Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:55:55 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 41
#KOTWEDIT41
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 7, 2011
நகர்மன்ற தலைவரை மக்களே முடிவு செய்யவேண்டும்!
இந்த பக்கம் 4979 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குடிநீர், சாலைகள், குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை தேவைகளை - அதனை பயன்படுத்தும் மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுத்தவே - இந்திய அரசியல் சாசனத்தில், உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. அந்த மன்றங்களை திறம்பட நிர்வகிக்க - உறுப்பினர்களையும், தலைவர்களையும் - தேர்வு செய்யும் பொறுப்பையும் இந்திய அரசியல் சாசனம் - வாக்குரிமை மூலம் - மக்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதனை மையமாக வைத்து தற்போது காயல்பட்டினத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்கள் மிகவும் வருந்தக்கூடியதாக உள்ளது.

காயல்பட்டினம் நகரமன்ற தலைவர் என்பவரை - நகரில் வாக்குரிமை பெற்றுள்ள 28,000 ஆண், பெண் வாக்காளர்களே - நிர்ணயிக்கவேண்டும். பல கொள்கைகள், அதிலும் பல உட்பிரிவுகள், பகுதி பாகுபாடுகள் என்று உள்ள ஒரு நகரில், ஒருமித்த கருத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான - பக்குவத்துடன் அணுகவேண்டிய அம்சமாகும். இப்பொறுப்பை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை எடுத்துக்கொண்டுள்ளது.

அவ்வாறு ஒருமித்த கருத்தில் வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்த ஐக்கிய பேரவை - அதற்காக அறிவித்த வழிமுறைகள், நகர மக்களிடையே பல கேள்விகளை எழுப்பின. துவக்கத்தில் ஐக்கியப் பேரவை நியமிக்கும் 25 நகர பிரமுகர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெறுவர் என்றும், அது சர்ச்சையை கிளப்பிய பின், அவர்களுக்கு வாக்குரிமை இருக்காது என்ற விளக்கமும் வழங்கப்பட்டது. மேலும் தேர்வுக்குழுவில் 26 ஜமாஅத்துக்கள் (பள்ளிகள்) இடம்பெறும் என்றும், 18 பொது நல அமைப்புகள் இடம்பெறும் என்றும், ஒவ்வொரு பள்ளிக்கும் இரு பிரதிநிதிகள்/வாக்குகள் என்றும், ஒவ்வொரு பொதுநல அமைப்புக்கும் ஒரு பிரதிநிதி/வாக்கு என்றும் அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 26 அன்று ஐக்கியப் பேரவை தேர்வு குழுவின் தேர்தலில் 61 பேர் வாக்களித்துள்ளனர். ஆனால், உண்மையாகவே அந்த 61 பேரும் நகரின் 24,000 முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணங்களை அன்று பிரதிபலித்தார்களா என்பதை நாம் சற்று சிந்திக்கவேண்டும்.

தனியாக ஜமாஅத் இல்லாத பள்ளிகளுக்கு இரு பிரதிநிதிகள், சமீபத்தில் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு இரு பிரதிநிதிகள், விளையாட்டு சங்கங்களுக்கு பிரதிநிதிகள், எந்த ஜமாஅத்துக்கும் தொடர்பில்லாத தொண்டு அமைப்புக்கு பிரதிநிதி. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட குழு ஒன்றின் முடிவினை மக்களின் முடிவு என்று எப்படி கூற முடியும்?

மேலும், விருப்ப மனுக்களை ஐக்கிய பேரவை, செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 22 வரை பெறும் என துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. இடையில் - திடீரென - காயல்பட்டின நகர்மன்ற தலைமை பொறுப்பு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட பின்பு - பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி, ஐக்கியப் பேரவையால் எந்த புது அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வாய்மொழி மூலமும், ஊடகங்கள் மூலமும் செய்தி அறிந்த சில பெண்கள் - ஐக்கியப் பேரவையிடம் தங்கள் விருப்ப மனுவை வழங்கியுள்ளனர்.

விருப்ப மனுவை பெற இறுதி நாளான செப்டம்பர் 22க்கு பிறகு, உடனடியாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜமாஅத்தினருக்கும், பொது நல அமைப்புகளுக்கும் - விருப்ப மனு வழங்கியவர்களின் விபரங்களை ஐக்கியப் பேரவை அனுப்பியிருக்க வேண்டும். செப்டம்பர் 26 அன்று மாலை தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று - தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, எழுத்து மூலம் அழைப்பு கொடுத்த ஐக்கியப் பேரவை, யார், யார் விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்ற அடிப்படை விபரத்தைக் கூட இணைத்து அனுப்பவில்லை.

செப்டம்பர் 26 அன்று மாலை நடந்த தேர்வுக்குழு கூட்டத்திற்கு வந்த அதன் உறுப்பினர்கள், யார் யார் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள் என்ற அடிப்படை தகவல் கூட இல்லாத நிலையில், அவர்கள் சார்ந்த ஜமாஅத்/பொது நல அமைப்புகளிடம் எந்த விண்ணப்பதாரரை ஆதரிக்கவேண்டும் என்ற அனுமதியை பெறாமலேயே வந்துள்ளனர். ஆகவே - அன்று ஐக்கியப் பேரவையால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர், வாக்களித்த 61 தனி நபர்களின் தனிப்பட்ட தேர்வே அன்றி - அவர்கள் சார்ந்த நகர ஜமாஅத்துக்கள் சார்பான தேர்வு என்று கூற இயலாது. மேலும் - அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரே அனைத்து ஜமாஅத்துகளின் தேர்வு என்றும், களத்தில் இருக்கும் பிறர் - ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கின்றனர் என்றும் கூறுவது அறிவுடமையன்று என்பது மட்டுமின்றி ஜனநாயகத்தைக் கேலி செய்வதுமாகும்.

புத்தகம் சின்னத்தில் ஆபிதா என்பவரும், லென்சு கண்ணாடி சின்னத்தில் ஆயிஷா பர்வீன் என்பவரும், மைக்கூடு சின்னத்தில் முஹம்மது இப்ராகிம் உம்மாள் என்பவரும், பேருந்து சின்னத்தில் முத்து மைமூனத்துல் மிஸ்ரியா என்பவரும், குறுக்காக உள்ள இரு கூர்வாள்கள் சின்னத்தில் ரூத்தம்மால் என்பவரும், மேஜை மின் விசிறி சின்னத்தில் செய்யத் மரியம் என்பவரும் காயல்பட்டினம் நகரமன்ற தலைமை பொறுப்புக்கு போட்டியிடுகின்றனர்.

அவர்கள் அனைவரின் திறமையை நன்றாக ஆராய்ந்து, அவர்களில் சிறந்த ஒருவரை - 28,000 வாக்காளர்கள், 45,000 நகர மக்கள் சார்பாக - அக்டோபர் 17 அன்று தேர்வு செய்வர். அக்டோபர் 21 அன்று அத்தேர்வின் முடிவு உலகுக்குத் தெரியும்.

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

மாஷா அல்லா. வரவேற்கிறேன்.

ஒரு தெளிவான statement ஐ கொடுத்து உள்ளீர்கள்.

மக்கள் சிந்தித்து வாக்களிக்கட்டும்.

அடிமை இல்லா ஊர் தலைவி ஐ மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

சிந்தித்து வாக்களிப்பீர் .


posted by: M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) on 07 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20337

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

Assalamu alaikum,

i really appreciative you.

your wonderful statement thank you....


posted by: Shajahan (chennai) on 07 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20338

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தெளிந்த நீரோடை கருத்துக்கள்

மிகவும் சிந்தித்து ஒரு தெளிந்த நீரோடை போன்ற கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றிகள். உலகிலேயே மிகப்பெரிய சுதந்திர நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஜனநாயக முறையில் ஒரு கூட்டத்தார் தங்களின் தலைமையை தேர்ந்துஎடுப்பது ஒரு பெரிய கொடுஞ்செயல் என்று ஜமீன்தார்கள் முறையில் எல்லார் விஷயங்களிலும் ஆனவப்போக்கோடு நாங்கள் தான் என்று இனியாவது அயிக்கிய பேரவை ஒதுங்கி இருக்க வேண்டும். அல்லாஹ் மகா பெரியவன்.


posted by: Sahuban Ali (Dubai) on 07 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20339

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

பேரவை புதருக்குளிருந்து இன்னும் பல மர்ம முடுச்சுக்களை அவில்ப்பீர்கள் என்று ஆவலாய் படித்தேன். சிறு ஏமாற்றமே. அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறோம் ஐக்கிய பேரவையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று சொன்ன பகிரங்கமாக வார்த்தையை பற்றியும் சற்று விவரிப்பீர்கள் என்று எதிர்பார்த்த என்னைபோல்லுள்ளவர்களுக்கும் ஏமாற்றமே.


posted by: MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) on 07 October 2011
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20340

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

இந்தியா என்ற நாடு ஜனநாயக நாடு என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் காயல்பட்டணம் எதோ தனி நாடு போலவும் இங்கு நடப்பது மன்னராட்சி போலவும் தான் தோன்றுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களை, யாரால் தங்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நினைக்கிறார்களோ அவர்களை வேறொரு வெளிநபரின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக தன் சுய புத்தியை கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

மக்கள் செல்வாக்கு இல்லாத, மக்கள் ஆதரவு இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்பதனை கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்ட்டிலும், இந்திய அரசியலிலும் நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். ஆட்சிகள் மாறி மாறி வருவதே இதற்கு சாட்சி. தனிநபரின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது.

தேர்தலில் நிற்பது அவரவர் உரிமை அதனை யாரும் தடுக்கவோ, அதில் தலையிடவோ கூடாது. மக்களுக்கு தெரியும் யாருக்கு ஓட்டு போடவேண்டும் யாரை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று. அடுத்தவர் உரிமையில் தலையிடுவதை இந்த ஜமாத்தார்கள் எப்போது நிறுத்தி கொள்வார்களோ அப்பொதுதான் உண்மையான ஒற்றுமை வரும்.

Administrator: Comment edited


posted by: சொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (??????) on 07 October 2011
IP: 113.*.*.* India | Comment Reference Number: 20341

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அழகான, அவரியசியமான தலையங்கம்..

நிறைய தவறுகளை குறிப்பிட்ட நீங்கள், இந்த நவீன 'முச்சரிக்கை' காலாச்சாரத்தையும், ஒரு சாரார் முன்னதாக எழுதி வந்ததை வசித்து, கேள்வி எழும் கேள்விகளை 'நாரே தக்பீர்' என வாயடைக்கும் நவீன ஜனநாயக படுகொலையையும் நீங்கள் கண்டிக்கத்தவறியதில் மிகவும் வருத்தம்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.- குறள்

பொருள்: கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.


posted by: M Sajith (DUBAI) on 07 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20342

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

நன்றி !! உங்கள் தலையங்கத்திற்கு !! பேரவையின் ஒட்டு எடுப்பில் கலந்து கொண்ட நாடு நிலையாளர்களின் பேட்டியையும் போட்டு வெளிவராத பல பல உண்மைகளை வெளி கொண்டு வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். !! KWT அறிக்கை போல் இன்னும் பல அறிக்கை வெளி வரும் என்று எதிர்பார்கிறோம்.

ஆளும் திறமை நிர்வாக திறமை உள்ள உள்ள ஒரு நல்ல தலைவியை தெர்தேடுப்போம்... எந்த ஒரு பேரவைக்கும் நம் தன்மானத்தையும் உரிமையையும் அடமானம் வைக்க எந்த ஒரு காயலரும் தயாராக இல்லை. ரப்பர் ஸ்டாம்ப் தலைவிகளை அடையாளம் காண்போம். யார் கையில் ரிமோட் உள்ளதோ அந்த ரிமோட் கண்ட்ரோலை Oct 17 தேதி செயல் இழக்க செய்வோம்.


posted by: Mohamed Cnash (Kayalpatnam.) on 07 October 2011
IP: 124.*.*.* India | Comment Reference Number: 20343

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

அஸ்ஸலாமு அழைக்கும்

மிகவும் அறிவுப்பூர்வமான , ஆக்கப்பூர்வமான , ஒரு வரவேற்க்கதக்க தலையங்கத்தை கொடுத்துள்ளீர்.அல்ஹம்துல்லில்லாஹ் .



அஸ்ஸலாமு அழைக்கும்

K M SHAFEER ALI
CHENNAI

Administrator: Comment edited


posted by: K M SHAFEER ALI (CHENNAI) on 07 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20344

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

சரியான நேரத்தில் சரியான செய்தி

ஜனநாயகத்தில் யாரும் யாரையும் யாருக்கும் உத்தரவிடமுடியாது ! எங்களுக்கு அரசியல் சாசனம் தந்த உரிமை! வற்புறுத்தல் கூடாது. ஐக்கிய பேரவை என்பது ஊரின் பல ஜமாத்துகளில் இருந்து நிர்ணயிக்கப்பட்டவர்களின் அமைப்பு. அவ்வளவுதான். அந்த ஜமாத்துகளில் மக்களால் வாக்களித்து வெற்றிபெற்று பிரதிநிதிகளாய் அனுப்பப்பட்டவர்கள் அல்ல எனவே அவர்கள் ஜமாதுகளின் பிரதிநிதிகளாய் ஏற்க்கமுடியாது. அவர்கள் எடுக்கும் தீர்மானங்களை ஏற்க்க வேன்றும் என்ற கட்டாயம் கிடையாது.

முச்சரிக்கை எதற்கு? நாம் என்ன சொத்து தகறார செய்கிறோம் ? ஊர் ஒற்றுமை - ஊர் நலன் என்பது ஒரு மென்மையான அணுகுமுறையிலே தான் ஏற்படும் !

We dont need any big boss attitude - We need brotherly attitude


posted by: meera sahib (kayalpatnam) on 07 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20345

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாக்குரிமை உண்டா?

ரொம்பவும் அருமையான தலையங்கம், ஒரு சந்தேகம் (பதில் கிடைக்குமா?) இந்த ஓட்டெடுப்பில் The Kayal First டிரஸ்ட் க்கு ஓட்டுரிமை இருந்ததா?

Administrator: The Kayal First Trust வாக்குரிமை கோரவில்லை


posted by: HydroosAADHIL (KOZHIKKODE-KERALA) on 07 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20346

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

அஸ்ஸலாமு அழைக்கும்

வூர் தலைவிக்கு போட்டி இடும் ஆய்ஷா பர்வீனுக்கு லென்ஸ் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யும்மாறு கேட்டுக் கொல்ஹிரோம்
உக்காஷா குடும்பத்தினர்


posted by: muhammed shaikhu abdul kader ummal (dubai) on 07 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20347

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

YOUR STATEMENT IS VERY CORRECT . OUR PEOPLES WILL ELECT CORRECT CANDITATE .


posted by: A.S.KHALEEL (AL-HASA-K.S.A.) on 07 October 2011
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20348

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

சரியான நேரத்தில் வந்த மிகபொருத்தமான தலையங்கம். 24000 மக்களின் தலை எழுத்தை யாரோ வெறும் 61 நபர்கள் தீர்மானிக்க முடியாதுதான் .அதுவும் மூடுமந்திராமான ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு ஜனநாயக விரோதமான காரியங்களை செய்ய ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒற்றுமை என்றும் ஊர் ஐக்கியம் என்றும் பம்மாத்து பண்ணிக்கொண்டு சில தனிப்பட்ட நபர்களின் அதிகாரப்பசிக்கு தீனி போட இனியும் ஒரு அமைப்பு தேவையா?என்று மக்கள் சிந்திக்கும் காலம் வந்து விட்டதாகவே தெரிகிறது.


posted by: K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) on 07 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20349

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. தலையாயத் தலையங்கம்...தங்கம்...ங்க..!!!

காக்கா,என் வீட்லே பெண்களிடம் உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி வாய் திறந்தாலே எரிச்சல் படுறாங்க! நன்மை,தீமைகளை எவ்ளோவோ எடுத்துச் சொல்லியும்,யார் வந்தா உங்களுக்கு என்ன? ஏன்? ஃபோன்லெ துட்டைப் போட்டு காசை வீணாக்குறீங்கன்னு சொல்லி வெச்ச மாதிரி எல்லோரும் ஒரே மாதிரிதான் பேசுறாங்க! உங்க தலையங்கத்தைப் பாத்ததும் அதை அப்படியே,மூன்று வெவ்வேறு வீடுகளுக்கு ஃபோனில் வாசித்துக் காட்டியதும் உண்மைதானேன்னு ஒத்துக்கிட்டாங்க! அது எப்படிங்க? பச்சப்புள்ளைக்கு கூட புரியிற மாதிரி எளிமையான நடையிலெ,எடுத்துச் சொல்ல வேண்டியதை அழுத்தம்,திருத்தமா அழகாச் சொல்லியிருக்கீங்க! வெரிகுட்!!!

குசும்பு:
அது சரி! புரியாதவங்களுக்குப் புரிஞ்சிடும்!ஆனால் புரிஞ்சும் புரியாத மாதிரி அடம்பிடிக்கிறவங்களுக்கு “புத்தகம்” ஆகப் போட்டாலும் புரியவே புரியாதுங்க!!!


posted by: M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (????? ?????.) on 07 October 2011
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20350

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு ஒன்று மட்டும் நிச்சயம் புரியும் . அதாவது kayalpatnam .com தன்னுடைய " நடு நிலைமையை " இழந்து விட்டது என்று . " தலையங்கம் " என்பது யாரையும் சாராமல் , நடுநிலைமையுடன் இருக்க வேண்டும் . ஆனால் இந்த தலையங்கத்தில் அப்படி ஏதேனும் காண முடிகிறதா ? முழுக்க , முழுக்க ஐக்கியப்பேரவையை சாடுவதிலேயே , கட்டுரை ஆசிரியர் தனது கவனத்தை செலுத்தி உள்ளார் . இது இப்படியே நீடித்தால் , இந்த இணைய தளம் மக்களின் செல்வாக்கை இழக்க நேரிடும் .


posted by: Vilack SMA (Hetang) on 07 October 2011
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20351

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

இந்த தேர்தல் களத்தில் நன் ஒன்றும் சொலவரவில்லை இதற்குமுன் இரு பெண்கள் நம் நகர் மன்றத்தில் சேர்மனாக இருந்திருகிறார்கள் யாரும் குறை கூறும் அளவில் நடக்கவில்லை அதுபோல் இம்முறையும் அபிதாவோ அல்லது மிஸ்ரியவோ வருவார்கள் நல்லபடி நடத்துவார்கள் நாமும் அவர்களுக்கு உறுதுனைய இருப்போம் தேவை இல்லாமல் மண்டையை போட்டு குழப்பவேண்டாம்


posted by: nowshad (Salem) on 07 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20352

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. சாது மிரண்டால் காடு தாங்காது...!!!

உண்மையைச் சொன்னால் கசக்குதோ? யாரு செல்வாக்கை யார் இழக்கப் போகிறார்ன்னு தேர்தல் முடிவு பதில் சொல்லும்!கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க! இது போன்ற சப்பை மிரட்டலுக்கெல்லாம் காயல்பட்டனம் டாட் காம் ஒருபோதும் நடுங்காது! அது என்ன மக்களின் செல்வாக்கையா? அப்போ நங்கள்லாம் யாரு? காக்கா இது உங்க ஐக்கியப் பேரவை இல்லெ! 61 பேரை வெச்சுகிட்டு கட்டப் பஞ்சாயத்து நடத்தி,கை காட்றவங்களுக்கு ஓட்டுப் போட! வம்பா ஊர் மக்கள் வாயைக் கிளறாதீங்க!

குசும்பு:

உங்க தலையங்கத்திற்கு குறைஞ்சது 100 கமெண்ட்ஸைத் தாண்டினாலும் தாண்டும்! நான் இப்ப ஒரு நாள் லீவு எடுத்தே ஆகனும்!!!


posted by: M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (????? ?????.) on 07 October 2011
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20353

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

Fantastic post to all read and distribute.

Choose the best among ourselves with open mind apart from Family, Culture, Relative, Neighborhood and Friendship.

Caste your vote to the best whom you know best in Administrative, Management skills most of all a submitter to Almighty.


posted by: Ibrahim Ibn Nowshad (Chennai) on 07 October 2011
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20354

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

6 கோடி மக்களின் விருப்பமில்லாத திட்டங்கள்கூட வெறும் 119 எம் எல் எக்களால் நிறைவேற்றபடுகிறது. எனவே நாளைக்கு நம் நகர தலைவரே நம் விரும்பாத திட்டத்தை நிறைவேற்றினால் 40000 மக்களும் விரும்பினார்கள் என்பது முழு உண்மைஅல்ல.


posted by: S S Abdullah (Dubai) on 07 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20355

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

இது பற்றிய எனது அபிப்பிராயம சற்று நீண்டதாக் இருப்பதால் Administration னுக்கு மின் அஞ்சலில் அனுப்பியுள்ளேன். பிரசுரிக்க தகுதியானது என நீங்கள் கருதினால் இந்த பகுதியில் பிரசுரிக்கும். இதை நோட்டீஸ் ஆக நான் வெளியிட விரும்பவில்லை. உங்கள் இணையத் தளம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.


posted by: Mackie Noohuthambi (kayalpatnam) on 08 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20356

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. தங்களின் பணியும் துணிவும் தொடரட்டும்...

மாஷா அல்லாஹ் ..!! நமதூரின் மூன்று இணையதளங்களும் இந்த தேர்தல் விசயத்தில் உண்மைக்காகவும் , அநீதிற்கு எதிராக குரல் கொடுப்பதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது . தங்களின் பணியும் துணிவும் தொடரட்டும் .


posted by: முத்துவாப்பா (???-?????) on 08 October 2011
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20357

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

அருமையான தலையங்கம்?

ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் ஓட்டளிக்கலாம் ....

இதேதான் ஜனநாயக நாட்டில் குடியுரிமையுள்ள யாரும் எங்கும் வசிக்கலாம், வியாபாரம் செய்யலாம், சொத்துக்கள் வாங்கலாம். வீடுகள் கட்டலாம் அப்படிதானே?

ஆனால் சுனாமி குடியிருப்புக்கு மட்டும் எதிர்ப்பு, கடற்கரையை கடற்கரை இல்லாத ஊரிலிருந்து வருபவர்கள் உபயோகிப்பதில் கருத்து வேற்றுமை, அதில் மற்றும் தேவை ஊர் ஒற்றுமை என்னாடா.......... தலை சுத்துகிறதே?

அனைவருக்கும் பொதுவான kayalpatnam.com இந்த தலையங்கம் என்ற பெயரில் உள்ள ஒருதலை பட்சம், ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பது தேவையற்ற ஒன்று.


posted by: S.S. JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 08 October 2011
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20358

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

சகோதரர் விளக்கு எஸ். எம். எ அவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ளவேண்டும். உள்ளதை உள்ளபடி எடுத்துச்சொல்வது ஊடகங்களின் பனி. அவை நமக்கு பிடிக்கலாம். அல்லது பிடிக்காமல் போகலாம். அது வேறு விஷயம்.

ஒரு கருத்து நமக்கு பிடிக்காமல் போவதால் ஊடகங்கள் செல்வாக்கு இழந்து போகும் என நாம் நினைப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டாகிவிட்டது என்று சொல்வதற்கு சமம்.

"காயல்பட்டினம். காம்'மிக நியாயமாகவே தனது தலையங்கத்தை எழுதியது. அதற்க்கு சகோ. விளக்குவிடம் ஏதாவது நியாயபூர்வமான பதில் இருந்தால் அவ்ர இந்த பக்கத்தில் அதை பதிவு செய்யலாம்.அதை விட்டு விட்டு "உங்களின் செல்வாக்கு இனி பனாலாகும்"என்று சொல்லவதெல்லாம் என்ன நடைமுறை என்று தெரியவில்லை.

தம்பி சாஜித் "திருக்குறள்"புத்தகம் உன் பக்கத்திலேயே இருக்கிறதா?சாலமன் பாப்பையாவின் பேரனாக மாறிவிட்டாயேயப்பா.......


posted by: K S Muhamed shuaib (KAYALPATNAM) on 08 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20359

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

தலையங்கம் எல்லாம் சரிதான். ஜனநாயகத்தை வழியுர்த்துவது இருக்கட்டும். இத்தனை போட்டிகளுக்கு இடையில் வோட்டெல்லாம் பிரிந்து நாம் அனைவரும் கொஞ்சம்கூட விரும்பாத ஒருவர் (யார் என்று புரிந்திருக்கும்) வந்தால், அப்போ இருக்கு உங்களுக்கெல்லாம் வேட்டு ! இதற்கு ஐக்கிய பேரவையும், போட்டியை உண்டாக்கிய அனைவரும்தான் பொறுப்பு! காயல்.காம் நியூஸ் உடன் நிறுத்திக்கொண்டால் போதும். அட்வைஸ் எல்லாம் வேண்டாம்!


posted by: Habeb Rahman (Dubai) on 08 October 2011
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20360

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

எல்லாம் ஒரு மார்க்கமாத்தான்யா இரிக்காய்ங்க.. அவகளே ஒரு முடிவுக்கு வந்துட்டாக ரபிக் சார்..

புரியலயா? போட்டி ஊர்மக்களுக்கும் பேரவைக்கும் என்கிற மாதிரி நினைப்புலதான் தலையங்கம் தலைய சாச்சிகிட்டு இருக்குன்னு நெனக்கிறாக போல..

யாப்பா கட்டுரையாளரே, கொஞ்சம் பொதுமக்களையும் நீங்களுந்தான் கொற சொன்னா கொறஞ்சா போவீங்க.. அண்ண கேக்கறாகள்ள. என்ன எழவுக்கு செல்வாக்கெல்லாம் எழந்துகிட்டு...

------------------------------------------

அப்பா.. இப்ப நான் டூட்டிக்கு போலாம் - ரபிக் சார் பாத்துக்குவார்...


posted by: M Sajith (DUBAI) on 08 October 2011
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20361

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

At right time given right THALAIYANGAM.Now the time for people to think.


posted by: SYED OMER KALAMI (colombo) on 08 October 2011
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20362

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

தலையங்கத்தை ஒரு நோட்டீஸ் ஆக வெளியிட்டால் பெரும்பாலான மக்களின் உள்ளக்கிடக்கைகளை நீங்கள் பிரதிபலிப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியவரும்.

இணையதளத்தை எல்லோரும் பார்ப்பதில்லை எல்லோருக்கும் அந்த வசதி வாய்ப்புகளும் இல்லை, பாமரர்கள், பெண்கள் இணையதளத்தை பார்ப்பதற்கு நேரமும் இல்லை. தாமதம் செய்யாமல் வெளியிட்டால் நல்லது. உண்மைகள் ஊமையாகக்கூடாது, ஊனமாகிவிடவும் கூடாது.

பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் பேசக்கூடாத நேரத்தில் பேசுவதும் இரண்டுமே தவறு என்பார்கள் விவரமறிந்த மாமேதைகள். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புபவர்கள் நல்லதை பேசட்டும். அல்லது வாய் மூடி மௌனமாக இருக்கட்டும்.


posted by: mackie Noohuthambi (kayalpatnam) on 09 October 2011
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20363

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

Peravai move is unwarrented and it is unconstitutional too. Yet again a poll violation. It can also be taken as cash for vote in another sense. It is great unfortunate that Peravai move is ended up in controversy. Now its reliability swings in the air.


posted by: Mohamed Ismail (Chennai) on 13 October 2011
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20364

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

Very Good Statement , any how this message want to reach each and everybody please do something.

Mohideen (Durai)
+971502587101


posted by: Mohideen(Durai) (Abu Dhabi) on 13 October 2011
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20365

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:நகர்மன்ற தலைவரை மக்களே ம...

Now that the contest between the various candidates is getting keen, people must think and evaluate each candidates's capacity and vote with a clear conscience. The candidates so far have shown exemplary manners and conduct in their campaign. Once elected, she should continue to keep the tall promises made and work for the welfare of the people of this town and should not be vindictive towards anyone or organisation which may not have supported her


posted by: S.a.cader (Kayalpatnam) on 14 October 2011
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20366

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved