நண்பர் எஸ்.கே.ஸாலிஹின் இக்கட்டுரை வெறும் எழுத்துக்கள் அல்ல. மாறாக, ஊரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உண்மைகள்!
மழை என்பது இறைவனின் அருட்கொடை. அதைத் தடுக்கவோ - கூட்டவோ - குறைக்கவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது முடியவும் செய்யாது. ஆனால் அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதற்கு இறைவன் நமக்கு சில ஆற்றல்களையும், அறிவுகளையும் தந்திருக்கிறான்.
அண்மையில், தமிழகத்தின் சென்னை - கடலூர் போன்ற பகுதிகளிலும், தற்போது நமதூரிலும் பெய்துள்ள இந்த அதிகப்படியான மழை மூலம் சில படிப்பினைகளை அனைவரும் பெற்றேயாக வேண்டும்.
இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ள சகோதரர்கள் ஜமால் காக்கா,
சாளை சலீம் காக்கா மற்றும் கவிமகன் ஆகியோர் தொடர்ந்து
விவாதிக்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
காரணம் என்னவெனில், விவாதத்தில் பங்கேற்க விரும்பவில்லை
என்ற சூட்டிகையுடன் உள்ளே நுழைந்த AWS அவர்கள், கவிதை
மற்றும் கவிஞர்களை சாடும் நோக்கத்துடன் இறைவசனத்தையே
தவறான பாதையில் வளைக்க முயற்சி செய்து, வைரமுத்துவை
மேற்கோள் காட்டும் நிலைக்குச் சென்றார். ஏராளமான நேயர்கள்
அவரது தவறை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை எடுத்துக்
காட்டி பகிரங்கமாக கண்டனம் செய்ததும், அடுத்த பதிவில் அதைக் குறித்து கருத்தே எழுதாமல், குர்ஆன் மட்டும் போதும் என்ற ரீதியில் ஒருவாதத்தை எடுத்து வைத்துள்ளார்.
அடுத்தது எல்லா விஷயத்தைப் போல, மார்க்க விஷயத்தையும்
சகோதரர் ஜியாவுதீன் அவர்கள் தமாஷாகக் கையாளும்விதம்
அவரது கண்ணியத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது. கவிமகன்
எழுதிய கவிதையைக் குறித்த சரியான புரிதல் இல்லாமலேயே,
அவரை ஏளனப்படுத்தும் விதத்தில் மஸ்தான்சாஹிப் பாடல்கள்
என்றார். ஜியா அவர்களே! மஸ்தான் சாஹிப் பாடல்கள் என்றால்
என்னவென்றாவது உங்களுக்குத் தெரியுமா? பின்னர் மற்றவர்களின் கருத்துக்களைப் பார்த்து சுதாகரித்துக் கொண்ட இவர், அறிவுஜீவி பி.ஜே.அவர்களின் இணையதளத்தை ஆதாரமாக்கி வாங்கி கட்டிக் கொண்டார். மீண்டும் அடுத்த பதிவில் விவரமாக அலசுவோம் என்று ஆரம்பித்த அவர், அபூதாலிப் குறித்த நாயகத்தின் ஹதீஸை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கவிமகன் போட்டுவைத்திருக்கும் கிடுக்கிப் பிடியை அறியாமலே, அவருடைய வாதத்திற்கு சாதகமான இறைவசனங்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை பீஜேவின் தளத்தில்
இருந்து கட் அன்ட் பேஸ்ட் செய்து ஒதுங்கிக்கொண்டார்.
ஆரம்பம் முதலே என்ன நடக்கிறது என்பதை புரியாமலேயே விவாதகளத்தில் இருக்கும் இவருடன் விவாதித்து என்ன பயன்?
இறுதியாக சகோதரர் Cnash அவர்கள், மேலோட்டமாய் கொஞ்சம்
விவரமாக எழுதுவதைப்போல் தோற்றமளித்தாலும், இவரது
கதையும் அதே பாதைதான். கனவுகள் மார்க்கமில்லை என்றும்
அபூலஹப் பற்றிய ஹதீஸ் எல்லோராலும் நிராகரிக்கப்பட்டு
விட்டது என்ற இவரது வாதம் ஜமால் அவர்களால் அடித்து
நொறுக்கப்பட்டு விட்டது. அபூதாலிப் குறித்த ஹதீஸை ஏற்றுக்
கொள்கின்றீர்களா/ மறுக்கின்றீர்களா? என்ற கவிமகன் அவர்களது
கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அது வேறு, இது வேறு
என்பதைப்போன்று எழுத ஆரம்பித்த இவரது கருத்து AWS அவர்களது பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது. இவருடன் எவ்வளவு அதிகம் விவாதம் செய்கிறோமோ, அதைவிட அதிகமான ஹதீசுகளை வெளியே தள்ளி விடுவார். எல்லா விஷயத்திலும் இமாம்களை மறுக்கும் இவர், இப்போது புதிதாக அந்த ஹதீஸை இந்த இமாம் தள்ளிவிட்டார், அந்த இமாம் தள்ளிவிட்டார் என்று, இஷ்டம்போல அடித்துவிட ஆரம்பித்துவிட்டார்.
ஆதலால்தான் நண்பர்களே சொல்கிறேன். இவர்களுடன் விவாதம்
செய்து எந்தப்பயனும் இல்லை. புனித நோன்பு மாதம் நெருங்கிவிட்ட காரணத்தால், அதிகமதிகம் அமல் செய்வோம். நன்மையைத் தேடும் வழியைப் பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross