செய்தி: நகரில் அமிலக் கழிவைக் கலக்கும் டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து KEPA அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உண்மை விழித்தெழும் காலம் கண தூரமல்ல! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[05 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34137
"KEPA " வின் ஆர்வமுடைய அவசர கூட்டத்தையும் அதனால் வெளிவந்த ஆட்கொல்லி நச்சு ஆலைக்கெதிரான பிரசுரம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட நடவடிக்கையையும் பாராட்டுகிறேன். இந்த ஆலையின் அங்குள,அங்குள நடவடிக்கையை நுண்ணிப்பாக கவனிக்கும் நம்"KEPA ". அமைப்புக்கு நம் அனைவர்களின் ஒத்துழைப்பையும் ஒருசேர கொடுப்பது காயலர்களின் தார்மீக கடமையாகும்!
நாம் எந்த தனிப்பட்ட அரசியல் கட்சியையும் நம்பி நிற்காமல் நம்மை நாமே நம்பி நம்மால் ஏற்படுத்தப்பட்ட "KEPA " அமைப்பையே நாம் ஒற்றுமையுடன் வலிமைபடுத்தி முன்னெடுத்துச் சென்று முயற்சிப்போமேயானால் முன்னோனின் உதவியால் வெற்றி இலக்கை எட்டாலாம்
என்னை வெற்றிபெற வையுங்கள் நான் DCW யைப்பார்த்து கொள்கிறேன் என்று சுயேச்சை மற்றும் இன்று முளைத்து அறிமுகமாகிய கட்சி முதல் ஆண்டாண்டுகாலமாய் இருக்கும் கட்சிகள் வரை தங்கள் வெற்றிக்காக நம்மிடம் பல்லிளித்துக்கொண்டு பவனி வரும் நாடகங்கள் தான் அன்றாடம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது!
அன்பு காயல் சகோதரர்களே, ஆரம்பமுதல் எந்த சுயநலமும் பாராமல் இரவு பகலாக நம்மூர் நன்மைக்காக இக்கொடிய
ஆலையின் கழிவுகளால் ஏற்ப்பட்ட உயிர்பலி முதல் அத்தனை துன்பங்களையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்தறிவித்து இன்றுவரை போராடும் புண்ணிய அமைப்பான "KEPA" அமைப்பு ஒன்றை மட்டும் நாம் நம்பி நம் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை அவர்களுக்கு தெரிவிப்போமாக,வல்ல இறைவன் உண்மையின் பக்கமுமாகவும் ,நமதூர்மக்களின்இன்னல்களுக்கு எதிரானதொருதாகவும் நல்லதொரு தீர்ப்பை தந்தருள்வானாக ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross