Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:52:12 PM
புதன் | 15 மே 2024 | துல்ஹஜ் 1749, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:19
மறைவு18:29மறைவு00:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4405:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5119:1719:44
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 34
#KOTWART0134
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 1, 2013
மண்ணின் மைந்த மருத்துவர்கள், மண்ணை துறந்து செல்ல காரணம்!
இந்த பக்கம் 3075 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

(இந்த கட்டுரையை நான் ஒரு டாக்டர் என்ற முறையில் இல்லாமல், காயலின் மண்ணின் மைந்தன் என்ற முறையில் எழுதுகிறேன். எனவே வாசகர்கள் இந்த கட்டுரை முழுவதும் என்னை டாக்டராக எண்ணாமல், ஊரில் உள்ள பொதுஜனத்தில் ஒருவனாகவே பார்க்கவும் -- முஹம்மது கிஸார்)

அஸ்ஸலாமு அலைக்கும். நமதூரான காயல்பட்டினத்தை பூர்வ குடியாக கொண்ட ஆங்கில மருத்துவர்கள், தற்சமயம் இந்தியாவிலும் , வெளிநாட்டிலும் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதில் விரல் விட்டும் என்னும் ஒரு சிலரே நமதூரில் இருந்து மருத்துவ பணி செய்து வருகிறார்கள். நமதூர் மருத்துவர்கள், அனேகமாக எல்லா துறையில் இருந்தும், இன்னும் நமதூர் மக்கள், சில அவசரத்திற்கு கூட நமதூரில் மருத்துவ சேவை பெறமுடியாமல் அலைவதை காணமுடிகிறது.

நமதூர் மக்கள் பலர் இணையதளங்களிலும் இன்னும் பல ஊடகங்களிலும் இதைப்பற்றி குறையாக எழுதி வருவதை பார்க்கிறோம். இந்த நிலைக்கு காரணம் என்ன என்று அலசு முன், ஒரு சில நிதர்சமான உண்மைகளை காண்போம்.

பொதுவாக ஒரு மருத்துவர், ஒரு சிறப்பு மருத்துவ துறையில் படித்து முடித்து வெளிவர குறைந்த பட்சம் 8 முதல் பத்து ஆண்டுகள் ஆகிறது. இதில் super speciality என்றால் அனேகமாக பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்படி பட்டம் முடித்து விட்டு வெளி வரும் சமயம், தன்னுடன் பள்ளியில் படித்த சக தோழர்கள் அநேகமாக , கைநிறைய சம்பாதித்து விட்டு ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டதை பார்க்கும் போது, அந்த இளம் மருத்துவர்கள், ஏனோ தாங்கள் சமூகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளதை போல், தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். படித்து முடிக்கும் வரை, தாங்கள் இதை பற்றி யோசிப்பதே கிடையாது. ஏனெனில் பொதுவாக மருத்துவ படிப்பு அதிக உழைப்பு, stress உள்ளது என்பதால், மருத்துவகல்லூரிகளில் படிக்கும் வரை தங்கள், தேர்வில் வெற்றிபெற்று வெளிவருவது ஒன்றில் தான் கருத்தாக இருப்பார்கள். இதற்காக பலர், கடன் மற்றும் உதவித்தொகை பெற்றே படித்து வருவார்கள். படித்து முடித்த வுடன், அந்த கடன்களை திரும்ப செலுத்தும் ஒரு அழுத்தமும் வந்து விடும்.

படித்து முடிந்து வந்து வெளியுலகை பார்க்கும் போது தாங்கள் ஏனோ உலக வாழ்வில் அதிகம் பின்தங்கி உள்ளதை எண்ணி வருந்துவார்கள். இது அவர்களை விரைவில் சம்பாதிக்க தூண்டும். இதில் தப்பு இல்லை. இது தான் மனித இயல்பு. பொதுவாக மருத்துவர்கள், மிக எளிமையான வாழ்க்கையை பின்பற்றினால், இந்த சமூகம் அவர்களை கிண்டல் செய்வதை பார்க்கிறோம்.

உதாரணம், ஒரு டாக்டர் டவுன் பஸ்சில் பயணம் செய்தால் 'என்னடா இவன் டாக்டராக இருந்து கொண்டு டவுன் பஸ்ஸில் செல்கிறான்' என்பது போன்ற கமெண்ட். 'டாக்டர் பொண்டாட்டி கழுத்தில் ஒரு நூல் போன்ற செயின் தானே உள்ளது' போன்ற விமர்சனங்களும். பொதுவாக மக்கள், டாக்டர் என்றால் அவர் குறைந்த பட்சம் ஒரு கார், சிறு பங்களா, பொண்டாட்டி கழுத்திலும் கையிலும் தங்கம் மின்னல் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, சமூகம் எதிர்பார்க்கும் வாழ்க்கையை அமைத்து கொள்ள ஒரு சில மருத்துவர்கள், கடன் கூட பெற்று விடுகிறார்கள். ஏற்கனவே, மிக தாமதமான சம்பாத்தியம், படித்த போது பெற்ற கடனை அடைக்க படும் அவஸ்தை, மேலும் கடன் பெற்று அதன் மூலம் இன்ஸ்டால்மென்ட் தொகை கூடி போதல், போன்ற காரணங்கள் அவர்களை ஒரு வித அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

இதன் விளைவாக தங்கள் வருமானத்தை கூட்ட, உடனே சம்பாதிக்க தேர்ந்து எடுக்கும் வழிதான் வெளிநாடோ அல்லது நகர்புற மருத்துவ தொழில் சேவை போன்றவை.

இப்படி சொந்த மண்ணை விட்டு , சம்பாதிக்கும் ஒரே நோக்குடன் வேற இடங்களில் தொழில் செய்வது சரியா அல்லது தவறா என்ற , மருத்துவர்கள் பார்வையில் அது சரியே. பொது மக்கள் பார்வையில் அது சரியல்ல என்பதே.

ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் ஆசை, ஆசாபாசம் எல்லா உண்டு என்று. கட்டாயம் ஊரில் தான் சேவை செய்ய வேண்டும் என்று நாம் எந்த அழுத்தமும் கொடுக்க இயலாது. ஏனெனில் , எந்த மருத்த மாணவர்களையும் நமதூர் பொது அமைப்புகள் SPONSOR செய்ததாக, அறியவில்லை.

சரி மருத்துவர்கள் ஒட்டு மொத்ததினரும் ஊரை விட்டு விட்டு, வெளிவூரில் சென்று தொழில் செய்வதில் உள்ள MASS PSYCHOLOGY க்கு என்ன காரணம் என்று சற்று அலசுவோம். பலர் அப்படி இருக்கலாம். குறைந்தது பத்து சதவிகித டாக்டர்களாவது ஏன் இங்கு இருப்பதில்லை என்று ஆராயும் போது, இதில் நமதூர் பொது மக்கள் ஊரில் உள்ள நமதூர் மருத்துவர்களை அணுகும் முறை, அவர்களின் சேவையை உபயோகபடுத்தும் முறை இதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று நாம் சற்று யோசிக்க வேண்டும்.

ஏனெனில், படித்து முடித்து விட்டு நமதூரில் ஆரம்பகாலங்களில் தொழில் செய்த பல நமதூர் டாக்டர்கள், நாளடைவில் தங்கள் கிளினிக் இருக்கும் ஊரை மாற்ற காரணம் (ஒரு சிலர் தவிர) என்று யோசிக்கும் போது அவர்களின் கசப்பான அனுபவங்கள் தான் அவர்களை ஊரை மாற்ற செய்ததா அல்லது அவர்களின் கசப்பான அனுபவங்களை கேள்வியுற்ற மற்ற இளம் மருத்துவர்களிடம் ஊரில் தாமும் பணி செய்தால் இது போல கசப்பான அனுபவம் வந்து விடுமோ என்ற பயம் காரணமாகவோ இருக்கலாம்.

எனக்கு ஞாபகம் தெரிந்து பல டாக்டர்கள் ஆரம்பகாலங்களில் நமதூரில் பணிபுரிந்து விட்டு தான், பின்னர் மற்ற ஊர்களுக்கு மாற்றலாகி சென்று உள்ளார்கள்.

சில உதாரணம்

டாக்டர் ஜவஹர் --- தற்போது --- வாசுதேவநல்லூர்

டாக்டர் இத்ரீஸ் --- தம்மாம்

டாக்டர் கிஸார் நவாஸ் --- ஓமன்

டாக்டர் தம்பி --- திருநெல்வேலி

டாக்டர் முஹம்மது கிஸார் (நான்)--- சென்னையில்

டாக்டர் மகபூப் சுபுஹாணி --- திருநெல்வேலி

இன்னும் பலர்.

ஆனால் இவர்களிலிருந்து ஒரு உண்மைகள் தெரிகிறது. இவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை தரம் ஊரில் இருந்ததைவிட, வெளிஊர் சென்ற உடன் அதிகரித்து உள்ளது. இதை நம்மூரை மட்டம் தட்ட வேண்டும் என்ற ரீதியில் குறிப்பிட வில்லை. அடிப்படை உண்மையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நமதூரில் இருந்தால், குடும்பத்துடன், மற்றும் சொந்த பந்தங்களுடன் வாழலாம். ஊரில் நல்லது கெட்டது என்றால் உடனே கலந்து கொள்ள முடியும். நாம் சம்பாதிக்கும் முன்பே இருந்த சொந்த வீடு போன்ற எத்தனையோ நல்லவைகள் இருந்து மருத்துவர்கள், சொந்த ஊரை விட வெளியூர் அல்லது வெளிநாட்டை அதிகம் நாட காரணம் என்ன என்று அலசி பார்க்கும் போது கீழ்கண்டவற்றில் ஒன்றோ அல்லது பலதோ இருக்கலாம் என தோன்றுகிறது.

------ ஊரில் இருக்கும் போது ஊர் மக்கள் தன் சேவையை பயன்படுத்த வில்லை அல்லது பயன்படுத்த மாட்டார்கள். இதனால் தன அனுபவம் குறையலாம். ஊரில் தம்மை வைத்து கொண்டே நெல்லையயோ அல்லது தூத்துக்குடி அல்லது நாசரேத் அல்லது நாகேர்கோயில் உள்ள டாக்டரை தேடி செல்வதால், தன் திறமை குறைத்து மருத்துவ அறிவின் மதிப்பு குறைவதாக கருதலாம்.

------ பகல் நேரங்களில் மற்ற டாக்டர் மற்றும் மற்ற ஊர் டாக்டர்களை கலந்து ஆலோசித்து விட்டு , இரவில் அவசரத்திற்கு மட்டும் தங்களை பயன்படுத்தாலம். இதன் மூலம் தாம் கறிக்கு தேவைப்படும் கறிவேப்பிலை போல் பயன்படுத்த பட்டு, தனது மருத்துவ திறமை குறைத்து மதிப்பிடுவதாக கருதலாம் அல்லது இரவில் தன் தூக்கம் கெடுவதாக நினைக்கலாம். (நோயாளிகளுக்கு ஒரு இரவு தான். ஆனால் இரவு நோயாளிகளை ATTEND பண்ணுன் டாக்டர்களுக்கு தினம் இரவு விழிப்புதான்

------ வழக்கமாக மருத்துவ ஆலோசனை பெற மற்ற டாக்டர்களின் சேவையை பயன்படுத்தி விட்டு, அவசர காலத்திற்கு தன சேவையை, வீட்டு விஜயம் என்னும் HOUSE விசிட் க்கு மட்டும் பயன்படுத்துவதால், தன் மருத்துவ திறமை குறைத்து மதிப்பிட படுவதாக எண்ணலாம். அல்லது இதனால் தனது வழக்கமான பணிகள் பாதிப்படைவாதாக எண்ணலாம். ஊரில் அநேகர் தெரிந்த முகமாக இருப்பதால் இதை மறுக்க முடியாமல், மனமில்லாமல் வீட்டு விஜயம் போகலாம்.

------ மற்ற டாக்டர்களின் சேவையை பொதுவாக பயன்படுத்தி விட்டு, தன்னை வெறும் BP பார்க்க அல்லது மற்ற டாக்டர் எழுதி கொடுத்த ஊசி போட மட்டும் பயன்படுத்தலாம் என்ற பயம். இதனால தான் குறைத்து மதிப்பிடப்படுவதாக எண்ணலாம்.

------ தான் சேர்ந்த மருத்துவ துறை அல்லாமல், மற்ற துறைகளின் மருத்துவத்தையும் பார்க்கும் காட்டாயம் ஏற்படலாம். இதனால் அந்த துறையில் தான் இன்னும் அனுபவம், புகழ் பெறுவது பாதிக்கப்படலாம் என்ற எண்ணம். உதாரணம், குழந்தை மருத்துவரை, எல்லா நோயாளிகளை பார்க்க வைக்கும் பழக்கம்.

------ தமது சேவையும் பயன்படுத்தி விட்டு, தனது தொழில் சேர்த்து பட்ட பெயர் வைத்த கசப்பான அனுபவங்கள். (சுடு மூஞ்சி டாக்டர், இரண்டு ஊசி டாக்டர் ...)

------ தன்னுடன் அவசரத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்று விட்டு, அவசரம் முடிந்த பிறகு பிற அல்லது வெளியூர் டாக்டரிடம் சென்று, தனது ஆலோசனைக்கு மேல் ஆலோசனை பெறுவதால், தான் அவமானபடுவாத எண்ணலாம் (டாக்டரே 2ND OPINION அனுப்பினால் அது வேறு)

------ தன் மருத்துவ அறிவை, காலத்திற்கு ஏற்ப வளர்த்து கொள்ள, அதிக மாநாடுகள், போன்றவற்றில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவாக இருப்பதாக எண்ணலாம் .

------ எதிர்பாராவிதமாக் சில பக்க விளைவுகள் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்டுவிட்டால், தன் மருத்துவ அனுபவங்களை குறைத்து தன்னை வஞ்சிக்கலம் அல்லது தண்டிக்கலாம் என்ற பயம்.

------ தான் ஊரில் கிளினிக் வைத்தல், வெளிநோயாளிகள் மட்டும் தான் பார்க்க முடியும், மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெறும் INPATIENT வாய்ப்பு தனக்கில்லாமல் போய் விடும் என்ற பயம் அல்லது அப்படி வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். அதனால் தன் மருத்துவ திறன் தடை பெறும் என்ற பயம்.

இது போன்ற காரணங்கள் இருக்கலாம் என்று பல மருத்துவர்கள் உணருவதாக எண்ணுகிறேன்.

இந்த குறைபாடுகளை களைந்து இனி வரும் இளம் மருத்துவர்களை நம்மூரில் தக்க வைத்து கொள்ள என்ன வழி உண்டு என்று உணர்வுபூர்வமாக உணர்ந்து, நமதூர் எல்லா அவசர மருத்துவ சேவைகளையும் பெற வழி காண வேண்டும். இதை பற்றி வாசகர்களின் கருத்துகளை, எந்த தனி மனிதரையும் குறிப்பிடாமல் வரவேற்கிறேன்.

இன்ஷா அல்லா, வரும் காலத்தில், இந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்று பார்ப்போம்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: salai s nawas (singapore) on 01 April 2013
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26590

ரொம்ப காலமாக பலரிடம் இருந்த ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்திய நண்பன் டாக்டர் கிஸார் அவர்களுக்கு நன்றி!!!

மண்ணின் மைந்த மருத்துவர்கள், மண்ணை திறந்து செல்ல காரணம்! இதற்க்கு ஒரே வரியில் சொன்னால் மண்ணை திறந்து செல்லாவிட்டால் அவர்கள் திண்ணையில் தான் உட்கார வேண்டும். இது நிதர்சனமான உண்மை.

மனம் திறந்து பல நிகழ்வுகளையும் இதற்கான காரணத்தையும் சொல்ல வந்தால் என் கருத்துக்கள் யாவும் அட்மினின் கதிரிக்கி பலியாக வேண்டி இருக்கும்.

மேலோட்டமாக பார்த்தால், உள்ளூர் மாடு விலை போகாது என்ற பழமொழி தான் நியாபகம் வருகிறது.

அன்று ஊரில் இருக்கும் வரை நம் மருத்துவருடைய திறமை அறிந்திரிந்தாலும் அணுக மனம் வராது, காரணம் எளிதில் கிடைக்கும் பொருளுக்கு மகத்துவம் ரொம்ப கம்மி. ஆனால் இன்றோ அவரை பார்க்க திருநெல்வேலிக்கு கார் எடுத்து போய் மணிக்கணக்கில் காத்து இருந்து பார்க்க வேண்டி இருக்கு.

பரிமாணம் மற்றும் நாகரீக வளர்ச்சியும் ஒரு காரணம். 20 வருடங்களுக்கு முன்னாள் ஒரு பெண்மணி என்னிடம் " வாப்பா, நரம்பு தளர்ச்சி டாக்டர் வந்துட்டாங்களா? ன்னு கேட்டார்கள், விவரமா கேட்டபோது தான் அவர் நரம்பு தளர்ச்சிக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் என்று.

ஒரு மருத்துவர் வீட்டில் ரிக்க்ஷா நின்றால், இன்னிக்கி டாக்டர் வீட்டில் அஹனி கறின்னு என் காதுபடவே சொல்லி சென்றதை நான் கேட்டுள்ளேன். ரெண்டு ஊசி டாக்டர், 10 ரூபாய் டாக்டர் என்ற பட்ட பெயர் வேறு. இந்த மாதிரி சமூகத்தோடு அந்த மருத்துவர்களும் சேர்ந்து இருந்தால் காச்சலுக்கும் பேதிக்கும் மட்டுமே வைத்தியம் செய்ய பழகி இருந்திருப்பார்கள்.

ஆக, முன்னேறிய நாடுகளுக்கும் ஊர்களுக்கும் சென்று மருத்துவ உலகில் நிறைய கற்று இங்கு வருவதே சாலச்சிறந்தது.

முக்கியம் உங்கள் தேவை நிறைவேறினால் மட்டுமே எங்களுக்கு சேவை செய்ய முடியும்.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Mohamed Salih (Bangalore) on 01 April 2013
IP: 121.*.*.* India | Comment Reference Number: 26593

ரொம்ப காலமாக பலரிடம் இருந்த ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்திய டாக்டர் கிஸார் அவர்களுக்கு நன்றி!!!

நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை இதை யாரும் மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . உங்கள் கருத்து அல்லது இந்த கட்டுரையை காப்பி எடுத்து நமது ஊரின் செல்வந்தர்கள் மற்றும் வல்ல இறைவனின் மாபெரும் கருணையால் கட்ட பட்ட கே.எம் டி மருத்துவமனை குழுவுடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு நல்ல விடிவை நம் ஊரு மக்களுக்கு இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் எல்லா துறை களிலும் சிறப்பான மருத்துவர்கள் இருக்கிறோம் என்ற நல்ல செய்தியை எங்களை போன்ற மக்களுக்கு உற்சாக ( Tonic ) தருவிர்கள் என்று நம்புகிறோம் .. இன்ஷா அல்லாஹ்..

நீங்கள் மிக அழகஹா பூனைக்கு கட்டும் மணியை வாங்கி வந்து விட்டீர் .. இப்போது யாரு அதை பூனைக்கு கட்டுவது .. நான் வல்ல இறைவனையும் , உங்களை போன்ற ஊரு நல விரும்பியும் நம்பி இருக்கிறேன் ..

எங்கள் காயல் கண்மணியான நீங்கள் இதற்காக முயற்சி எடுக்கவும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பன் இன்ஷா அல்லாஹ் ..

என்றும் அன்புடன் ,
உங்கள் சகோதரன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே;.கே. எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 01 April 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26596

மரியாதைக்குரிய டாக்டர் அவர்களின் கருத்துக்கள் மறுப்பதிற்கில்லை! அனுபவித்தின் வெளிப்பாடு கூடவாக இருக்கலாம்.

அதே நேரத்தில் தன்னிறைவு பெற்ற பின் சொந்த மண்ணிற்கு சேவை செய்யலாமே! இதில் நம்மவர்களில் பலர் உடன்பட மறுப்பது ஏன்?

அவசர தேவை இரவிலா இவர் தான் பார்ப்பார் என ஆட்டோ காரர்களே நாம் சொல்லாமல் இரவில் நேரடியாக அவரிடம் அழைத்து செல்கிறார்களே!

மாற்று மத சகோதரர் மரியாதையுடன் முன்னுதாரணமாக செயல்பட்டு மரியாதையோடு மரணிக்கவில்லையா?

நம் பொது மருத்துவ அறக்கட்டளையில் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மாட்டாயா? என வீட்டில் உரிமையோடு கேட்டால் தொடர்ந்து அவர்களிடம் தடுப்பூசி போட்டால் தான் போடுவார்கள் என்கிறார்களாம் அப்படி ஏதும் சருத்து போட இடம் உள்ளதா?

மருத்துவம் என்பது மக்களுக்காற்றும் புனிதமான சேவை. இதில் தன்னிறைவு பெற்ற பின் சிறிதேனும் ஊருக்காக பொது பனி யாற்றலாமே!

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தங்களருமை பெரியப்பா மர்ஹூம் டாக்டர் செய்யத் முஹம்மது ( அல்லாஹும்ம க்பிர்லஹு)அவர்கள் வெளியூரில் சேவை செய்தாலும் நம்மூருக்கு என பிரத்தியேகமாக நமது Y.U.F மூலம் பல மருத்துவ வல்லுனர்களை அழைத்து வந்து எத்தனை பொது மருத்துவ முகாம்களை நடத்துவதுடன் மட்டுமல்லாமல் வசதியற்றவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளார்கள் .

இன்றும் இது போன்ற மருத்துவ முகாம்கள் பொது மன்றங்கள் மூலம் அரிதாக நடக்கிறது. மருத்துவ வல்லுனர்களால் அல்ல!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. இருதரப்பு இணக்கம் தேவை!
posted by: kavimagan m.s.abdul kader (qatar) on 01 April 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26597

டாக்டர்.கிஸார் காக்கா அவர்களின் இந்தக் கட்டுரையின் தலைப்பில் மண்ணைத் திறந்து என்பதனை மண்ணைத் துறந்து என்ற சரியான பதத்திற்கு மாற்றிக் கொள்வோம்.

டாக்டர் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையை ஆழ்ந்து வாசிக்கும் போது, மண்ணின் மைந்தன் என்ற மனநிலையில் கொஞ்சமும், ஒரு மருத்துவர் என்ற முறையில் அதிகமும், இதன் சிந்தனைப் போக்கு இருக்கிறது என்பது எனது பணிவான அபிப்ராயம்.

தாய்மண்ணில் பணியாற்றும் ஒரு மண்ணின் மைந்தனுக்குரிய பிரச்சனைகளாக, டாக்டர் அவர்கள் சுட்டிக் காட்டிய எந்த ஒரு கருத்தையும் மறுப்பதிற்கில்லை. நமதூர் மக்களின் பல்வேறு சுவாபக் கோளாறுகள், மருத்துவரின் பொருளாதார நிலை, துறை சார்ந்த அறிவு மற்றும் திறமையை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம், இன்னும் இதுபோன்ற காரணிகள் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவையே!

அதே நேரத்தில்,கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள், ஏதேனும் ஒரு நகரத்தில் பணியாற்றி, பொருளீட்டி, மேற்படிப்பும் படித்து, ஓரளவுக்கு சுய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னிறைவு அடைந்த பின்னரும், தாய்மண்ணில் சேவையாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு பெரும்பாலான மருத்துவர்களுக்கு இல்லை என்ற கசக்கும் உண்மையை டாக்டர் அவர்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தால், அவரது வேண்டுகோளின்படி, கட்டுரை ஆசிரியரை மருத்துவராக அல்லாமல், மண்ணின் மைந்தராக காண முடிந்திருக்கும்.

மருத்துவம் என்பது பணம் போட்டு பணம் எடுக்கும் தொழில் மாத்திரம் அல்ல. மிக உயர்ந்த சேவையை அடிப்படையாகக் கொண்டது என்பதனையும் மனதில் நிறுத்த வேண்டும். நமது மக்களும், நமது மண்ணின் மைந்தர்களாகிய மருத்துவர்களுக்கு உரிய மரியாதையும், அவர்களது தகுதிக்கேற்ற கட்டணத்தையும் செலுத்தி மென்மேலும் சேவையாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உள்ளூர் மருத்துவமனைகள், நகரத்து மருத்துவமனை போல் இல்லையெனினும், மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை நிறைவு செய்யும் வகையில் அவர்களது வருமானத்திற்கு உத்தரவாதம் அளித்து, மண்ணின் மைந்தர்களுக்கு கண்ணியமும், முக்கியத்துவமும், அளிக்க வேண்டும்.

நமது நகரத்திலேயே பணியாற்ற உறுதியளிக்கும் மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான செலவினை தொண்டு நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

டாக்டர் அவர்களின் இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதும், நீண்ட கால ஆதங்கத்தை அலசுவதற்கு கிடைத்த வாய்ப்புமாகும். நன்றி டாக்டர் சார்! வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...மறுபதற்கில்லை
posted by: Musthafa.MIN (chennai) on 02 April 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26617

அஸ்ஸலாமு அழைக்கும்

டாக்டர் அவர்களின் கருத்துகளை மறுபதற்கில்லை... நம் மக்கள் நமதூர் மருத்துவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது ஊர் அறிந்த ஒன்று.... இருந்தும் அவர்களையும் குறை கூற முடியாது..... விசாலமான நிலபரப்பு கொண்ட,பல அடுக்கு மாடி கட்டிடம்,நவீன வசதிகளையும் கொண்ட மருத்துவமனை இருந்தும் நமதூர் மக்கள் நெல்லை, நாகர்கோவில் என்று செல்கிறார்கள்.... காரணம் நமதூர் மருத்துவமனை இல் இந்த மாதம் ஒரு டாக்டர் என்றால் அடுத்த மாதம் மறோருவர்... இந்த போக்கினால் மக்களும் மாரிகொன்டர்கள்...

காயல் டாக்டர்ஸ் எல்லோரும் நமதூர் மருத்துவமனை(K M T ) இல் பனி செய்ததாக அறிந்ததில்லை... ஒரு சிலரை தவிர... இப்போது மருத்துவம் பயின்று வெளியே வரும் மருத்துவர்கள் சிட்டேனே பறந்து விடுகிறார்கள்... பயிற்சியும் கூட நமதூர் மருத்துவமனை இல் எடுப்பதும் இல்லை... தவறாக என்னதீரகள் முன்பு நமதூர் மருத்துவ மாணவர்கள் செலவு இல்லாமல் அறிவை மூலதனமாக கொண்டு பயின்றார்கள் இன்றோ அப்படி இல்லை பல இலட்சங்கள் புரளுகின்றது....

என்னுடைய அறிவிற்கு எட்டியது..

1.காயல் மருத்துவர்கள் ஒன்றாக இணைந்து காயல் மருத்துவர்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தலாம்.

2.கூட்டமைப்பின் மூலம் நன்றாக பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளை மருத்துவ கட் ஆப் (cut off) முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு sponser செய்யலாம்....8 வருடம் contract அடிப்படை இல் நமதூர் மருத்துவமனை இல் பனியாமர்தளம்.

3.விடுப்பில் வரும் காயல் மருத்துவர்கள் துறை சார்ந்த முகாம்களை ஏற்படுத்தி நமதூர் மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்யலாம்.

4.நெல்லை போன்ற அருகாமை ஊர்களில் மருத்துவம் புரியும் மருத்துவர்கள் வாரம் இரு முறையாவது நமதூர் மருத்துவமனை இல் சேவை புரியலாம்.

5.கூட்டமைப்பு நமதூர் மருத்துவமனைக்கு பரிந்துரைகளை அவ்வபொழுது வழங்கி வரலாம்.

6.மகபேறு,இருதயம்,நரம்பு,பல் மற்றும் குழந்தைகள் நல டாக்டர்ஸ் நிரந்தரமாக நமதூர் மருத்துவமனை இல் பணியாற்ற அவர்களுக்கு தேவையான வசதிகளை மருத்துவமனை உடன் இணைந்து ஏற்படுத்தி கொடுக்கலாம்...

நமதூர் டாக்டர்ஸ் காயல்பட்டினத்தில் சேவை ஆற்ற முடியாத பட்சத்திலும் இது போன்று சேவைகளை செய்யலாம்....பிழைகள் இருந்தால் அல்லாஹ் விற்காக மன்னிக்கவும் ..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) on 02 April 2013
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26627

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

முதலில் நோயாளிக்கு தன்மீதும் அனுகும் மருத்துவர்மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக தனது நோய் குணமாகும் அதை இறைவனே குணமடையச்செய்கிறான் என்ற முழுநம்பிக்கை வரவேண்டும். அதல்லாமல் கைராசி முகராசி என்ற மூடநம்பிக்கைகளை அகற்றவேண்டும்.

அதுபோல மருத்துவர்களின்மென்மையான அனுகுமுறையும்,செவிலியர்களின் கனிவான ஈடுபாடுகளே நோயாளிக்குத்தன்னம்பிக்கையையளித்து விரைவில் குணமடைய வழிவகுக்கும். தம் நலம்விரும்பும் நாம் நம் நலம் விரும்பி மருத்துவம் செய்து உதவுபவர்களின் நிலையையும் நாம் உணரவேண்டும். அவர்கள் நல்ல நிலையிலிருந்தால்தான் மனோரீதியாக் சுகாதாரமாக சிகிச்சையளிக்கமுடியும்.

சேவைசெய்பவர்களுக்கும் தேவைகளிருக்கும் என்பதை உனரவேண்டும் “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்” டாகடர் அவர்களின் கருத்துப்படி கட்டணங்களே பட்டங்களை வழங்குகின்றன என்பது நிதர்சன உண்மை.

சிலருடைய மனப்பாங்கை நல்லெண்ணத்தைக் கொடுத்து இறைவன்தான் மாற்றவேண்டும். மருத்துவ உலகம் இதை மறந்துவிட்டு தங்களின் இந்த புனிதமான தொழிலுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

வாழ்த்தும் நெஞ்ஜங்கள் வாழ்த்திக்கொண்டுதானிருக்கிறது அப்படியிருக்கும் பட்சத்தில். உங்கள் வாகைகளை சில வான்கோழிகளின் தோகைகள் மூடிவிடாது

”மற்றவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் ஆயுள் நீக்கும் மருத்துவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் ஆயுளை நீட்டித்தரும்”

எல்லாம் இறைவன் செயல்.

இறைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.

குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved