எங்கே வாரிசு அரசியல்? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[24 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32672
அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமையை ஒட்டுமொத்தமாக பெற்று வெற்றி வழியை தேடும் இத்தருணத்தில், தென் மண்டல சிங்கம் என்று வர்ணிப்புக்குள்ளான வலிமை மிகு தலைகளில் ஒருவரான அழகிரியை நீக்கியது ஒரு துணிச்சலான நடவடிக்கை!
ஐந்து பேர் கொண்ட கட்சியானாலும் தலைமைக்கு கட்டுபடுபவர்தான் கட்சியின் கொள்கையை காப்பாற்றியவராவார்!
தலைமையை தூக்கிஎறிவது என்பது,தோணியின் துடுப்பை தவிர்ப்பதற்கு சமமாகும்,துடிப்பில்லாத் தோணி எக்காலத்தில். எந் திசையில் கரையை எட்டும் என்று எவராலும் சொல்ல முடியாது!
கொள்கை கோபுரத்தில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் தி.மு.க வில் அவ்ஒளியை மங்க செய்யும் முயற்சியில் முனைவது
தன்மகனாக இருந்தாலும் எடுத்தெறிய தயங்கோம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதுதான் தி.மு.க.
துணிச்சலான நடவடிக்கை,தன் இனம் என்று பாராமல்
தன் தனையனுக்கெதிரான தன்னலமற்ற தலைமையின்
இம்முடிவிலிருந்து வாரிசுகளுக்கே தி.மு.க வை தாரைவார்த்து விட்டார் என்று இதுவரைபழித்தவர்கள் இப்போதாவது சற்று விழிப்பார்களா?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross