்சணைக்கு வழிவகுக்கும் செயல், இது கேவலம் இல்லையா? என்று இந்த வரதட்சணை பெரும் நிகழ்வை "தாய் வீடு தங்கல்" என்ற நிகழ்வோடு முடிச்சிப்போட்டு தாங்களும் குழம்பி நம்மையும் குழப்ப முயற்சித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்!
எச்சூழ்நிலையிலும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. மணமகன் "மஹர்" கொடுத்துதான் திருமணம் முடிக்கவேண்டும் அதுதான் நபிவழி திருமண முறையாகும்!
இப்போதுள்ள எதார்த்தத்தை பேசுவோம், தாய்வீடு தங்காமல் தன் கணவன் வீட்டாருடன் செல்லும் வழமையுள்ள திருமணங்களில் அந்த மணமகன் முறையாக "மஹர்" கொடுத்திருக்கிறாரா? "வலிமா"என்ற திருமண விருந்துகள் அனைத்திற்கும் அரை பைசாக்கூட மணமகள் வீட்டிலிருந்து பெறாமல் அச் செலவுகள் அனைத்தையும் மணமகனே செய்திருக்கிறாரா? சீர் சனது என்ற ஒரு ரூபாய் பெறுமதியான பொருளைக்கூட பெண் வீட்டாரிடமிருந்து பெறாமல் அத்திருமணம் நடந்ததா? தன் தாய்போட்ட நகை அரை கிராமாக இருந்தாலும் அதையும் கழட்டிக்கொடுத்து விட்டு நான் தரும் ஆடையை மட்டுமே உடுத்துக்கொண்டு என்னுடன் வரவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் எத்தனை திருமணங்கள் நடந்தன என்பதை அறுதியிட்டு உறுதியாக அல்லாஹ் அறிய கூறமுடியுமா?
தன் தாய் தன் பிள்ளைக்கு ஒருரூபாய் பெறுமதியான பொருளை கொடுப்பதும் சரி, ஒரு வீட்டை கொடுத்து தன் துணைவானோடு மகிழ்வுடன் இணைத்து வாழவைப்பதும் சரி
வீட்டைப்பெறுவது அவமானம் என்றால் அந்த மாமா,மாமியார் இடமிருந்து பெறும் எந்த சிறிய பொருளும் அவமானம் தானே?
ஒரு xxxx இயக்கத் தலைவர் தான் செல்லும் ஊரெல்லாம் காயல்பட்டணத்தில் மாமியார் வீட்டிலேயே மருமகன் வாழும் கேவலமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளார்கள் என்று ஏளனமாக பேசுகிறார் ஆனால் அவர் அல்லாஹ்வும் அருமை ரசூலும் ஹராம் என்று சொல்கின்ற ஒரு திருமண முறையை காயலில் செய்கிறார்கள் என்று இன்றுவரை அடித்து சொல்ல வில்லை
நான் அத்தலைவருக்கு மேலே எழுதியுள்ள என்னுடைய சந்தேகங்களையும்,என் விளக்கத்தையும் எழுதி
கேட்டதோடு,அவருக்கு ஒரு அறைகூவலும் விடுத்தேன்
அதாவது,ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவோம்,மணமுடித்த முஸ்லிம் பெண்கள் மாமியார் வீட்டில் தங்கி இருப்பது விருப்பமா?அல்லது தன் தாயுடன் தங்குவது விருப்பமா? என்பதை தங்கள் ஒப்புதலை வாக்களித்து தெரிவிக்கவும். தாங்களின் வாக்கு ரகசியமாவும் நீங்கள் யாருக்குவாகளித்தீர்கள் என்பது வெளியில் தெரியாது.என்கின்ற ஏற்ப்பாட்டை செய்யவும் உங்கள் அமைப்பினருடன் நாங்களும் ஒத்துழைத்து உதவி செய்ய சித்தமாக உள்ளோம் என்று கூறி இருந்தேன்!
இதன் முடிவு,மாமியார் வீட்டில் தங்குவதைத்தான் மிக,மிக விரும்புகிறோம் என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார் களேயானால்,அடுத்த கணமே எங்கள் காயல் திருமண முறையை திருத்தியமைக்கவும்,சமுதாய பணிகளை தீவிரமாக செயல்வடிவமாக்கவும் பாடுபடுவோம்!
ஒருவேளை தாய்வீட்டில் தங்குவதைத்தான் மிக,மிக விரும்புகிறோம் என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார் களேயானால்,நீங்கள் காயலைப்பற்றி கூறும் அவதூறு பிரச்சாரங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு இனிமேலும் காயல் ஊரின் திருமண காலாச்சாரத்தை விமர்சிக்க மாட்டேன் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிக்கை விடுவீர்களா? என்று கேட்டிருந்தேன்.இதுவரை பதிலில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross