Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:17:50 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 179
#KOTWEM179
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 23, 2015
இதயங்கள் புரட்டப்படும்போது இஸ்லாம் ஒன்றே தீர்வு! ஓர் உண்மைச் சம்பவம்!!

இந்த பக்கம் 4940 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சில தினங்களுக்கு முன் ரமழானில் எனது நண்பர் ஒருவரது முகநூலில் ஓர் பதிவு கண்டேன். கடந்த 14/04/2015 அன்று அல்-ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மாப் பள்ளிவாசலுக்கு மாற்று மத சகோதரர் ஒருவர் தனது குழந்தையோடு உதவி கேட்டு வந்ததாகவும் அவரது குழந்தைக்கு இடுப்புக்கு கீழ் செயலற்ற நிலையில் நெல்லையில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதற்குரிய செலவுகளை ஏற்க இயலாமல் பண உதவி கேட்டு வந்ததாகவும். உடனே நமதூர் சகோதரர்கள் சுமார் பன்னீரெண்டாயிரம் ரூபாய் வரை வசூல் செய்து மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உதவி செய்ய மதம் இனம் மொழி தேவையில்லை! நல்ல மனம் இருந்தால் மட்டும் போதும்.இதை படித்ததும் எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வந்தது. இதுவே சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு எழுத்து மேடையில் எழுத என்னை உந்தியது.

பல வருடங்களுக்கு முன்பு ஓர் ரமலான் மாத இரவில் காயல்பட்டினத்தில் நடந்த ஓரு சம்பவத்தை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மதங்களைக் கடந்த மனித நேயத்தை சத்திய மார்க்கமாம் இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதற்கு இச்சம்பவமும் ஓர் சான்றாக அமையும் என நம்புகிறேன்.

எமது ஊருக்கு அருகாமையிலிருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலுக்கு தன் குடும்பத்துடன் வழிபாட்டிற்காக வந்த ஒரு குடும்பத்தார் தமது உடமைகளை கரையில் வைத்து வி்ட்டு கடலில் நீராடச் சென்றனர்னர். கடல் இல்லாத ஊரிலிருந்து அவர்கள் வந்திருந்தபடியால் குதூகலத்தோடு குளித்துக் கொண்டிருந்தனர். இதை சாதகமாக வைத்து எவனோ ஒரு திருடன் கரையில் இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். குளித்துவிட்டு வந்த அந்த நபர் மாற்று உடை கூட இன்றி பறிதவித்து பதறிக் கொண்டு தேடியுள்ளார். பின்னர் நடந்தவற்றை கோவில் நிர்வாகத்திடம் சொல்லி முறையிட்டுள்ளார். "இது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து போகிற இடம். உங்கள் உடைமைகளை நீங்கதான் பாதுகாக்க வேண்டும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. வேண்டுமென்றால் காவல்துறையிடம் போய் கம்ளைண்ட் எழுதிக் கொடுங்கள்", என கோவில் நிர்வாகம் கை விரித்தது. காவல் துறையோ, "நாங்கதான் டெய்லி மைக் வச்சு திருடர்கள் குறித்த எச்சரிக்கை செய்கிறோமே? அப்புறம் நீங்க ஏன் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தீங்க? ரெண்டு மூனு நாள் கழிச்ச வாங்க கிடைச்சா தருகிறோம்" என சொல்லி இவரை அனுப்பி வைத்து விட்டனர்.

பாவம்! அந்த குடும்பம் வேறு வழி தெரியாமல் ஒரு வேளை மட்டுமே வழங்கப்படும் கோவிலின் இலவச உணவை உண்டு தமது பொருட்கள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் மூன்று நாட்கள் வரை அந்த கோவில் வளாகத்துக்குளேயே அலைந்து திரிந்துள்ளனர். இனி பொருள் கிடைக்கும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு முற்றிலுமாய் அகலவே, கையில் காலணாக் காசுகூட இன்றி பேருந்து நிலையத்தில் பகல் முழுவதும் கழித்துள்ளனர். பேருந்து நிலைய வளாகத்தில் தெருவோரக் கடை விரித்து செருப்பு வியாபாரம் செய்து வந்த நமதூர் நபர் (இவர் பின்னர் நமதூரில் பாஸ் காம்ளெக்ஸில் டேக் அண்ட் வாக் கடை வைத்து நடத்தியவர்) இவர்கள் நிலமையைக் கண்டு பரிதாபப்பட்டு 50 ரூபாயைக் கொடுத்து, "காயல்பட்டினத்திற்கு போங்க அங்கே அல்- அமீன் இளைஞர் அமைப்பு உள்ளது அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்", என்று யோசனை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

மூன்று நாட்களாக அரை வயிறு உணவு, அலைந்து திரிந்த அலுப்பு, ஆதரவில்லாத நிலை என மன உளைச்சலுக்கு ஆளாகிய அக்குடும்பம் காயல்பட்டினம் வந்து இறங்கியது. செல்ல வழியும் தெரியாமல் தேடி வந்த அமைப்பின் பெயரும் புரியாமல் தவித்த நிலையில் இவர் நிலமையைப் புரிந்து கொண்ட யாரோ ஒருவர், "இப்படியே நேரா போங்க அந்த வளைவில் ஒரு பள்ளிவாசல் இருக்கும் அங்க போய் கேளுங்க அவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க", என வழிகாட்ட அவர்கள் அல்- ஜாமிவுல் அஸ்ஹருக்கு முன்னால் இருந்த பூக்கடை திண்ணையில் வந்து அமர்ந்தனர்.

இரவுத் தொழுகைக்காக வந்த நான் இவர்கள் ஏதோ வெளியூர்க்காரர்கள், வழிப்போக்கர்கள் என நினைத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தேன். தொழுகையை முடித்து விட்டு திரும்புகையில் மீண்டும் அவர்கள் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டேன். பசியின் களைப்பால் வாடிய முகத்துடன் ஏதோ எதிர்பார்த்த வண்ணம் ஏக்கத்துடன் இருந்த அவர்கள் நிலை வித்தியாசமாகத் தெரியவே, என்ன நடப்பு என்பதை அறிய அவரது அருகில் சென்று விசாரித்தேன்.

நான் கேட்ட மாத்திரத்தில் மனிதர் தேம்பித் தேம்பி அழு ஆரம்பித்து விட்டார். "நான் நாலு நாளா புள்ளெ குட்டியோடு தெருவில் நிற்கிறேன் எங்களைப் பார்த்து ஒருத்தன் கூட என்ன ஏதுன்னு கேட்கல்லெ! ஆனா ரெண்டு பேர் மட்டும் கேட்டாங்க... ஒன்னு அந்த பஸ்டான்டுலெ செருப்பு விற்கிற பாய், இப்ப நீங்க இந்த ரெண்டு பேருமே முஸ்லிம்ங்கதான்” என விம்மியவரைத் தேற்றியவனாக விபரத்தைக் கேட்டறிந்தேன். என்னுடன் இருந்த இளகிய மனதுடைய (பெயர் சொல்ல விரும்பாத) என் நண்பர் பதைத்தவராக, "முதல்லெ நீங்க வாங்க... வந்து எல்லோரும் சாப்பிடுங்க அப்புறம் பேசிக்கொள்ளலாம்",என அவசர அவசரமாக அவர்களை அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.

உணவின்றி வாடிய அந்த ஜீவன்கள் கண்ணீர் மல்க உணவருந்திய காட்சியை இன்று நினைத்தால்கூட என் விழிகள் குளமாகின்றன. நடந்தவற்றை யாவும் அஸ்ஹர் நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினேன். செவிமடுத்த அந்த நல்ல மனிதர்கள், "பொறுங்க தம்பி! குர்ஆன் வகுப்பு நடக்கிற நேரம் கூட்டம் அதிகமா இருக்கும் பயான் முடிஞ்சதும் நாம என்னவென்று விசாரிப்போம் முதல்லெ அவங்களுக்கு சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணுங்க", என்றனர். அந்த பொறுப்பை என் நண்பர் ஏற்றுக் கொண்டார் எனக் கூறி நானும் குர்ஆன் வகுப்புக்குச் சென்று விட்டேன்.

அன்றிரவு சொல்லி வைத்தார் போல் ஜகாத் மற்றும் சதக்கா குறித்த விளக்க உரையை T.S. இஸ்மாயீல் அவர்கள் தெள்ளத் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். இடையில் என் இயற்கை தேவையை நிறைவேற்ற வெளியில் வந்த நான் அந்த மாற்று மத சகோதரனைக் கண்ணுற்றேன். குழந்தைகள் பசி நீங்கி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். அவரும் அவரது மனைவி மற்றும் வயதான தாயாரும் வானத்தை வெறித்துப் பார்த்த படி மார்க்க சொற்பொழிவைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அவர் அருகில் சென்றதும் எழ முயன்றவரை இருக்கச் சொல்லிவிட்டு, மேனேஜ்மென்டில் சொல்லி இருக்கின்றேன். சொற்பொழிவு முடிந்ததும் அவர்கள் உங்களை சந்திப்பார்கள் என்றேன். "ம்...சரிங்க தம்பி", என்ற அவரது கண்களில் நன்றி உணர்ச்சி பொங்கியதை உணர்ந்தேன்.

பயான் முடிந்து கூட்டமும் கலைந்தது. "தம்பி நீங்க யாரும் வராதீங்க ஒரு ரெண்டு பேர் மட்டும் போய் IIM லெ வச்சு என்னன்னு விசாரிங்க, பாவம்! அவர் கூச்சப்படுவார்", என நிர்வாகிகள் கூற, ஹாமீத் பக்ரி ஆலிம் மற்றும் இரண்டு நிர்வாகிகள் என்னுடன் வந்தனர். அவரது கையில் திருமறையின் தமிழாக்கமும், பெருமானாரின் பொன்மொழிகள் அடங்கிய இரண்டு புத்தகங்களும் இருந்தன. மாற்று மத சகோதரரை அழைத்து ஆலிம் அவர்கள் விபரங்களை சுருக்கமாகக் கேட்டறிந்த பின்னர் வழிப்போக்கர்களுக்கும், பொருளை பறி கொடுத்தவர்க்கும் உதவும் நிலை குறித்து சத்திய மார்க்கத்தின் சான்றுகளை தெளிவாக அவர் புரியும் மொழியில் பத்து நிமிடங்கள் எடுத்துரைத்தார்.

"இது பிச்சை அல்ல உதவி! ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ள கடமை! ஆக நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை" என்று கூறி நேரம் கிடைக்கும் போது இந்த குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படியுங்கள் என அவரது கரங்களில் கொடுத்தார்.

மிகுந்த மரியாதையோடு அதை வாங்கிக் கொண்ட அவர் உணர்ச்சி ததும்ப நனைந்த விழிகளோடு, "ஐயா முஸ்லிம்ங்கள்ன்னா குண்டு வைக்கிற தீவிரவாதிகள். இந்த நாட்டுக்கு எதிரிகள், பிற மதத்தவரோடு ஒத்துப்போக மாட்டாங்க, மிகக் கடுமையா இருப்பாங்கன்னு தப்புக்கணக்கு போட்டிருந்த எனக்கு நீங்க எவ்வளவு மென்மையானவர்கள், பிறருக்கு உதவும் மனப்பாண்மை கொண்டவர்கள் என்பதை நான் இன்றுதான் புரிந்து கொண்டேன். யார் உதவுவார்கள் என்று உரிமையுடன் எதிர்பார்த்தேனோ அவர்கள் எல்லாம் எங்களை அநாதையாகத் தவிக்க விட்டுவிட்டனர். உதவி செய்யவில்லை! நான் வேறெ மதக்காரன் என்று தெரிந்தும் என்னையும் உங்க உடன்பிறப்பா நெனச்சு எங்களெ மதிச்சு வயிறார சாப்பாடு போட்டு உதவிக்கு நிற்கிறீங்களே? அப்ப உங்க மதமும் மென்மையான உண்மையான மதமாகத்தான் இருக்கும்." என மனம் உருகி கை கூப்பினார்.

மனிதர்கள் மனிதர்களை வணங்கக் கூடாது எனும் மார்க்க தத்துவத்தை ஆலிம் எடுத்துக் கூறி, "நீங்கள் பாதுகாப்பாக ஊருக்குச் செல்ல இந்த நிர்வாகம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்" என்று அவரது கரங்களைப் பற்றிப்பிடித்து ஆறுதல் சொல்லி ஆலிம் விடை பெற்றுச் சென்றார்.

சற்று நேரத்திற்குள் அங்கிருந்த ஒரு சில நபர்களிடமிருந்து ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் உதவித் தொகையாக சேர்ந்தது. "இவ்வளவு பணம் எனக்குத் தேவையில்லை பஸ் சார்ஜ்ஜுக்கு மட்டும் கொடுங்க போதும். நான் ஊர் போய் சேர்ந்த உடனே உங்களுக்கு மணியார்டர்லெ அனுப்பி வச்சுடுறேன்", என்றவரிடம் இது உங்கள் பணம் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என வற்புறுத்தி வழங்கி விட்டு அதிகாலை மதுரைக்குச் செல்லும் பேருந்தில் அவர்களை ஏற்றிவிடும் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு அனைவரும் வீடு திரும்பினர். ஒரு நல்ல காரியத்திற்கு நாமும் துணை நின்றோம் எனும் மன நிறைவோடு நானும் எனது இல்லம் நோக்கி நடந்தேன்.

இச்சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வெள்ளிக் கிழமை ஜும்மா முடிந்ததும் ஒரு அறிவிப்பு வந்தது. அருகில் முக பரிச்சயமுள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தார். யார் இவர் என உற்று நோக்கிய எனக்கு பெருத்த ஆச்சரியம்! அவர்தான்...! அவரேதான்...! அன்று உதவியை நாடி வந்த அந்த நபர்தான்...! அவரிடம் ஒலி பெருக்கி கொடுக்கப்பட்டது. அவர் "ஸலாம் அலைக்கும்" எனும் கொச்சை உச்சரிப்பில் பேசத் துவங்கினார்....

”நான் மதுரையில் சிறிய அளவில் துணி வியாபாரம் செய்து வருகின்றேன். ஒரு மாதத்திற்கு முன் எனது குடும்பத்துடன் வழிபாட்டிற்காக பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்திருந்தேன்", என அன்று நடந்த அத்தனையும் விவரித்தரார். "வழிப்பறியில் உடமைகளைப் பறிகொடுத்த நாங்கள், எதற்காக வந்தோமோ அதைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள் என்று பெரிதும் நம்பினோம். ஆனால் அவர்கள் யாரும் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை.

மாறாக என் அருமை இஸ்லாமிய சகோதரர்கள் வாஞ்சையுடன் என்னை உபசரித்து உதவிய மனித நேயம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவங்க தந்த தமிழ் குர்ஆனைப் படித்தேன் எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். அல்லாஹ்வின் கருணையால் இன்று நான் இந்த மண்ணில் இஸ்லாமை முழுமையாக ஏற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் என் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வருவேன் அவர்களும் இஸ்லாத்தை ஏற்பார்கள்" என்று கூறி முடித்ததும் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது வரை நிசப்தமாக இருந்த இறையில்லத்தி்ல் "அல்லாஹு அக்பர்" எனும் ஒட்டுமொத்த ஒலி இடியோசை என முழங்கியது.

மனித நேயத்திற்கு மதம் ஒருபோதும் தடையில்லை! கல்வி, வேலை வாய்ப்பு, கை நிறைய பணம் என அலங்கார சலுகைகளை அள்ளித் தெளித்தும், கோடி கோடியாக செலவு செய்தும் பிற மதங்கள் சாதிக்க இயலாத ஒன்றை ஆதரவற்று நிற்கும் ஒரு மனிதனுக்கு பிரதி பலனை எதிர்பாராமல் மனமுவந்து உதவி புரிவதால்கூட சாதிக்க இயலும் என்பது தெளிவாகிறது. நாம் செய்யும் நற்கருமங்களையும், நமது நன்னடத்தையையும் நன்கு அறிந்து உணர்ந்து புரிந்து கொண்டு தெளிவு பெற்றுதான் நம் தூய மார்க்கத்தின் பால் அவர்கள் வருகின்றனர். அவ்வாறு வந்தவர்கள்தான் இன்று ஈமானில் உறுதியுடனும், இறையச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சொல்லப் போனால் நம்மை விட பன்மடங்கு மேலாக...! இன்னும் மேன்மையாக...!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) on 23 July 2015
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41388

மச்சான் ரபீக் விழித்துள்ள கட்டுரை அருமை.

இது போன்ற பலநிகழ்வுகள் நமதூர் தபால் தந்தி பேருந்து நிறுத்தத்தில் நடை பெறுவது இயல்பானது. நமதூர் சகோதரர்கள் அவ்வபோது இதுபோன்று வரும் நபர்களுக்கு பணம் வசூலித்து கொடுத்து அனுப்பிய நிகழ்வுகள் நிறைய உண்டு. அது நமதூர் மண்ணின் தன்மை. நமது முன்னவர்கள் கற்றுத்தந்த பாதை.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்களின் எல்லா வாழ்வும் , வளமும் நலமாக அமைய நல்லருள்புரிவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: fazul (hong kong) on 23 July 2015
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 41391

அருமையான கட்டுரை அல்ஹம்ட்லிலாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...அருமையான செய்தி...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 23 July 2015
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41392

''நபிகள் நாயகம் அவர்களின் பிரச்சாரம் மூலம் இஸ்லாம் ஓங்கி வளர்ந்ததா அல்லது அவர்களின் நற்பண்புகளால் ஓங்கி வளர்ந்ததா'' என்று பட்டி மன்றம் வைத்தால் - நம் இளைஞர்களை அப்படி நாம் பேச வைக்க வேண்டும். அதற்கு ஒரு சரியான நடுவர்
''INNAKA LA ALAA KHULUQIN ALEEM .என்று படைத்த இறைவனே அவர்களுக்கு நற் சான்றிதழ் அளிப்பதை மேற்கோள் காட்டி, ஹுதைபிய்யா உடன்படிக்கை யில் அவர்களின் விட்டுக் கொடுக்கும் தன்மையால் ஏற்பட்ட மாற்றங்கள் அதிசயங்களை சுட்டிக் காட்டி ''நபிகளாரின் வாழ்வில் விஞ்சி நிற்பது அவர்களின் நற்பண்புகளே'' என்றே தீர்ப்பளிப்பார்.

ஏனோ நமது சமுதாயத்தில் அந்த விட்டுக் கொடுக்கும் தன்மையும் மனித நேயமும் அருகி வருகிறது. அதே சமயம் இந்த மனித நேய உணர்வுகள் பல இடங்களில் விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் ஆங்காங்கே நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நமது இஸ்லாமிய பிரசாரங்கள் எல்லாம் இப்படி மாற வேண்டும். அங்கும் இங்குமாக சில குறைகள் வணக்க வழிபாடுகளிலே உள்ள சில கருத்து வேறுபாடுகள் பூதக் கண்ணாடி போட்டு பெரிய குறையாக காட்டப்பட்டு அதுவே நமது வாழ்க்கை நெறியாகவும் அந்த கண்ணோட்டத்துடனேயே நம் இளவல்கள் வளர்க்கப் படுவதும் வார்த்தெடுக்கப் படுவதும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

விடியலை தேடி அலைகிறவர்களுக்கு நாம் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்க நமது வாழ் நாட்களை எப்படி திசை திருப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹு அக்பர்.

இந்த கட்டுரை ஆசிரியருக்கு நமது நன்றி கலந்த வாழ்த்துக்கள். எல்லோருடைய உள்ளங்களிலும் இந்த மனித நேய உணர்வு நிறைந்து நிற்க மேலும் மேலும் மாற்று மதத்தினர்கள் இந்த நல்ல பண்புகள் நம்மிடம் இருக்கிறது அது இஸ்லாம் சொல்லித் தந்ததுதான் என்று அறிந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைவதற்கு அல்லாஹ் துணை செய்வானாக.

ITHAA JAA;A NASRULLAAHI VAL FATHHU VARA AITHANNAASA YADHKHULOONA FEE DHEENILLAAHI AFWAAJAA...அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது நபியே இந்த தீனுல் இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கோட்டமாக வண்டு நுழைவதை நீங்கள் காண்பீர்கள்.

அப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணையும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

FA SABBIH BI HAMDHI RABBIKA VASTHAGHFIRHU INNAAHOO KAANA THAWWAABAA...

அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழ்ந்து அவனிடம் பாவ மன்னிப்பு கோருங்கள் நிச்சயமாக அவன் பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான். உதவி செய்தாலும் உதவி பெற்றாலும் அல்லாஹ்விடமே அவற்றின் பெறுபேறுகளை தேட வேண்டும்.

மாஷா அல்லாஹ் நம்மை இந்த இஸ்லாத்தில் பிறக்க செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

LAA THOWFEEQA ILLAA BILLAH..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) on 24 July 2015
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41394

நகரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மிக அருமையாக தெளிவாக கட்டுரை மூலம் பிறருக்கு எடுத்து கூறியுள்ளீர்கள் - இக்கட்டுரை மூலமே நான் இச்சம்பவத்தை அறிகிறேன்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...படிப்பினை
posted by: Mohamed Iqbal (Chennai) on 24 July 2015
IP: 1.*.*.* India | Comment Reference Number: 41399

நமது ஊரின் பெருந்தன்மையை பறை சாற்றவும் இன்றய இழைஞர்களுக்கு படிப்பினையான ஒரு கட்டுரை

நன்றி காக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Humanity
posted by: Jahir Hussain VENA (BAHRAIN) on 25 July 2015
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 41406

அல்ஹம்து லில்லாஹ்
இது நம் மண்ணின் சிறப்பு அம்சம் ..

நன்றி ரபீக் காகா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... மனதை ஏதோ பிசைகிறது...
posted by: Koos Aboobacker (Riyadh) on 27 July 2015
IP: 37.*.*.* | Comment Reference Number: 41424

அன்பு ரபீக் பாய்...

மிக நிறைவான கட்டுரை...

நடந்த சம்பவங்களை தாங்கள் சொன்ன விதம் மிக நளினமாக இருக்கின்றது... நடப்புகளை சொல்லும்போதே மார்க்கத்தின் மேன்மையும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள்... அருமை...

மாற்றுமத நண்பர்களுடன் உறவாடும்போது நம் மார்க்கம் சொன்னபடி நல்வழியில் நடப்பது கூட ஒரு தாவா தான் என்பது உண்மையிலும் உண்மை...

நீங்களெல்லாம் அடிக்கடி கட்டுரைகள் எழுதணும்... அது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்...

என்றும் அன்புடன்...

கூஸ் அபூபக்கர்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: vilack sma (jeddah) on 02 August 2015
IP: 5.*.*.* | Comment Reference Number: 41508

உடைமைகளை பறிகொடுத்த அந்த அன்பர் இஸ்லாத்தை பற்றியும் , இஸ்லாமியர்களின் உள்ளங்களையும் புறிந்து கொண்டதில் சந்தோசம் . அவர்களுக்கு உதவிய உள்ளங்களை நினைத்து மகிழ்ச்சி .

இவர் ஒரு வியாபாரி என்று சொல்கிறார் .இக்கட்டான நிலைமையில்கூட அடுத்தவனிடம் கையேந்துவது இவருக்கு மானப்பிரச்சினை . பரிதாபமான ஒன்றுதான் . இருப்பினும் இவருக்கு வியாபார தொடர்பில் உள்ள பலரும் , மதுரையில் உறவுக்காரர்களும் இருப்பர் . அவர்களுக்கு தொலைபேசியில் தனது இக்கட்டான நிலைமையை சொல்லி இருக்கலாமே ? காவல் நிலையத்திலோ அல்லது அங்கு வரும் பக்தர்களோ இதைகூடவா செய்ய மாட்டார்கள் ? ஏனெனில் இவரது ஊர் அருகிலிருக்கும் மதுரைதான் . எங்கோ வடகோடியில் இருக்கும் மதுரா இல்லை . தொலைபேசி செலவு 10 ரூபாய்கூட வராது .மேலும் செருப்புகடை நண்பர் 50 ரூபாய் கொடுத்து உதவி காயல்பட்டணத்தில் இந்த பள்ளிக்கு செல்லுங்கள் . உங்களுக்கு உதவுவார்கள் என்று சொல்லி இருக்கிறாரே . அந்த நண்பரிடமே தனது உறவினர்களுக்கு தகவல் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கலாமே ? ஆக இதில் ஏதோ ஒரு விசயம் மனதை உறுத்திகொண்டிருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. உறுத்தலுக்கான விளக்கம்...
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்) on 03 August 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41517

எனதருமை நண்பர் விளக்கு SMA அவர்கள் எப்போதுமே எதிர்மறையான கருத்ததைக் கையாளுபவர். இதில் உறுத்தலுக்கோ உரசலுக்கோ எவ்வித முகாந்தரமும் இல்லை.

என் நினைவு சரியாக இருப்பின் இச் சம்பவம் 1997 அதாவது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக நினைவு. அன்றைய கால கட்டத்தில் செல்போன்கள் புழக்கத்தில் இல்லை. செருப்பு வியாபாரி நடைபாதை கடை விரித்து நடத்தியவர். அவர் கொடுத்த பணத்தில் குழந்தைகளுக்கு ஆடை வாங்கியதாக அவர் கூறினார்.

மேலும் மதுரையில் அவர் துணிக்கடை நடத்தவில்லை. மாறாக மதுரையில் துணிகளை வாங்கி பல கிராமத்திலும் சென்று இன்ஸ்டால்மெண்ட் வியாபாரம் செய்து வருவதாக கூறிய நினைவு.

அவர் தங்கும் லைன் வீடு மிகச் சிறிய அறைகளைக் கொண்ட குடியிருப்பு. அங்கு லேண்ட் லைன் போன் தொடர்பு வசதியும் கிடையாது. பறிபோன தமது உடமைகள் எப்படியாவது கிடைத்து விடும் எனும் நம்பிக்கையில்தான் மூன்று நாடகள் அவர் கோவில் வளாகத்தில் தங்கியுள்ளார். மேலும் இந்த நபருக்கு உதவி புரியும் நோக்கில் வசூல் நடத்தியவர்களில் இந்த இணையதளத்தின் நிர்வாகக்குழுவில் உள்ள எனது அருமை நண்பர் S.K. சாலிஹ் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு சம்பவத்தை அதன் தாக்கத்தை ஆக்கமாக பதிவு செய்தேன். மாறாக நண்பரின் சந்தேகத்தை அல்லது அந்த பாதிக்கப்பட்ட நபரின் உள் மனதை நான் ஆழமாக துருவி ஆராய்ச்சி செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர் மதுரையாக இருந்தால் என்ன? மதுராவாக இருந்தால் என்ன? நமக்கு இப்படி ஒரு துன்பம் நேரும் போதுதான் அதன் வலியும், சிரமங்களும் நம் சிந்தைக்கு எட்டும். -ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by: A.L.S. Ibnu Abbas (Kayalpatnam) on 13 October 2015
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41995

A.L.S. இப்னு அப்பாஸ் (ALS மாமா) நூலகர் & தலைவர் சீதக்காதி நினைவு நூலகம், தாயிம் பள்ளி வளாகம்இகாயல் பட்டணம். அஸ்ஸலாமு அலைக்கும்,

இதயங்கள் புரட்டப்படும் போது இஸ்லாம் ஒன்றே தீர்வு.............என்ற கட்டுரையை எம்.என்.எல் முஹம்மதுரபீக் (ஹிஜாஸ்மைந்தன்) அவர்களின் அழகான தகவலை படித்தேன். இது போல் சம்பவங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளது. திருச்செந்தூர் பிரதான வழியில் எங்கள் நூலகம் அமைந்துள்ளதால் அருகிலுள்ள ஊர் கோவிலுக்கு வந்தவர்கள் உடமைகளை பறிகொடுத்து விட்டு நமதூரின் முதல் பஸ் நிலையம் எங்கள் நூலகம் அருகில் வந்து இறங்கிய உடன் உதவிட நான் ஓடோடி சென்று பலரிடமும் விசாரிப்பது எனது வழக்கம். அதில் ஹிஜாஸ் மைந்தன் கூறுவது போல பலர் உடமைகளை இழந்து வருவார்கள் அருகில் பணம் வசூலித்து பழைய சில டிரஸ்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

இஸ்லாம் என்பது மனித நேயம் வளர்க்கும் மாபெரும் அமைப்பு அதை நாம் சரிவர செய்வதில்லை.

-A.L.S. மாமா
(சமூக நல ஆர்வலர்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved