1. வாராய்....நீ வாராய்....! போகுமிடம் வெகு தூரமில்லை வாராய்....நீ வாராய்...! posted by:ஹிஜாஸ் மைந்தன். (Kayalpatnam.) on 21 November 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 31598
அமீர் அப்பாஸ்... திறமையான திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல சிந்தனைவாதியும் கூட. தனது பேச்சாற்றலால் வாதத்திறமையால் என்னை வாய் பிளக்க வைத்தவர். நகைச்சுவை உணர்வும் அதே சமயம் ஆழமான சிந்தனையும் இவரது பிறவி குணம். அரை மணிநேரத்தில் ஆயிரம் விஷயத்தை அலசும் அசாத்திய மூளை. எழுத்திலும் சளைத்தவனில்லை என்பதை தம் சாட்டை வரிகளால் ஏகாதிபத்தியம் நம் வாழ்க்கைச் சூழலை குழி தோண்டி புதைத்த காரணங்களை புரட்டிப் போட்டு நமக்கு காட்டியுள்ளார்.
இயற்கையை நாம் தொலைத்துவிட்டு இன்னல் படுவதை இயம்பியுள்ளார். விளையும் பயிருக்கான உரங்களில் விஷம் தூவி மனிதவளத்தை மாண்டு போகச்செய்யும் மாபாதகச் செயலுக்கு மரண அடி இக்கவிதை. எழுத்து மேடை விழாவில் அவரது உரை மெல்லிய நீரோடையாய் வந்து திணறடிக்கும் காட்டு வெள்ளம் போல் மாறி சீறிப்பாய்ந்தை இன்னும் நினைத்துப் பார்க்கின்றேன்.
உமது ஆக்கங்கள் யாவும் உயிரோட்டம் உள்ளவை. அதை வெறுமொரு சிறப்புக் கட்டுரைக்குள் சுருக்கி தந்துவிட்டால் தனியாது எமது தாகம். எழுத்து மேடைப் பகுதியை உமது விரல் தீண்டட்டும். தொடராக அல்லது அவ்வப்போது தொட்டுக்கொள்ளவாவது உமது கட்டுரைகள் வர வேண்டும். யாம் பெற்ற இன்பம் இவ்வயகமும் பெற, வாருங்கள் வந்து தாருங்கள் எனும் வேண்டுதலை முன் வைக்கின்றேன். வாழ்த்துக்கள்...!
2. சலனம்! posted by:kavimagan (doha...qatar) on 21 November 2013 IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31601
காலை மணி ஆறு.. அமீர் அப்பாஸ் அவர்களின் கவிதையை
வாசித்து முடித்ததும் சினுங்கத் துவங்கியது மழை... ஏனோ
தெரியவில்லை. எப்போதும் இனிக்கும் மழை, இப்போது
வலிக்கிறது.
3. Re:...சிந்தையைத் தூண்டும் கவிதை posted by:Nooh KA (kayalpatnam) on 21 November 2013 IP: 116.*.*.* India | Comment Reference Number: 31613
நண்பர் அமீர் அப்பாஸ் உடைய ஆக்கம் வெறும் கவிதை அல்ல. தேச நலனில், சமூக நலனில், கலாச்சாரத்தில் ,பண்பாட்டில் மற்றும் இயற்கையை நேசிக்கின்ற அதன் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளக் குமுறலையே வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்நிய சக்திகளின் அடிமைகளாக இருக்கும் நம் மேல்மட்ட கீழ்தர அரசியல்வாதிகள், அவர்களின் கைப்பாவை ஊழல் அதிகாரிகள் மற்றும் கார்பரேட் நிறுவன கொள்ளை (கொல்லை) வியாபாரிகள் போன்றோர்களை மக்கள் உதாசீனப்படுத்தினாலே நம் இந்தியாவும் வளரும், நம் மக்கள் வாழ்வும் உயரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross