Current Kayalpatnam Time
7:34:22 PM
Kayal on the mobile - Kayalpatnam ... anywhere, anytime! 11/21/2017 7:34:22 PM
Tuesday
November 21, 2017
datedivider
Dul Haj 91, 1438
முகப்பு பக்கம் தலைப்புச் செய்திகள் செய்திகளை தேட வானிலை FONT HELP
Prayer timing for Kayalpatnam
சுபுஹுலுஹர்அஸர்மஃரிப்இஷா
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:20
மறைவு17:54மறைவு20:17
:: விரிவான செய்தி
Previous News ItemNext News Item

News ID # 19690Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 13 , 2017
பாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்!
This page has been viewed 555 times

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். விரிவான விபரம்:-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் THE BROTHERS UNION நிறுவனத்தின் பவள விழாவை முன்னிட்டு, அதன் சார்பில் – மாநில அளவிலான கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் இம்மாதம் 08, 09 ஆகிய இரு நாட்களில் நடத்தப்பட்டன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற இப்போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவியரும் பங்கேற்றனர். ஓவியப் போட்டியில், அப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எஸ்.எல்.ஜுலைஹா அஃப்ரா முதலிடத்தை வென்றுள்ளார். இதற்காக அவருக்கு விருதும், 1500 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

சாதனை மாணவியை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகரும், ஆசிரியையரும் பாராட்டினர்.

Previous News Item
Next News Item
செய்தியாளர்கள்/குழு எம்மை பற்றி தொடர்புக்கு இதர இணையதளங்கள்
Kayal on the Mobile is the mobile version of Kayal on the Web (www.kayalpatnam.com). It is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved
website traffic | advertisement tariff | KOTW over the years