ஏக்கமும்,எதிர்பார்ப்பும் பெற்றோர்களுக்கே!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[03 April 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3735
பாராட்டத்தக்க நல்லதோர் முயற்சி தான். அரும்புகளுக்கு ஆர்வமூட்டும் புதுமையான முயற்சி! இப்படியொரு பட்டம் தன் பிள்ளைக்கு கிடைக்கின்ற போது ஏற்படும் மகிழ்ச்சி, பெற்ற தாய், தந்தையருக்குத் தான் தெரியும்! அதன் பெருமிதமும்,பூரிப்பும்.
தன் பிள்ளை படித்து ஆளாகி தமக்கும்,தம் மண்ணுக்கும்,பெருமை சேர்த்து தருவான் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்த்து தம் உடல், பொருள், ஆவியைத் தன் பிள்ளைகளுக்காவே அர்ப்பணித்து கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர். அத்தகைய தியாக உள்ளங்களாகிய பெற்றோரது மனதைக் குளிர்விக்கும் இச்செயல் நிச்சயம் பாராட்டுக்குரியதே!
அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, காயாகி, கனியாகி, தழைத்தோங்கி, நிழல் தரும் மரமாய் நாளை பயன் தரப்போகும் மழலைகளை கவுரவிக்கும் நல்லாசிரியர் தமக்கு எல்லா வளமும் ஏகிட வல்லோனை வேண்டுகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross