Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:20:08 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 24
#KOTWART0224
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 23, 2014
என்ன நீ இழந்திடுவாய்?
இந்த பக்கம் 2231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



ஏனோ பயம்
எதற்காகவோ அச்சம்!
ஒற்றையடிப் பாதை
வளைந்தும் நெளிந்தும்
சுற்றும் பாம்பெனவே தோற்றம் ...

மவுனத்தைக் கிழிக்கும்
தென்னங் கீற்றுகளின்
சட சட சப்தம் ...
கூடு வந்தடையும்
அந்திப் பறவைகளின்
அனாமதேயக் கீச்சல்
படபடக்க வைத்தது நெஞ்சை!

மேற்கு மூலையில்
எரியாத அடுப்புக்குள்
பூனைக்குட்டியாய்
பதுங்கி விட்டான் பகலவன்.....
அந்தி வாயை மெல்லக் கவ்வியது
நிலவற்ற மாலையின்
இருட்டு உதடுகள்!
பாதம்பட்டு சரசரக்கும்
பட்டுப்போன சருகளின்
சரக் சரக் ஓசையில்
சப்த நாடிகளில்
சலங்கையின் ஜல் ஜல் ...

எங்கோ குரைக்கிறது நாய்
எதைக் கண்டோ?
காது மடலோரம்
கம்பிவட அதிர்வுகள்
நடுக்கம்....நடுக்கம்....

வந்து விட்டது மையத்துக் காடு!
சுற்றுச் சுவரில் கத்திக் கரையும்
காகங்கள் எல்லாம்
எங்கே தொலைந்தன?
இதயம் சோர்ந்ததால்
பாதமும் சோர்ந்து
பயத்தின் பிரளயம் உந்தித் தள்ள
உள்மூச்சு வெளிமூச்சு வாங்கியது ...

என்ன இது வினோத சிந்தனை ...?
எதோ ஒன்று பின்புறம் வந்து
தட்டக் கூடுமோ
தலையின் கூட்டில்?

தூரத்து காடாவிளக்கின்
தூங்கி வழிந்த மஞ்சள் வெளிச்சம் ...
அதனடியில் ஓர் உருவம்
நிழலாகத் தெரிந்ததுமே
நின்று விட்டேன்....கூடவே
மெல்லிய குரலோசை
மெல்லவே நடை தொடர்ந்தேன் ...

கப்ரஸ்தான் வெளிப்புறமாய்
கட்டி வைத்த குடிசை அது....
விரிந்திட்ட மணற்பரப்பில்
கவிழ்த்திட்ட குடம்போல!
களங்கமில்லா முழுமதியாய்
கையேந்தி புத்தகத்தில்
பதிந்த பல பாடங்களை
படிக்கின்ற பாலகன் ஒருவன் ...
இப்போது அவனும்
கணீரென்ற குரலும்
கண்ணருகில்....காதருகில்!
" உலகத்தின் துணையிருந்தும்
இறைவனின் தயவின்றி
என்ன நீ சாதிப்பாய்?

உலகம் உனைக் கைவிடினும்
இறைவனது தயவிருந்தால்
என்ன நீ இழந்திடுவாய்? "...

தேகமெங்கும் புது ரத்தம்
அங்கமெங்கும் புத்துணர்ச்சி...
மெல்ல மெல்ல விரிகின்ற
மலர் போல இதயத்தில்
துணிவு பிறக்க அச்சம் அகல
இருள் எங்கோ விலகியது ...

பறவைகளின் கீச்சல்
அடடா...ஆனந்த ராகம் ...
நாய் இப்போதும் குரைத்தது
அதில் நட்பு தெரிந்தது ...

எங்கும் வெளிச்சத்தின் சிதறல்கள் ....
அண்ணாந்து பார்த்தேன்
அந்தியின் வாயிலிருந்து
அதரம் விலக்கிய அழகு நிலா
நாணத்தை புன்னகையை
சிந்தியது என்மீது ...
சிரித்தேன் நான் உள்ளுக்குள்!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எங்கு சென்றாய் நண்பா?
posted by: சாளை பஷீர் (சென்னை) on 23 May 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35066

இத்தனை நாள் எங்கு சென்றாய் நண்பா ?

அச்சமும் பிறழ்வும் அழகியலும் நம்பிக்கையும் பின்னிப்பிணையும் கவிதையோட்டம். தொடர்ந்து தீட்டு நண்பா உன் தூரிகையை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: M.N.Sulaiman (Qatar) on 02 June 2014
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35140

கவிமகனாரின் கவிதையை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன் நான்...! "என்ன நீ இழந்திடுவாய்?" எனும் இக்கவிதை சற்று சிந்திக்க கூடியவையாய் அமைத்திருந்தன...அதிலும்...,

" உலகத்தின் துணையிருந்தும்
இறைவனின் தயவின்றி
என்ன நீ சாதிப்பாய்?

உலகம் உனைக் கைவிடினும்
இறைவனது தயவிருந்தால்
என்ன நீ இழந்திடுவாய்? "

......சிந்திக்க கூடிய சீரிய வரிகள்.

கவிமகனே...! எங்கள் காயல்பதி தந்த தமிழ் மகனே...! நீர் வாழீர்...! மென்மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.

அட்மின் அவர்களே,

"பாதம்பட்டு சரசரக்கும்
பட்டுப்போன சருகளின்
சரக் சரக் ஓசையில்...."

சருகுகளின் என்பதே சரியானது...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved