Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:27:30 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbuthahir
PlaceHoly macca
Approved Comments18
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
18
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
எழுத்து மேடை: அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
“தவளை துள்ளல்” “கழுகு விழுதல்”
posted by Abuthahir (Holy macca) [21 December 2015]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 42522

சிரித்துக்கொண்டே கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்த என்னை, சிந்திக்க வைக்கும் பத்தி நெருங்கியதும், தற்காலிகமாக சிரிப்பை நிறுத்திவிட்டுப் படிக்கத் துவங்கினேன். காரணம், சகோதரர் ஸாலிஹின் ஆக்கத்தில் இடையிடையே நிறைவாக இருக்கும் நகைச்சுவைக்கு சிரிப்பு தேவைப்படும் என்பதற்காக (அதைப் பற்றி கீழே பேசுவோம்...)

“வெறுக்கத்தக்க காரியங்களைக் கண்டால் கையால் தடு! முடியாவிடில் நாவால் தடு! அதுவும் முடியாவிடில் மனதால் ஒதுக்கி விடு! இதுவே ஈமானின் கடைசி நிலை” என்ற பூமான் நபியின் பொன்மொழிக்கிணங்க, அந்தந்த காலத்திற்குத் தேவைப்படும் ஆழிய கருத்துக்களைப் பொதிந்த கட்டுரையைத் தர இவர் வல்லவர்.

“சொலல்வள்ளன் சோர்விலன் அஞ்சான் இவனை
இகதெள்ளல் யாருக்கும் அரிது”

எனும் வள்ளுவனின் குறட்பாவுக்கு வடிவம் அமைப்பது போல் இவரது ஆக்கங்கள் அமைவதுதான் ஒரு வியப்பு.

“கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடுத்து விடாதே!” என்று கூறுவர். இவரது அனைத்துப் படைப்புகளும் தேவைக்கதிகமாக வார்த்தைகள் இன்றி வெளிவருவதால்தான், இவை கரும்பலகை எழுத்தல்ல; கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டியவை ஆகும்.

“தவளை துள்ளல்” – கம்யூட்டரில் ஒரு folderஇலிருந்து மற்றொரு folder திறப்பதைப் போன்று, இவரது துள்ளல் நடை.

“கழுகு விழுதல்” – எதைச் சொல்ல வந்தாரோ அந்த இடத்திற்குச் சரியாகச் சென்று விழுதல் போன்றவை அழகிய போங்காக இதில் அமைகிறது. மேலும், ‘அன்னைத் தமிழ்’, ‘அமுதத் தமிழ்’, ‘பிள்ளைத் தமிழ்’ என (தன் தாய், தன் மனைவி, தன் மக்கள்) அனைத்தும் பேசியவையும், அதற்கு பதில் சொன்னவையும் அர்த்தம் பொதிந்ததாக இருந்தது. ஆக மொத்தத்தில், கட்டுரையின் துவக்கத்தில் ‘ஒரு பொருளை’ மட்டும் ‘விலக்கி’ விட்டு, மற்ற அனைத்தையும் ‘விளக்கி’யிருக்கிறார்’ இதன் ஆசிரியர்.

“அவங்க அப்படி, நாங்க இப்படி” என்று முடித்துவிட்டுப் போகும் ஆசிரியர், ஆடுகளுக்குப் புல் வைக்கச் சென்றார். மீதம் வைத்த சிரிப்பை இதில் செலுத்தலாம் என்றெண்ணியபோது, கடந்த எனது விடுமுறைக் காலத்தில் அவரைச் சந்தித்த ஒருவருக்கு அவர் சொன்ன பதில் என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது. அவரது சொற்களிலேயே அதைச் சொல்கிறேன்...

“ஆட்டை ரோட்டில் நான் அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் என்னைப் பார்த்து, என்ன ஸாலிஹ்! நீ எப்ப கோனார் வேலைய கையில எடுத்தா...?” என்று கேட்டதற்கு, என்ன செய்ய...? கோனார் ரஸூலுல்லாஹ்வின் வேலையைக் கையில் எடுத்துக்கிட்டார்... நாம விட்டுட்டோம்... என்று கூறினேன்.”

இவ்வாறான அவரது உரையாடல்தான் எனக்கு தற்போது நினைவுக்கு வருகிறது. (ஆஹா... அடுத்த கட்டுரைக்கு தலைப்பு கொடுத்துட்டேனே...?)

“ஸாலிஹ் காக்கா... மன்னிக்கனும்! கருத்தெழுத சற்று தாமதமாகிவிட்டது...”

“ஆமா... நீ எல்லாத்துலயுமே தாமதம்தான்...! இந்த முறை ஊருக்கு வரும்போதாவது எதிர்பார்க்கிறேன் – தாமதமில்லாம... - என்னைச் சந்திப்பாயா என்று!“ சொல்வதன் பொருள் என் காதில் விழுகிறது.

எது எப்படியோ, ‘தி இந்து’ செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரைக்கு கருத்து எழுதனும்! நான் கிளம்புறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ப்ளாக் பெல்ட் நோம்பாளி! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாசஞ்சர் அல்லது விரைவு ரயில்
posted by Abuthahir.mik (Holy Makkah Mukarramah) [03 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41205

கண்டதைப் படித்தால் பண்டிதர் ஆகலாம் என்பார்கள். அதனை மனதிற்கொண்டு, ‘கருப்பு பெல்ட்’ என்ற தலைப்பில் சொடுக்கி, ஏதோ கராத்தே பற்றித்தான் சொல்லப் போகிறார் என்று நினைத்துப் பார்த்தால், காலத்தின் கோலத்திற்கேற்ப அழகான கட்டுரையை - கருத்துக்களைப் பதிவு செய்துள்ள வாசகர்கள் சொன்னது போன்று, தனக்கே உரிய குசும்பு பாணியில் தந்துள்ளார் ஆசிரியர்.

“நீங்களெல்லாம் எதை வைத்து நோன்பு நோற்கிறீர்கள்?” என்று ஒருவர் கேட்க, சிறியவர் – “மீன், இறைச்சி, இறால் இவற்றுடன் சோறு” என்று கூற, அதற்கு அவர், “அதே போன்றுதான் நானும் நோன்பு நோற்கிறேன்... ஆனால் காலையிலேயே வயித்தைப் பிடுங்க ஆரம்பித்துவிடுகிறது” என்று சொல்லிவிட்டு, “அதெல்லாம் கூட பரவாயில்லப்பா... புகையை விட்டு விட்டு இருக்கும் எனக்கு அதை விட்டு தான் என்னால இருக்கவே முடியலே... நோன்பு துறந்துவிட்டு ஐந்து அல்லது ஆறு பாசஞ்சர் அல்லது விரைவு ரயில் ஓட்டிவிடுவேன்” என்று சொன்ன ஒருவரின் உரையாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.

நவீன கருவிகள் என்ற பத்தியைப் படிக்கும்போது ஒருவகையான ஓட்டம் மனதில். (விபரம் இல்லை!).

அரபி மாதங்களின் பெயர்களைத் தெரிந்துகொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என்பதை கட்டுரை ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது. அழகான நடையில், ஆரோக்கியமான வாழ்வியலை எடுத்துச் சொல்லும் இக்கரங்களின் பணிகள் இன்னும் தொடர வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
.اللهم اغفر له وارحمه
posted by அபூ தாஹிர்.mik (புனித மக்கா ) [16 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40175

வரும் வாரம் புனித ரஜப் மாதம் துவங்க உள்ளது. நமதூர் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வைபவங்களும் இன்ஷா அல்லாஹ் துவங்க உள்ளது. இத்தருணத்தில், மர்ஹூமாகிவிட்ட, இறையருளை பெற்று விட்ட இந்த சங்கைக்குரிய பெருந்தகையை பற்றி கசிந்த கண்களோடு ஒரு தகவல்,

புனித ரஜப் மாதம் அதிகாலை தஹஜ்ஜத் வேளையில் மஜ்லிஸிற்கு வருகை தந்து, தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றி விட்டு, விரிப்புகள் விரித்து, நறுமண பொருட்கள், கிதாபுகள் அனைத்தையும் எடுத்து வைத்து மஜ்லிஸை தயார் செய்ததற்கு பிறகு, அருகாமையில் இருக்கும் மஹான் பெரிய முத்துவாப்பா ஒலியுல்லாஹ் அவர்களின் ஜியாரத்தை முடித்து விட்டு, பள்ளியில் சுபுஹு தொழுதுவிட்டு மீண்டும் மஜ்லிஸிற்கு வருகை தந்து உலமாக்கள், முதலில் புனித புஹாரி ஷரீப் ஓதியதற்கு பிறகு இவர்களும் ஓதிவிட்டு செல்வார்கள். இப்படி ரஜப் பிறை ஒன்று முதல் முப்பது வரையிலும் தொய்வின்றி செய்து வருவார்கள். இவ்வாறு சுமார் 20 ஆண்டு காலங்கள் இப்பணியை தன் பணியாக செய்து வந்ததும் குறுப்பிடத்தக்கது.

"இது என்னுடைய கிரந்தம்" என்று ஏந்தல் நபிகள் நாயகம் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்ன இந்த புனித சஹீஹுல் புஹாரி ஷரீபின் பொருட்டல் வல்ல ரஹ்மான், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்துவிட்ட பாவங்கள் யாவையும் மன்னித்து, அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி வைத்து, சுவனத்து பட்டாடைகளை வழங்கி அவர்களை கண்ணியப்படுத்துவானக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் ஷுஅய்ப் நூஹ் ஆலிமின் தாயார் காலமானார்! ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மூத்த தூண் சாய்ந்து விட்டது.
posted by Abuthahir.mik (Holy mecca) [14 August 2014]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 36426

நமதூரின் வரலாறுகள்,வலிமார்களின் சரித்திரங்கள், நமதூர் பெரியவர்கள் பற்றிய குறிப்புகள். திருமண விழாக்களில் தேவைப்படும் அந்த குடும்ப பாரம்பரியம் பற்றிய தகவல்கள், ஏன்? மரண அறிவிப்பு சொல்லுவதற்கு கூட தேவைப்படும் குடும்ப உறவு முறைகளை கேட்டுத் தெரிந்துக் கொள்ள வருபவர்களுக்கு தேவைப்படும் குறிப்புகளின் அளவை விட அதிகமாகவே சொல்லி கொடுப்பதை நானும் பார்த்து இருக்கிறேன்.

மார்க்க சம்பந்தமாக பேசும் போது கடிகார முள் அவர்களை எச்சரிப்பதே இல்லை. ஆனாலும் அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கும் மற்றவர்கள் எப்போது முடியும் என்று கேலியாக கேட்டால் அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்லும் பதில்(சிலருக்கு மௌலிது ஓதும் நேரம், சிலருக்கு மௌலிதும்,ஹிகாயத்தும் ஓதும் நேரம், சிலருக்கு அதோடு பெரிய,சிறிய துஆ ஓதும் நேரம்) என்று நான் நேரம் குறித்து இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.

வீட்டுக்கு வருபவர்களை நன்கு உபசரித்து அவர்களிடம் துஆ செய்யுங்கள் என்று பலமுறை சொல்லுவதோடு,நிறைவாக அவர்களுடன் ஸலாம் கொடுத்து, அவர்கள் விடை பெறும் போது கூட மீண்டும் ஒரு முறை துஆ செய்யுங்கள் என்று சொல்லி விடை பெறும் இவர்கள் இன்று நம்முடன் விடை பெற்று வல்லோனின் கட்டளைக்கு இணங்க இறையடி சென்று விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ்,

எனது வப்பிச்சா மர்ஹூமா முத்து ஆஸியா உம்மா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக... ஆமீன்.

வல்லோனின் கட்டளைக்கு இணங்க சபூர் செய்தவனாக,

Mik. செய்யிது அபூதாஹிர்
புனித மக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயலர் முதலிடம் பெற்று சாதனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றி பயணம் நில்லாமல் தொடரட்டும்..
posted by அபூதாஹிர் M.I.K. ( புனித மக்கா) [24 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36094

வெற்றி பெற்ற ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீக்கு மனமாந்த வாழ்த்துக்கள். தம்பி இஸ்ஸத் மக்கிக்கு இந்த வெற்றி முதல் முறை அல்ல. அவர் ஓத துவங்கிய முதலே சாதனை படைத்து வருகிறார். மத்ரஸா ஹாமிதிய்யாவில் நடைபெறும் அனைத்து ஹிப்ழு தேர்விலும், போட்டியிலும் முதலிடம் பெறுவார் .

ஸனது பெரும் வருடத்தில் 13 முறை (தவுர்) குர்ஆனை மீள்பார்வை செய்து அந்த வருடத்தில் அதிக படியான தவுர் எண்ணிக்கை அடிப்படையிலும் சாதனை புரிந்தவர்.

தான் ஸனது பெற்ற 2004ம் வருட கல்வியாண்டில் அனைத்து தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவ்வருடத்தின் முதல் மாணவராக ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்றார்.

மேலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஹிப்ழு போட்டியிலும் வெற்றி வாகை சூடி இருக்கும் இவர், தற்போது நாடு கடந்து சென்று முதலிடம் பெற்ற செய்தி ஊருக்கும், மத்ரஸாவிற்கும் பெருமையை சேர்க்கிறது. அவர் சார்ந்துள்ள மத்ரஸாவில் நானும் ஓதியவன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல ரஹ்மான் அவரது நினைவாற்றலை இன்னும் அதிக படுத்தி வைப்பானாக!ஆமீன்!!

ஹாஃபிழ்கள் இல்லாத இல்லமே இல்லை என்ற பழைய நிலை நமதூரில் வர வேண்டும். என்ற சமூக ஆர்வலர் அல்ஹாஜ் மக்கி நூஹு தம்பி அவர்கள் போன்ற கருத்தாளர்களின் ஆசையை வல்ல ரஹ்மான் கபூல் செய்வானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நஸூஹிய்யா மத்ரஸா சார்பில், டிச. 28, 29, 30 தேதிகளில் தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டி! முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சிறு விளக்கம்
posted by அபூதாஹிர் (புனித மக்கா) [23 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30938

போட்டிகள் சிறப்பாக நடந்தேற வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! ஆமீன்!! சகோதரர் முஸ்தபா அவர்களுக்கு... நடத்தும் இயக்கம்(மத்ரஸத்துன் நஸூஹிய்யா) ஏற்றுள்ள கொள்கை எதுவோ அந்த கொள்கை உடையவர்களாகவே போட்டியாளர்களும் இருக்க வேண்டும் என்பதில் என்ன தவறு?. குர்ஆனில் பிழை இருக்கிறது என்று மற்ற கொள்கை உடையவர்கள் விவாதம் செய்யும் இக்காலத்தில் கொள்கைகளைப் பற்றி குறிப்பிடுவது காலத்தின் அவசியம் தானே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1434: கல்கத்தா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மகிழ்ச்சியுடன்....
posted by Abuthahir.mik (Holy makkah) [10 August 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29381

எனது அருமை நண்பர் ஹாபிழ் நஸீம் காதர் சாஹிப் அவர்களை பல முறை மிஹ்ராபில் பார்த்து இருக்கிறேன். முதல் முறை மிம்பரில் பார்த்ததில் மிக்க சந்தோஷம். அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனத்தட்டில் துயர் கொட்டி மறைந்த அப்பா
posted by செய்யிது அபூதாஹிர் ( புனித மக்கா ) [12 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28611

1. குருவித்துறை பள்ளியின் இமாமாக திகழ்ந்தர்கள்.

2. மஜ்லிசுல் புஹாரி ஷரீபின் நிர்வாகி.

3.மதரஸா ஹாமிதிய்யாவின் நிர்வாகி.

4. முஹல்லாவில் பல உலமாக்கள், ஹாபிழ்கள் உருவாக காரணமானவர்கள்.

5.ஏழை மாணவர்களை தன்னுடன் வைத்து கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கி அவர்களை ஹாபிழ்களாக உருவாக செய்வார்கள்.

6. சற்று பார்வை குறைந்த மாணவர்களை ஹாபிழ்களாக உருவாக்கிய பெருமை அவர்களையே சாரும்.

7. குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை துவக்கி, நிறைவு செய்தல் என்பதில் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம்.

8. பழைய பதங்கள், அனைத்து வலிமார்களின் மௌலிது ஷரீப்கள், மர்ழியா அனைத்தும் ஓதுவதில் சிறந்து விளங்கினார்கள்.

9. பழைய பாரம்பரியங்கள், பண்பாடுகளை சொல்லி தருவதில் வல்லுனராக திகழ்ந்தர்கள். இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்ட பெருமகனாரை இழந்து இருக்கிறோம். வல்ல ரஹ்மான் அவர்களின் கபுரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி வைத்து இருக்கிறான். ஒளிமயமாக்கி வைப்பானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
.أللهـــــــــم اغفـــرلـه وارحمـــه
posted by Abuthahir.mik (Holy mecca) [13 September 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22124

أللهـــــــــم اغفـــرلـه وارحمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனப் பதியில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை கொடுத்து அருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிறந்தது ‘நிகழ்காலம்’! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abuthahir.mik (Holy mecca) [28 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21555

நிகழ்காலம் பத்திரிக்கையில் அப்படி என்ன இருக்கிறது? என்று ஒருவன் வினா தொடுத்தால், அதில் என்னது இல்லை? என்பதே விடையாக சொல்ல இருக்கும்.

பலநூறு சந்தாதாளர்களில் நானும் ஒருவனாய் பத்திரிக்கையை எதிர் பார்கிறேன் ஆவலுடன்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
18
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved