Re:...சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் posted byHAMEED RIFAI (Yanbu - KSA)[07 May 2013] IP: 204.*.*.* United States | Comment Reference Number: 27267
நகராட்சியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம், இந்தக் கூட்டம் ஆகிய இரண்டும் ஒரே அமர்வில் நடைபெற்றதால், இவ்விரு செய்திகளிலும் பின்வருமாறு எனது கருத்தைப் பதிவு செய்துள்ளேன்:-
கருத்து எழுதவே மனம் வரவில்லை. அந்தளவுக்கு சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் நகர்மன்ற உறுப்பினர்கள். இருந்தாலும், மனதில் குடைந்துகொண்டே இருப்பதால், சில கேள்விகளைக் கேட்டு விடுகிறேன்.....
03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் அவர்களே!
(1) தாங்கள் உட்பட 10 உறுப்பினர்கள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்ததாக தினகரன் உள்ளிட்ட நாளிதழ் செய்திகள் தெரிவித்துக்கொண்டிருக்க, “இல்லை” என மறுக்கிறீர்களே? அப்படித்தான் என்றால், தங்களைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு முறையாக மறுப்பு அளித்துவிட்டீர்களா?
(2) தாங்கள் அதிமுகவில் இணைந்ததற்கு கடித ஆதாரம் இருப்பதாக துணைத்தலைவர் மும்பை முகைதீன் சொல்கிறாரே, இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
(3) “மரியாதை நிமிர்த்தமாகவே அமைச்சரை சந்தித்தேன்” என்று கூறும் தாங்கள், கட்சியில் சேரச் சென்ற உறுப்பினர்களுடன்தான் சென்றிருக்க வேண்டுமா? வேறு நேரமே தங்களுக்குக் கிடைக்கவில்லையா?
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்களே!
இப்போதும் தலைவி மீது நம்பிக்கையில்லாமல்தான் இருந்துகொண்டிருக்கிறோம். ஊர் நலனுக்காகவே மீட்டிங்கில் கலந்துகொண்டுள்ளோம் என்று சொல்லும் தாங்கள்,
(1) ஊர் நலனுக்காக தெரு விளக்கு உதிரிபாகங்கள் வாங்கவும் கூட்டப்பொருள் வைக்கப்பட்ட பிப்ரவரி மாதக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன் என்ற தலைவியின் கேள்விக்கு தங்கள் பதில் என்ன?
(2) இதுவரை தாங்கள் எந்தெந்தக் கூட்டங்களில் எது எதற்காக வெளிநடப்பு செய்தீர்கள் என்று பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா? அப்படி சொன்னால், உங்கள் மக்கள் நல உணர்ச்சி மேலீட்டை நாங்களும் அறிந்துகொள்வோம் அல்லவா?
(3) நகர்மன்றத் தலைவி அவர்கள் தன் சொந்தச் செலவில் (கருப்புப் பணமல்ல!) நடத்திய பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மீது - குறிப்பாக உங்கள் மீது குற்றஞ்சாட்டி பல விஷயங்களைச் சொன்னார்களே? அவற்றுக்கெல்லாம் அறிக்கை மூலம் பதில் அளிக்க தயாரா?
06ஆவது வார்டு உறுப்பினர் மம்மி ஹாஜியார் அவர்களே!
(1) இரண்டாவது பைப்லைனுக்கு, பழைய சேர்மன் வாவு செய்யிது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்கள் பணம் தருவதாகக் கூறியதாக தாங்கள் கூற, “அவர் பணம் தருவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை” என்று துணைத்தலைவர் கூறுகிறாரே? இதன் உண்மை நிலை என்ன?
(2) வாவு செய்யது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்கள் பணம் கொடுத்தார்களா அல்லது வாக்குறுதி மட்டும்தானா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross