Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:40:34 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 40
#KOTWEM40
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 4, 2012
மேல்நிலை படிப்பு - வாழ்க்கையின் அடித்தளம் !!

இந்த பக்கம் 8650 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிறு குழந்தைகளிடம் எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டால்… நான் ஒரு டாக்டர் அல்லது சயின்டிஸ்ட், பைலட், கலெக்டர் ஆக போகிறேன் என்று பதில் சொல்வார்கள். அப்படி கூற கேட்பதில் நம் எல்லோருக்கும் ஒரு ஆனந்தம். அதே கேள்வியை அவர்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும்போது கேட்டு பாருங்கள். ஹ்ம்ம்... என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிப்பார்கள்.

அவர்களின் சிறுபிராய ஆசையை / கனவை நனவாக்குவதட்க்கு முறையான வழிகாட்டுதல், தொடர் நினைவூட்டல், அதற்க்கான அடித்தளத்தை சரியான பருவத்தில் அமைக்க தவறியதும், இளம்பிராயத்திலேயே திட்டமிட்டு உழைக்க கற்று தறாததும், எவ்வித நோக்கமின்றி படிக்கும் படிப்பும் மிக முக்கிய காரணங்கள்.

பொதுவாக ப்ளஸ் டூ முடித்த பின்புதான் மிகப் பெரியதாய், அடுத்தது என்ன? என்ற ஒரு கேள்வி எழும். 10th முடித்தவுடனே அக்கேள்வியை கேட்டு பாருங்கள். +2 முடிக்கும் போது ஒரு தெளிவான பதில் கிடைக்கும். ஏனென்றால் பிளஸ் 1 -ல் என்ன குரூப் எடுத்து படிக்கிறோமோ அதுதான் அடுத்தது மருத்துவம், இன்ஜினியரிங் என முடிவு செய்ய உதவுகின்றது. அதை சரியாக தீர்மானித்துவிட்டால், சரியான / விருப்பமான படிப்பைத் தொடரமுடியும். தவறான முடிவெடுத்துவிட்டால் பின்னர் அதிலிருந்து மீள்வது கடினம்.

எதற்காக இந்த குருப்பை எடுத்து படிக்கின்றோம் என்று தெரியாமல் படிப்பவர்களும், ஒரு குருப்பை எடுத்து படித்தால் வருங்காலத்தில் தான் 'என்னவாக' ஆக அது வழிவகுக்கும் என்று கூட தெரியாமல் படிப்பவர்களும் இன்று வரை இருக்கிறார்கள்.

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல்நிலை பள்ளி (+1, +2) படிப்பு தான். பொறியியல், மருத்துவம், சட்டம் என தங்கள் மேற்படிப்பை விரும்புபவர்கள் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவை (First or science Group) யும்… தாவரவியல், விலங்கியலில் ஆர்வம் உள்ளவர்கள் ‘ப்யூர் சயின்ஸ்’ எடுக்கலாம். ‘ப்யூர் சயின்ஸ்’ எடுத்தால் பொறியியல் படிக்க இயலாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முந்தைய காலங்களில், விபரமறியாமல் ‘ப்யூர் சயின்ஸ்’ எடுத்து ஒரு சில மார்க்ஸ் குறைவாக எடுத்ததினால் டாக்டர் ஆக முடியாமலும்... இன்ஜினியரிங் படிக்க விருப்பம் / திறமை இருந்தும் வேறு வழியில்லாமல் ஆர்ட்ஸ் & சயின்ஸ் படித்தவர்களும் உண்டு. முதலில், நாம் என்னவாக விரும்புகிறோமோ அதற்கான சரியான குரூப் என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

பயாலஜி சரிபட்டு வராது என்றால்… கணிதம், வேதியில், இயற்பியல், கணினி அறிவியல் பிரிவை எடுக்கலாம். C.A, B.Com, கம்பெனி செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள், ‘காமர்ஸ்’ பிரிவைத் தேர்வு செய்யலாம்.

எதிர்காலதில் B.A. M.A படித்து அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் என விரும்புபவர்கள் வரலாறு, பொருளாதாரவியல் படிக்கலாம். பொதுவாக மற்ற குரூப்களை எடுத்து படித்தால் நேரம் கிடைக்காது. கலெக்டராராகும் கனவுள்ளவர்கள் கூட கடினமில்லாத டிகிரியை படித்துக்கொண்டே 'சிவில் சர்விசஸ் - க்கும்' தயாராகி கொள்கிறார்கள்.

உயர்கல்வியில் பொறியியல் / மருத்துவம் எடுக்கப் போவதில்லை என்று தீர்மானித்து விட்டால் அல்லது ப்ளஸ் டூ முடித்தவுடன் ‘ஆலிமா’ ஆவதில் விருப்பம் உள்ளதென்றால்... எல்லோரும் படிக்கின்றார்களே என்று Science group - ஐ எடுத்து ப்ராக்டிகல் / ரெக்கார்ட் நோட் என்று கஷ்டப்படாமல் சிரமமற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அதில் ஒளிந்திருக்கும் அறிவுத் திறனை வெளிக்கொணர்ந்து மாநில முதல் மாணவ - மாணவியாக நமதூருக்கும், பயின்ற கல்விக்கூடத்திட்க்கும் பெருமை தேடி தரலாம். அதற்க்கு தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவாகிய vocational குரூப் எடுத்து படிப்பது உதவும்.

சயின்ஸ் அல்லது கம்புயுட்டர் சம்பந்த படிப்பு மட்டும் என்றில்லாமல், தனித் திறமையுடன் கூடிய கலை திறன் / ஆர்வம் உள்ளவர்கள்.. எந்த குருப்பை எடுத்து படித்தால் வாழ்வில் சாதிக்க முடியுமோ அது சம்பந்த பட்ட குருப்பை எடுத்து படிப்பது ... அத்துறையில் தலை சிறந்த வல்லுனராக விளங்க வழிவகுக்கும்.

மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் விரும்பும் சில பாடப்பிரிவுகள் இல்லாத நிலையில் விருப்பமின்றி வேறு பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் நிலையை பள்ளி நிர்வாகங்கள் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் அல்லது கனவை நனவாக்கும் பாடப்பிரிவுகள் கிடைக்கும் திசையை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும்.

ஒரு வேளை மேல்நிலை படிப்பு முடியவில்லையென்றால், டிப்ளோமா - வில் Automobile, EEE, ECE, Mechanical, civil படிக்கலாம். ஒரு சிலர் மூன்று வருடம் டிப்ளோமா படித்து விட்டு பொறியியல் படிக்க செல்கின்றனர். பொறியியல் படிக்க முடிவெடுத்து விட்டால் 12th படித்து விட்டு அதை படிப்பது நல்லது.

குறைவான மதிப்பெண்கள் அல்லது குடும்ப சூழ்நிலையால் படித்து முடித்து ஓராண்டுக்குள் ஏதாவாது வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்கள் (கல்வி உதவி எதுவும் கிட்டாதவர்கள்), ஓராண்டு சான்றிதழ் படிப்பாகிய ITI யில் சேரலாம். போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மேற்படிப்புக்கும் (வேலைக்கான) முதற் தகுதியான குறைந்த பட்சம் ஒரு 'டிகிரி' யாவது படித்து முடிப்பது நல்லது. அதற்க்காக Diploma / ITI படிக்காதீர்கள் என்று அர்த்தம் அல்ல. ஒவ்வொருவருடைய ஆர்வம் / சூழ்நிலையை பொருத்து முடிவெடுத்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கிறது. அதனை உணர்ந்து சுயமாக முடிவுகளை எடுக்க பழக வேண்டும். நமது நாட்டின் கல்வி முறையை பொறுத்த மட்டில் மாணவர்களின் வாழ்க்கை பாதையை எழுதப்போவது... பிளஸ் டூ பொதுத் தேர்வுகளும் அதனை தொடர்ந்து நடைபெறும் நுழைவுத்தேர்வுகள் தான். அதற்க்கு தயாராவதட்க்கு மிகச்சிறந்த தருணம் மேல்நிலை பருவத்திலேயே திட்டமிடுவது... கனவை நனவாக்க போகும் வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள உதவும்.

நமதூர் மக்கள் தொகையில் (ஒட்டு மொத்த) கல்வியில் இன்று 20 - 25 % கல்லூரி வரை படித்த சமுதாயாமாக நாம் உள்ளோம். இளைய தலை முறையினர் அனைவரும் நமதூரில் ஏற்பட்டுள்ள கல்வி விழிப்புணர்வையும், தன்னை தேடி வரும் கல்வி உதவிகளையும், ஊக்கங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி ஒட்டுமொத்த இளைய தலை முறையினரும் நன்கு படித்து முன்னேறும் போதுதான்... இன்னும் அடுத்த 15 to 20 வருடத்திற்குள் (அதாவது அடுத்த தலை முறைக்குள்) நமதூரை கல்வியில் 100 % விழுக்காடு கொண்ட ஊராக மாற்ற முடியும்.

பெரும்பாலான படித்த மேல் தட்டு மக்கள், இந்த மேல்நிலை பள்ளி பருவத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வாழக்கையை முறையாக திட்டமிட்டு, நினைத்ததை அடைந்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். ஆனால் நாம், ஏதோ பெயருக்கு 11 - ஆம் வகுப்பு படிக்கின்றோம். பின்னர் 12 - ஆம் வகுப்பு பொதுத் தேர்வாக இருப்பதால் கொஞ்சம் கடுமையாக படித்து 'பாஸ்' ஆவதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம். இவைகளை இளைய தலை முறையினர் 'மாற்றி' காட்டவேண்டும்.

நமது நீண்ட நாள் கனவாகிய State Topper - ஐ அடைவதற்க்கு ஒரு சிறு கூட்டு முயற்ச்சியாக, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மிக நன்றாக தொடர்ந்து படிக்கும் ஒன்றிரண்டு மாணவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்கள் மற்றும் ஊர் பர்ஸ்ட் எடுத்த பழைய மாணவர்களின் அனுபவத் துணை கொண்டு அவர்களை நன்றாக ஊக்கப்படுத்தி (முடிந்தால் 11 ஆம் வகுப்பிலேயே), செம்மை படுத்தினால் நம்மால் அக்கனவை அடைய வாய்ப்பிருக்கிறது. அதற்க்காக மற்ற மாணவர்களை 'அம்பேல்' என்று விட்ட விட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. நடைமுறையில் குறைவாக / சுமாராக படிக்கும் எல்லா மாணவர்களையும் இந்த அளவுக்கு கொண்டுவருவதில் சிரமம்.

இவைகளை அடைய நம் சமுதாயமும் எப்பொழுதும் மாணவர்களுக்கு ஒரு ஊண்டுகோலாக இருக்க வேண்டும். மாற்றத்தை காணப்போகும் விடியலை நோக்கி பயணிப்போம்!!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திட்டமிட்டக் கல்வி பயின்றால் ...தித்திக்கும்.
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (????? ?????.) on 06 June 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20802

பள்ளிப் பருவத்திலேயே பட்டப் படிப்பிற்கான முன் யோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களது வருங்காலத்திற்கு வழிகாட்டச் செய்யும் இக் கட்டுரை ஓர் அரிய வாய்ப்பினையும், நல்ல படிப்பினையையும் தருகின்றது. கட்டுரை ஆசிரியர் கூறும் வழிமுறைகளைக் கடை பிடித்து தம் பிள்ளைகளின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஓர் உன்னத பொறுப்பு எல்லாப் பெற்றோர்களுக்கும் உண்டு. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பது போல் என் போன்றோர் மேற்(கொண்டு) படிப்பு படிக்காமல், என்னதான் நல்ல அனுபவம் இருந்தும் இன்று வரையில் ஒரு வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடந்து முன்னேற முடியாமல் தவிக்கின்றோம். அதன் வலியும், வாட்டமும் எங்களுக்குத் தான் தெரியும்...!

நன்ணீர் புகட்டி நல்லுரமேகி நாட்பட வளரும் கொடி தமக்கு பின்னிப் பிணைந்து முன்னுக்குயற நாட்டுதல் வேண்டும் ஓர்க் கழியை. கழியின்றிக் கொடி படர வழியில்லை! கல்வியும் ஓர் கொடியன்றோ? எனக் கருதிடுவீர். திட்டமெனும் கழிதனை நட்டி வைத்து கல்விக் கொடி படர்ந்து நம் குடியுறச் செய்திடுவீர். -ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by: V D SADAK THAMBY (Guangzhou-China.) on 06 June 2012
IP: 113.*.*.* China | Comment Reference Number: 20803

அருமையான கட்டுரை மற்றும் நல்ல வழிகாட்டுதல் .

எனினும் 10 வது வகுப்பு தேரியபிறகு நாம் என்னபடிக்க வேண்டும் என்பதை நாம் மட்டுமே தீர்மானிக்க முடிவதில்லை . மாணவரும் மாணவரின் பெற்றோரும் ஒரு கல்விப் பாதையை தேர்தெடுத்தால் , அவர் படிக்கும் பள்ளி சில நேரங்களை சூழ்நிலையின் காரணமாக வேறொரு படிப்பை நமக்கு கைகாட்டுகிறது .

சமீபத்தில் என் தங்கை மகனுக்கு ஏற்பட்ட நிகழ்வு :

பாளையகோட்டையின் தலை சிறந்த பள்ளியில் சேர்க்க விரும்பி , நுழைவு தேர்வெழுதி ஒருவகையாக நுழைவும் கிடைத்துவிட்டது கணிதம் இயற்பியல் வேதியியல் பாடத்திட்டத்தில். பொறியியல் கணவோடு மாணவன் படித்துக்கொண்டிருக்க காலாண்டு தேர்வு நடைபெற்றதும் , பெற்றோருக்கு பள்ளியிலிருந்து ஓலை வந்தது அவசியம் நேரில் சந்திக்க வேண்டுமென்று.

பதறியடித்து பள்ளிக்கு சென்று முதல்வரை சந்தித்தோம் .

கணிதத்தில் 70 % தான் எடுத்திருக்கிறான் . எனவே வணிகவியல் குரூப்புக்கு மாற்றிக்கொள்ளுங்கள் . அல்லது TC வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் கணினிவியலாவது எடுத்து படித்துக்கொள்வேன் என்று மாணவன் எவ்வளவு பிடிவாதமாக கூறியும் பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.

வேறு வழியின்றியும், இடைப்பட்ட காலத்தில் வேறு எங்கும் செல்ல மனமில்லாமலும் கட்டாயத்தின் பேரில் வணிகவியல் எடுத்து படிக்க வேண்டிய சூழ்நிலை .

இதுதான் இன்றைய கல்விச்சூழல்.

மாணவர்களும் பெற்றோர்களும் மட்டுமே இவைகளை தீர்மானிக்க முடிவதில்லை . இவைகளை தீர்மானிப்பதில் பள்ளி நிர்வாகமும் ஒரு காரணிதான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by: Vilack SMA (Nanhai) on 06 June 2012
IP: 14.*.*.* China | Comment Reference Number: 20804

தம்பி சாளை MAC இன் அனைத்து கட்டுரைகளும் அருமை . இங்கு நீங்கள் எழுதுவதைவிட , ஊர் வரும் சமயம் , நீங்களும் , இதுபோன்ற விசயத்தில் ஆர்வம் உள்ள மற்றவர்களும் சேர்ந்து , 10 th மற்றும் 12 th முடித்த மாணவர்களுக்கு counselling நடத்தினால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by: paksulaiman (chennai) on 06 June 2012
IP: 124.*.*.* India | Comment Reference Number: 20805

அழகான கட்டுரை,ஆழமான ஆரோக்கியமான சிந்தனை ,தெளிவான நடை, ஒரே வருத்தம்,இதனை பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பது என் ஆசை. படித்தால் நிச்சயம் பலன் உண்டு என்பதும் நாங்கள் KCGC ல் நடத்திய கல்வியாளர்கள் கூட்டம் ஒரு எடுத்துக்காட்டு. Marine enggல் சேர்ந்த சூபி ஒரு எடுத்துகாட்டு.

B com உடன் CA படிக்க எண்ணத்துடன் 2 சஹோதரிஹல் கலைகல்லோரியில் சேர்ந்திருப்பது ஒரு நடப்பு. இன்னும் அனேக உதாரணங்கள் எல்லாம் அன்று 1 நாள் REDSTAR கூட்டத்தின் வெளிப்பாடு.

So ensure such article of social interest reaches more viewers and /otherwise some arrangement by way of handouts could be better way out to reach farther .

This is jus a humble suggestion


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்.
posted by: s.s.md meerasahib. (riyadh) on 06 June 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20806

அஸ்ஸலாமு அலைக்கும். நம் மாணவ கண்மணிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழிகாட்ட வேண்டி கட்டுரை வடித்த ஆசிரியர் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற அனுபவம்களை கட்டுரை வடிவில் தந்துதவ வேண்டுகிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by: M Sajith (DUBAI) on 07 June 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20807

சகோரர் VSMA மற்றும் PAK Sulaiman ஆகியோர்களின் கருத்துக்கள் மிகச்சரியானது.. நல்ல சிந்தனைகள் அது சரியாகப் போய்ச்சேர்வதில் தான் முழுமையடையும்.

இது குறித்த கல்வியும் விழிப்புணர்வும் சாராசரியாக சமுதாயத்தில் எல்லோருக்கும் இருக்கவேண்டும், அதனால் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர் நிகழ்வுகளாக மட்டுமில்லாமல் பொதுநிகழ்வுகளாக இருப்பதுதான் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by: Deen (Hkg) on 07 June 2012
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 20808

மிக அருமையான கட்டுரை நிச்சயம் ஒவ்வொரு மாணவருக்கும் போய் சேரவேண்டிய நற்செய்தி - சரியான வழி காட்டுதலுக்கான சரியான நேரம் - தயவுசெய்து துண்டு பிரசுரமாக அடித்து SSLC முடித்திருக்கும் எல்லா மாணவர்களுக்கும் போய் சேருமாறு செய்யுங்களேன் - அணுசரனைக்கு நான் தயார் -

- for further followup & action please mail me 'deen3000@gmail.com'

- ஏதேனும் ஒரு மாணவராவது சரியான வழிகாட்டுதலால் பயன் கிடைத்தால் மகிழிச்சியே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்...
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 08 June 2012
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20810

சகோதரர் ரபீக் அவர்கள் குறிப்பிட்டது போன்ற தவிப்பு நம்மில் பலருக்கும் உண்டு. நமது நாட்டில் தொலை தூர (Distance education) அல்லது ஆன்லைன் டிகிரி (ex : IGNOU அழகப்பா பல்கலை கழகங்கள் இவைகளை வழங்குகின்றன) - மூலம் இத்தவிப்பை போக்கி கொள்ளலாம். மேலை நாடுகளில் போன்று 'எப்பருவத்திலும்' ஏதோ சூழ்நிலையால் அப்பருவத்தில் படிக்க தவறிய கல்லூரி / மேற்படிப்பை part / full time – மாக, கல்லூரியிலேயே சென்று படிக்கும் வாய்ப்பு கூட நமது நாட்டில் வருங்காலத்தில் வரலாம்.

பள்ளி நிர்வாகம் வணிகவியல் எடுத்து படிக்க சொன்னது ஆச்சர்யமும் வேதனையுமாக உள்ளது. இது போன்ற சூழலில் (முடிந்தால்) பொறியியல் கனவை நனவாக்கும் பாடப்பிரிவை வழங்கும் வேறு பள்ளிகூடத்தை நோக்கி பயணிப்பது நல்லது.

சகோதரர் Vilack SMA - அவர்கள் கவுன்சலிங் யோசனையயை தந்ததோடு நில்லாமல் தானும் அதுசமயம் ஊரில் இருந்தால் இவைகளை நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றலாம் என்று தனது இமெயிலில் குறிப்பிட்டு இருந்தார். இன்சா அல்லாஹ் முயற்சிப்போம்.

நமது மாணவர்கள் /பிள்ளைகள் KOTW வை விட பேஷ்புக் - கில் பிஸியாக இருப்பார்கள். KOTW - வையும் பேஷ் புக் ட்வீட்டர் - க்கு எடுத்து செல்லலாம். விடலை பருவத்தில் பிள்ளைகள் பொடுபோக்காக இருப்பது சகஜம். நமது பெற்றோர்கள் செய்ய தவறிய விழிப்புணர்வை நாமும் (நமது பிள்ளைகளுக்கு) செய்ய தவறக்கூடாது என்று என்னும் பெற்றோர்கள் இது போன்ற விசயங்களை (எந்த ஊடகத்தில் கண்டாலும்) தன் பிள்ளைகளுக்கு எடுத்து செல்ல வேண்டியதும், பிள்ளைகளை இவைகளில் ஆர்வமூட்டுவதும் பெற்றோர்களின் தார்மீக கடமையாக உள்ளது. பெற்றோர்கள் அலட்சியமாக இருந்தால் பிள்ளைகளும் அலட்சியமாகவே இருப்பார்கள்.

சகோதரர் பல்லாக் சுலைமான் போன்றோர்களின் சீரிய முயற்சியில் களம் கண்டுள்ள KCGC - யின் அருமையான கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் “ஏதேனும் ஒரு மாணவராவது சரியான வழிகாட்டுதலால் பயன் கிடைத்தால் மகிழிச்சியே” என்று என்னும் Deen (Hkg) போன்ற சமூக ஆர்வலர்களின் உதவிகளும் (அதாவது both intellectual/guidance & பினன்சியால் சப்போர்ட்) கிடைத்தும் கூட… அதனை முறையாக பயன்படுத்தி நமது பிள்ளைகளுக்கு முன்னேற தெரியவில்லை யென்றால் அதற்க்கு முழுக்க முழுக்க காரணம் பிள்ளைகளும் அவர்களை பெற்றவர்களுமாகத்தான் இருக்க முடியும்.

இதோ 443 மாணவர்கள் +2 வில் பாஸாகி இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் கல்லூரி அல்லது எது சம்பந்தமான படிப்புகளை படிக்கின்றார்கள் என்ற டேட்டா பேஸை தயார் படுத்துங்கள். நமதூரை கல்வியில் ஒரு தலை சிறந்த ஊராக மாற்றவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தன் கடமையுணர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும்.

--- கட்டுரையாளன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved