மேலானபிர்தவ்சுள் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526a)[14 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5260
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.
MARHABAAH MARHABAAH.AHLAN VA SAHLAN posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[08 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5110
அஸ்ஸலாமு அலைக்கும்!
அல்ஹம்து லில்லாஹ்! இந்த ஹிஜரி 1432 ம வருடம் காயல்பட்னத்துக்கு ரெம்ப பாரக்த்தான வருடம் போல் இருக்கிறது, ஊரின் புகழை பல பல துறைகளிலும் மேலோங்க செய்து முதன்மை இடங்களை பெற்று காயலின் பெருமையை மேலோங்க செய்கின்றனர் மக்கள்.. எல்லோருக்கும் பாராட்டுக்கள். துஆவும் செய்கிறோம்.
ஆனால் மார்கத்துரையிலும் இதுபோல் மக்களுக்கு ஈமானின் குவ்வத்தையும் அதில் ஈடுபாட்டையும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக. எல்லாதுறைகளிலும் பேர் வாங்கித்தந்த அனைவரையும் ஒரே மேடையில் அழைத்து வரவேற்று கவ்ரவிப்பது சிந்த காயல் மக்களின் தலையாய கடமை.
MEDICAL துறையில் தலமை பொறுப்பை பெற்ற LKS GROUPS ஹாஜி மர்ஹூம் S,A மீரா சாஹிப் அவர்களின் மகனான, DR.S.A அஷ்ரப் அவர்களுக்கும் நீண்ட நெடிய ஆயுளும் ஈமான் சலாமத்தான வாழ்வையும் தந்தருள்வானாக. அன்னவர்களின் சேவையில் LK HS SCHOOL தலைவர் பதவியில் இருப்பதுபோல் சன்மார்க்க சேவையிலும் நம்மூரூக்கும் நேரடி பங்களிப்பையும் ஈடுபடுத்த அருள்செயவானாக.
அவர்களுக்கு எங்கள் இதய வாழ்த்தையும் துஆவையும் சமர்ப்பிக்குறோம்.. வஸ்ஸலாம்,
TMR/KPM 8-6-2011 WED =5 RJB 1432.
Moderator:தங்களது கருத்துப்பதிவில், செய்தியின் ஒரு பகுதியை தேவையின்றி paste செய்வதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்க!
காணாது காணாது நாள்தான் காணாது posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[24 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4689
அஸ்ஸலாமு அலைக்கும,
இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதென்பது மிகப்பெரிய கஷ்ட்டம் என்பதை யார்தான் நிர்வாகிகளுக்கு விளங்க வைப்பார்களோ தெரியவில்லை. அல்லாஹ தான் கிருபை செய்யவேண்டும்.
சென்ற 1978 ம வருஷம் ஜனவரி 13,14,15 தேதிகளில் நடந்த அகிலவுலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு திட்டம் போட்டு 2,3 வருடங்களின் பின்தான் பல ஒத்திவைப்புகள் நடத்தித்தான் வெகு சிறப்பாக நடந்தேறியது. ஆம். அதில் நாங்களும் ஒரு பிரதான பங்களிப்பு செய்ததன் நினைவுகள் இன்றும் இருக்கின்றது. அல்ஹம்து லில்லாஹ்.
செய்தி: மே 21, 22, 23இல் மத்ரஸா ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் மற்றும் துஆ posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526)[19 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4550
உள்ளன்போடு,உளமார,மனதார வாழ்த்துகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும். தென்னிந்தியா தமிழ்நாடு வங்கக் கடல் வருடிவரும் தங்கக் காயல் பதியின் கீழ்திசையில் இயங்கிவரும் மாநபியின் மாமன்றமாம் புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் சபையின் சேய் சபையாம் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்.
ஆம்! இக்கல்விக்கூடத்தின் ஐம்பெரும் விழாக்கள் (42-ஆம் ஆண்டு துவக்க விழா) இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மே 21,22,23-05-2011 ஆகிய தினங்களில் நனிசிறப்புடன் நடைபெற இருக்கும் செய்தி அறிந்து மற்றற்ற மகிழ்ச்சி. அல்ஹம்து லில்லாஹ்.
இறுதிநாளில் நடைபெறும் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான "அல்ஹாபில் பட்டமளிப்பு" விழாவில் ஆறு ஹாபிலீன்கள் அருள்மறையை அழகுடன், தஜ்வீத் முறையுடன் கற்று, தேர்ந்து ஹாபிள் (ஷனது) பட்டம் பெறுகிறார்கள். அருமையான ஹாபிலீன்களே! உங்கள் அனைவரையும் உள்ளன்போடு, உளமார, மனதார வாழ்த்துகிறேன்.
அருமை ஹாபிலீன்களே! நீங்கள் அல்குர்'ஆனை அழகுடன் மனனமிட்டது போல் இறுதிவரை அதனை மறவாமல் பாதுகாப்பது உங்கள் கடமையாகும். அனுதினமும் பார்த்தும், பாராமலும் ஓதி வருவதுடன், அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களை எடுத்து நடந்து தானும் பின்பற்றி வருவதுடன் பிறருக்கும் அதனை போதிக்கவேண்டும். இறுதி வரை உங்களை ஆளாக்கிய உங்கள் பெற்றோர், உற்றார், உறவினர், உங்களின் ஆசிரியர்கள், அனைவருக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன், உங்களுக்கு களம் அமைத்து தந்த அல்மத்ரசதுள் "ஹாமிதியாவை" கனவிலும் மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் உள்ளங்கள் "ஹாமிதியாவின்" தொடர்ப்பிலேயே இருக்கட்டும். உங்கள் போன்ற பல்லாயிரம் ஹாபிலீன்கள் உருவாக உங்கள் உடல், பொருள், ஆவி போன்ற உதவிகளை அர்ப்பணம் செய்ய என்றும் உறுதுணையாக இருங்கள். ஹாமிதியாவின் சட்டதிட்டங்களை பேணி வருவதுடன், தக்வா, ஒழுக்கம், நல்லமல்கள் பேணுதலாக இருந்து வாழ்வாங்கு வாழ வல்லோனை இரும்கரம் உயர்த்தி வாழ்துகிறேன். இறைஞ்சிகிறேன்.
எல்லாம்வல்ல அல்லாஹ் மார்க்க சேவை புரிந்துவரும் மத்ரசதுள் ஹாமிதியாவின் மார்க்கப் பணிகள் மறுமைநாள் வரை மனம்பரப்ப பேரருள் புரிவானாக! இம்மன்றின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி, மற்றும் ஹிப்ளு பேராசிரியர்கள், தாய், சேய் சபையின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், உபகாரிகள், இந்நாள், முன்னாள் மாணவர்கள், மத்ரஸாவின் வளர்ச்சியில் பங்கேற்கும் தனவந்தர்கள், பெற்றோர்கள், காயல் நகர கண்மணிகள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும், நமது அனைத்து நாட்ட தேற்றங்களையும் நிறைவேற்றி, ஈருலக சகல சௌபாக்கியங்களையும் தந்தருள பிராத்திக்கிறேன்! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross