1. எப்படி இப்படி நடந்தது? posted by:NIZAR (kayalpatnam) on 05 December 2014 IP: 117.*.*.* India | Comment Reference Number: 38361
முதலில் சகோதரர் சுபான் காகாவிட்கு தம்பியின் இதயம் நிறைந்த சலாதினை தெர்வித்து கொள்கிறேன். நீங்கள் எடுத்து இருக்கும் இந்த படத்தில் இரண்டுமே திங்க வேண்டிய அயிட்டங்கள்தான்.
பொதுவாக உங்கள் புகைப்படங்கள் கண்ணுக்கு விருந்தளித்து வருகிறது.அனால் இந்த படம் காயல்பட்டினம் கட்டகரையில் இப்படி ஒரு படம் கச்சிதமான டைமிங்கில் எடுக்க முடியுமா? என்பது ஆச்சரியமாக இருக்கிறது.அதற்காக இதை தவறான படம் என்று நான் சொல்ல வரவில்லை.அந்த அளவிற்கு பிரமாதமாக படம் எடுத்து உள்ளீர்கள்.
ஆனால் இதை போன்ற படங்கள் எடுப்பதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட நேரம்,முயற்சி அந்த நேரத்தில் ஏற்பட்ட அனுபங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். அப்பொழுதுதான் இந்த படத்தின் அருமையும் அதற்கான உங்கள் உழைப்பையும் உணர முடியும்.
சுபான் காக்கா அவர்களே நீங்கள் சாதாரண ஒரு புகைபடம் எடுக்கும் சாதாரன மக்களை போன்றவர் இல்லை. நீங்கள் இதில் வல்லுனராக வளம் வருகிறீர்கள். தொடர்ந்து இனிய படங்களால் இதயங்களை இனிமையாக்குங்கள். உண்மையிலே வியந்து போகி உள்ளேன். இந்த படம் எடுத்த அனுபவம் தருவீர்கள் என ஏங்கி உள்ளேன்.
3. Re:...கொக்கு மீனை தின்னுமா.. posted by:mackie noohuthmbi (kayalpaattinam) on 06 December 2014 IP: 180.*.*.* India | Comment Reference Number: 38363
மிக அருமையான shot ! நமதூர் கடற்கரையிலா இதை படம் பிடித்தீர்கள். உங்களுக்கு இந்த நேரம் எப்படி கிடைத்தது. கணினியிலே கண்ணையும் கருத்தையும் புதைத்துக் கொண்டிருக்கும் மானிட ஜென்மத்துக்கு இந்த ஐந்தறிவு ஜீவன் சொல்லும் கதை...
அல்லாஹ்வின் படைப்பு ஒவ்வொன்றுமே அற்புதமானது..சுபுஹானல்லாஹ்.
4. Re:... posted by:SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) on 06 December 2014 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38364
எல்லாப் புகழும் ஏகஇறைவன் ஒருவனுக்கே!
சாதாரணக் காலங்களில் நமதூரில் காண முடியாத கொக்குகள் சமிபத்தில் பெய்த மழை காரணம் தேங்கி நிற்கும் நீர் நிலை களில் வந்து அமர்து மீன் வேட்டையாடி வருகின்றது,குறிப்பாக USC மற்றும் கடற்க்கரை பகுதிகளில்,
இந்த நிலைப்படம் நமதூர் கடற்கரையில் கீறிக்குளம் கடலில் கலக்கும் இடத்தில எடுக்கப்பட்டது.காலையில் நடை பயிற்ச்சி சென்ற போது எடுத்தது. மொத்தம் எட்டு கிளிக் அதில் நான்கை தேர்வு செய்து காயல் பட்டினம்.காம்க்கு அனுப்பினேன் அதில் ஒன்று தான் இது.மற்ற படம்களை எனது முகப் புத்தகத்தில் காணலாம்.
புகைப் படம் எடுப்பது பொழுது போக்குதான் நான் தொழில் முறை கலைஜன அல்ல.
எனக்கு பிடித்த கட்சிகளை உங்களின் பார்வைக்கு தருகிறேன்.உங்களின் பாராட்டுக்கள் எனக்கு ஊக்கம் தரும்.அவை எனது ஆக்கங்களில் மிளிரும்.
நன்றி.
காயல்பட்டினம்.காம், தம்பி நிசார் ,மக்கி நூஹுதம்பி,ஆதம் சுல்தான் மற்றும் கண்டு ரசித்த அனைவர்களுக்கும்
detail , camera: nikon 5100, fl 300 iso 400,ap 5.6 ss 250.70-300
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross